நிசான் படகு காரில் ஓர் சிலிர்ப்பான பயணம்!!

இங்கிலாந்து மார்க்கெட்டில் புதிய நிசான் நோட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய காரின் அறிமுக விழாவை சற்று வித்தியாசமாக ஏற்பாடு செய்திருந்தது நிசான்.

இங்கிலாந்தின் வின்ஸ்டர் பகுதி அருகிலுள்ள இடோன் பள்ளியின் ஏரியில் அமைந்திருக்கும் படகு மையத்தில் இந்த விழா நடைபெற்றது. விழாவில் புதிய நோட் கார் அறிமுகம் செய்ததோடு மட்டுமின்றி, மிதவையில் இணைக்கப்பட்ட நிசான் நோட் காரையும் அந்த ஏரியில் படகு போன்று செலுத்தும் வாய்ப்பையும் நிசான் வழங்கியது.

நோட் போட்

நோட் போட்

நோட் போட் என்று பெயரிடப்பட்ட அந்த படகு காரில் எஞ்சின் இல்லாத நோட் கார் மிதவையுடன் இணைக்கப்பட்டிருந்தது.

விசால கதவுகள்

விசால கதவுகள்

துடுப்பு போடுவதற்கு ஏதுவாக பின்புற இருக்கைகள் 90 டிகிரி கோணத்தில் விரியும் அளவுக்கு மாற்றப்பட்டிருந்தது.

 ஸ்டீயரிங் அமைப்பு

ஸ்டீயரிங் அமைப்பு

மிதவை கட்டுப்படுத்தும் வகையில், காரின் ஸ்டீயரிங் அமைப்பு இணைக்கப்பட்டிருந்தது.

 கேமரா உதவி

கேமரா உதவி

இந்த படகு காரின் முக்கிய விசேஷம் காரை சுற்றிலும் கண்காணித்து ஓட்டும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததுதான். முன்புறம், பின்புறம், பக்கவாட்டு கதவுகளில் தலா ஒரு கேமரா வீதம் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

பார்க்கிங்

பார்க்கிங்

இந்த கேமராக்கள் உதவியுடன் படகு காரை சென்ட்ரல் கன்சோலில் இருக்கும் திரையை பார்த்துக் கொண்டே பின்புறமாக துல்லியமாக செலுத்த முடியும்.

 டிசைனர்

டிசைனர்

டாப் கியர் இதழின் நீரில் செல்லும் கார்களின் திட்டங்களை மேற்கொண்டு மைக் ரியான் இந்த படகு காரையும் வடிவமைத்துள்ளார்.

ஒலிம்பிக் வீராங்கனைகள்

ஒலிம்பிக் வீராங்கனைகள்

கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் துடுப்பு படகு போட்டியில் தங்கம் வென்ற ஹெலன் க்ளோவர் மற்றும் சோஃபி ஹாஸ்கிங் மற்றும் இந்த ஆண்டு துடுப்பு படகில் உலக சாம்பியனான பாலி ஸ்வான் ஆகியோர் இந்த படகு காரை துடுப்பு போட்டு இயக்கினர். மேலும், இது ஒரு புதுமையான அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டனர்.

 2 நாள் நிகழ்ச்சி

2 நாள் நிகழ்ச்சி

இரண்டு நாட்கள் நடந்த இந்த படகு கார் நிகழ்ச்சியில் டாப் கியர், ஆட்டோகார் மற்றும் ஆட்டோ எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ஆட்டோமொபைல் இதழ்களின் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு படகு காரை ஓட்டி பார்த்தனர்.

கைமேல் பலன்

கைமேல் பலன்

இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடல் நிசான் நோட் காருக்கு இதுவரை 3860 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு கார் வீடியோ

நிசான் படகு காரின் வீடியோவை கண்டு ரசியுங்கள்.

Most Read Articles
மேலும்... #nissan #four wheeler #நிசான்
English summary
UK’s motoring press descended on Eton to witness the new Nissan Note being launched in unusual fashion. Not only were guests able to test drive the practical supermini, but they were invited to take a ride in a floating version of the same car. Dubbed ‘the Note Boat’, it had been equipped with a rowing.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X