பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் வாகன கலெக்ஷன்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று முதல் அடுத்தக் கட்ட பரபரப்புக்கு செல்கின்றன. ஆம், இன்று முதல் கால் இறுதிப் போட்டிகள் துவங்குகின்றன. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஜெர்மனி - பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் பிரேசில் நாட்டு அணியும், கொலம்பியாவும் மோதுகின்றன.

பிரேசில் கால்பந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான நெய்மார் ஜூனியர் காயம் காரணமாக பயிற்சிகளை சரியாக மேற்கொள்ளவில்லை. நெய்மாருக்கு ஏற்பட்ட காயம் விரைவாக குணமடைந்து அவர் இயல்பு நிலைக்கு வந்துள்ளதாக பிரேசில் கால்பந்து அணியின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனால், இன்று நடைபெறும் கால் இறுதிப் போட்டியில் நெய்மார் பங்கேற்பார் என்று நம்பிக்கையும், பிரார்த்தனைகளுடன் பிரேசில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மிக இளம் வயதில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ள நெய்மார் ஜூனியரின் வாகன கலெக்ஷனும் ஆச்சரியப்படுத்துகிறார். உலகின் கவனத்தை தம் பால் ஈர்த்திருக்கும் நெய்மார் ஜூனியரின் விலையுயர்ந்த கார்களுடன் நின்றுவிடவில்லை. அந்த பட்டியல் எங்கு சென்று முடிகிறது என்பதை ஸ்லைடரில் வந்து பாருங்கள்.


நெய்மார் ஜூனியர்

நெய்மார் ஜூனியர்

பிரேசில் கால் பந்து அணியின் தூணாக திகழும் நெய்மார் ஜூனியர் 1992ம் ஆண்டு பிப்ரவரி 5ந் தேதி பிரேசில் நாட்டின் மோகி தாஸ் க்ரூஸஸ் என்ற இடத்தில் பிறந்தவர். இளமையிலிருந்து கால் பந்தில் நாட்டம் செலுத்திய அதே அளவுக்கு வாகனங்கள் மீது அதிக பிரியம் வைத்திருந்தார். அதன் வெளிப்பாடே இந்த நீளமான பட்டியல்.

 ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி

ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி

ஜெர்மன் எஞ்சினியரிங் வலிமைக்கு சான்றாக விளங்கும் ஃபோக்ஸ்வேகன் டூரக் வி8 டிஎஃப்எஸ் மாடல் எஸ்யூவியை நெய்மார் ஜூனியர் வைத்துள்ளார். பயிற்சிகளுக்கு செல்லும்போது இந்த எஸ்யூவியை பயன்படுத்துவதை விரும்புகிறார்.

 ஆஃப் ரோடு பிரியர்

ஆஃப் ரோடு பிரியர்

பயிற்சி இல்லாத நேரங்களில் நண்பர்களுடன் டூரக் எஸ்யூவியை எடுத்துக்கொண்டு ஆஃப் ரோடு சாகசங்கள் செய்வது நெய்மாருக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று.

ஆடி கார்

ஆடி கார்

நெய்மார் ஜூனியரிடம் ஆடி ஆர்8 ஜிடி ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றும் உள்ளது. பார்ட்டிகளுக்கு செல்லும்போது இந்த கார்களில்தான் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆடி காரின் பெருமைகள்

ஆடி காரின் பெருமைகள்

நெய்மார் வைத்திருக்கும் ஆடி ஆர்8 ஜிடி மாடலில் மொத்தமாக 333 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த காரில் 552 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.2 லிட்டர் எஃப்எஸ்ஐ குவாட்ரோ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் கடந்துவிடும். மணிக்கு 320 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

போர்ஷே பனமிரா

போர்ஷே பனமிரா

நெய்மார் ஜூனியரிடம் போர்ஷே பனமிரா கிரான் டூரிஷ்மோ கார் ஒன்றும் உள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு இந்த காரில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர்

அதிக பிஸியான கால்பந்து நட்சத்திரமாக திகழும் நெய்மார் ஜூனியர் குறித்த நேரத்தில் செல்வதற்காக சொந்த ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கி வைத்துள்ளார். சிலவேளை பயிற்சிகளுக்கு ஹெலிகாப்டரில் செல்வது வழக்கம்.

ஆடம்பர படகு

ஆடம்பர படகு

நீண்ட கடற்பரப்பை கொண்ட பிரேசில் நாட்டில் ஏராளமானோர் சொந்த படகு வைத்திருப்பது சகஜம். அந்த வகையில், ஓய்வுநேரத்தை கழிப்பதற்காக ஆடம்பர படகு ஒன்றையும் வாங்கி வைத்துள்ளார். பிரேசில் அணி உலக்கோப்பையை வென்றால் இந்த ஆடம்பர படகில் நிச்சயம் ஒரு பார்ட்டி நடக்கும் என ஊடகங்கள் குறிப்பிட்டு கூறியிருக்கின்றன.

Most Read Articles
English summary
Neymar Jr is passionate about his Football, however, he is also passionate about the motor vehicles that he possesses. He has a long list of vehicles, we will today show you a few of his most cherished vehicles. You are surely in for a surprise though, as none of us could believe the vehicles Brazil's Neymar Jr owned. We can beat today if Brazil wins, Neymar Jr could increase his car collection.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X