லம்போர்கினி , ஸ்விஃப்ட் டிசையர் கார்களுக்குள் போட்டா போட்டி; உயிரை விட்ட ஈக்கோ கார் ஓட்டுநர்..!!

Written By:

டெல்லி நொய்டா அதிவேக சாலையில் லம்போர்கினி காரை முந்த முயற்சி செய்த ஸிவிஃப்ட் டிசையர் காரால் விபத்து ஏற்பட்டு, மாருதி ஈக்கோ காரின் ஓட்டுநர் உயிரழந்தார்.

நொய்டா அதிவேக சாலையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவின் மூலம் பதிவான காட்சிகளை வைத்து, இந்த விபத்து எப்படி நடந்தது என்பதற்கான காரணத்தை டெல்லி காவல்துறை கண்டறிந்துள்ளது. 

அந்த வீடியோவில் பதிவாகி இருந்த காட்சிகளின் படி, சாலையில் சென்று கொண்டு இருந்த லம்போர்கினி காரை மாருதி ஸ்விஃப்ட் டிசையர் கார் ஒன்று முந்த தீவிரமாக முயற்சித்தது.

அப்போது திடீரென ஓட்டுநர் லம்போர்கினியை இடப்பக்கமாக திருப்ப, மாருதி ஸ்விஃப்ட் டிசையர் கார் ஓட்டுநர் கட்டுபாட்டை இழந்ததாக போலீசார் ஊகிக்கின்றனர்.

Jeep Compass Full Details In Tamil - DriveSpark தமிழ்
நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இளைஞர் பலி..!!

இதற்கிடையில், இடதுபக்கத்தில் மாருதி ஈக்கோ கார் பின்னே வருவதை பார்த்த லம்போர்கினியின் ஓட்டுநர் காரின் திசையை மாற்ற முயற்சித்துள்ளார்.

ஆனால் அதற்குள் மாருதி ஈக்கோ கார் லம்போர்கினியின் பின்பக்கத்தில் மோதி, மேலும் கீழுமாக உருண்டு சென்று, சாலையில் இருந்து வெளியேறி காட்டுப்பகுதிக்குள் வீசப்பட்டு நின்றது.

விபத்து நடந்தற்கான வீடியோ... கீழே

இதனால் மாருதி ஈக்கோ காரை ஓட்டி வந்த இளைஞர் படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரழந்தார்.

சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து வந்த காவலர்கள், ஈக்கோ காரின் பதிவு எண்ணை வைத்து, உயிரழந்த இளைஞரின் பெயர் ஆசாத் அஹமத் என்றும், அவர் டெல்லி மந்தாவாலி பகுதியை சேர்ந்தவர் என்றும் கண்டறிந்தனர்.

இதற்கிடையில் விபத்தை ஏற்பட்டுத்தியவர்களுள் ஒருவரான ஸிவிஃப்ட் டிசையர் ஓட்டுநர் மோஹ்னிஷ் கான் என்பவரை கண்டறிந்து, டெல்லி காவல்துறை கைதுசெய்துள்ளது.

மேலும், லம்போர்கினி காரை குறித்த எந்த தகவலும் காவலர்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் அந்த காரை ஓட்டி வந்தது யார் என்பது தொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

லம்போர்கினி, ஸ்விஃப்ட் டிசையர் கார்களுக்குள் ஏற்பட்ட பந்தய போட்டியில் விபத்து ஏற்பட்டு மாருதி ஈக்கோ கார் சாலையில் உருண்ட போது,

அதே சாலையில் முன்ன சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது உராய்ந்து சென்றது. நல்லவேளையாக அந்த வாகன ஓட்டி பைக்கை சுதாரித்து ஓட்டி தப்பித்து விட்டார்.

அதே சாலையில் முன்னே சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது உராய்ந்து சென்றது. நல்லவேளையாக அந்த வாகன ஓட்டி பைக்கை சுதாரித்து ஓட்டி தப்பித்து விட்டார்.

இலையேன்றால், ஈக்கோ கார் சுழன்ற வேகத்தில் அந்த பைக்கும் தூக்கி வீசப்பட்டு, இருசக்கர வாகன ஓட்டிக்கும் ஆபத்து நேர்திருக்கும்.

சாலை விதிகளை ஒழுங்காக மதிக்காத காரணத்தினால் தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக டெல்லி காவல்துறை தெரிவிக்கிறது.
சாலையில் உள்ள வெள்ளை கோடுகளை மதிக்காமல் செல்வது, அதிவேகமாக வாகனங்களை இயக்குவதும் இதுபோன்ற விபத்திற்கு காரணமாகி விடுகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Noida Expressway Car Crash Involving Dzire and Lamborghini Leaves one Dead. Click for Details...
Story first published: Monday, July 10, 2017, 13:41 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos