விற்பனைக்கு வந்த உலகின் பிரபலமான நர்பர்க்ரிங் ரேஸ் டிராக்!

By Saravana

பொருளாதார நெருக்கடி காரணமாக உலகின் மிகப் பிரபல ரேஸ் டிராக்குகளில் ஒன்றான நர்பர்க்ரிங் ரேஸ் டிராக் விற்பனைக்கு வந்துள்ளது. இது ரேஸ் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப் பழமையான ரேஸ் டிராக்குகளில் ஒன்று நர்பர்ரிங். ஜெர்மனியில் இருக்கும் இந்த ரேஸ் டிராக் வீரர்களுக்கு மிக சவாலானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் இந்த ரேஸ் டிராக்கை விற்பனை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Nurburgring Race Track

165 மில்லியன் டாலர் விலையில் இந்த ரேஸ் டிராக்கை விற்பனை செய்ய இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த ரேஸ் டிராக்கை வாங்குவதற்கு 5 முதல் 10 பேர் முன் வந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 1925ம் ஆண்டு முதல் 1927ம் ஆண்டு வரை 25,000 பணியாளர்களின் உழைப்பில் இந்த ரேஸ் டிராக் கட்டப்பட்டது.

இந்த ரேஸ் டிராக்கின் ஒரு பகுதியில் பொதுமக்களும் பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு. ஆனால், இதற்கு கட்டணமாக 26 யூரோக்கள் வசூலிக்கப்படுகிறது. இந்த ரேஸ் டிராக் விற்பனைக்கு வந்திருப்பது வீரர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Most Read Articles
English summary
The legendary German racetrack, Nürburgring is officially up for sale, and the asking price is $165 million. The latest news comes about an year after the management filed for bankruptcy. The government owned world famous race track will go into the hands of a private owner if the sale goes through. Mr. Jens Lieser has been announced as the state-appointed liquidator to handle the matter
Story first published: Friday, March 22, 2013, 16:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X