உலகின் பழமையான வெஸ்பா ஸ்கூட்டர் ஏலத்திற்கு வருகிறது

உலகிலேயே பழமையான வெஸ்பா ஸ்கூட்டர் ஏலத்தில் விடப்படுகிறது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

இந்தியாவில், கடந்த 1950ம் ஆண்டுகளில் இருந்து 1980ம் ஆண்டுகளின் இறுதி வரை இருசக்கர வாகனங்களில் ஸ்கூட்டர்கள் தான் கோலோச்சி வந்தது. அப்போது வெஸ்பா ஸ்கூட்டர் மிகவும் பிரபலமான ஒரு பிராண்டாகும். இக்காலத்து ஹார்லி டேவிட்சன் பைக்குகளைக் காட்டிலும் அதிகபட்ச புகழைப்பெற்று வலம் வந்தன வெஸ்பா ஸ்கூட்டர்கள்.

ஏலத்திற்கு வரும் உலகின் பழைய வெஸ்பா ஸ்கூட்டர்

இத்தாலியைச் சேர்ந்த பியாஜியோ நிறுவனத்தால் 1946ஆம் ஆண்டு முதல் வெஸ்பா ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. உலகம் முழுவதும் பிரபலமடைந்த வெஸ்பா ஸ்கூட்டர்கள் அக்காலத்து சினிமா கதாநாயகர்களின் வாகனமாகவும் வலம் வந்து புகழ் பெற்றன.

ஏலத்திற்கு வரும் உலகின் பழைய வெஸ்பா ஸ்கூட்டர்

தற்போது வெஸ்பா ஸ்கூட்டர்கள் நவீன ரகமாக தயாரிக்படுகின்றன. ஆயினும் ஆரம்ப காலத்தில் வெஸ்பாக்கள் வெறும் கைகளாலேயெ உருவாக்கப்பட்டன.

ஏலத்திற்கு வரும் உலகின் பழைய வெஸ்பா ஸ்கூட்டர்

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் போர் விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட பியாஜியோ நிறுவனம், போருக்குப் பின்னர் ஜெர்மனியின் ஆதிக்கத்துக்குக் கீழ் இத்தாலி வந்ததால் விமானங்கள் தயாரிப்பை விட்டுவிட்டு வெஸ்பா ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கியது.

ஏலத்திற்கு வரும் உலகின் பழைய வெஸ்பா ஸ்கூட்டர்

1946ஆம் உற்பத்தியைத் தொடங்கிய பியாஜியோ, முதலாவதாக 60 வெஸ்பா ஸ்கூட்டர்களை தயாரித்தது. இது ‘0' (ஜீரோ) சீரீஸ் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் தயாரித்த 0 சீரீஸ் வெஸ்பா ஸ்கூட்டர்களிலேயே மிகப்பழமையான ஸ்கூட்டர் ஒன்று எலத்திற்கு வருகிறது.

ஏலத்திற்கு வரும் உலகின் பழைய வெஸ்பா ஸ்கூட்டர்

பியாஜியோ நிறுவனம் தயாரித்த 3வது வெஸ்பா இதுவாகும். இதன் சேஸிஸ் நம்பர் ‘1003'. முதல் இரண்டு வெஸ்பாக்கள் தற்போது உலகத்திலேயே இல்லை, அவை அழிந்துவிட்டன. இதனால் இதுவே உலகில் உள்ள பழைய வெஸ்பாவாகும்.

ஏலத்திற்கு வரும் உலகின் பழைய வெஸ்பா ஸ்கூட்டர்

அப்போதைய ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான கிரிகோரி பெக் மற்றும் ஆர்ட்ரே ஹெப்பர்ன் நடித்து 1953ஆம் ஆண்டில் வெளிவந்த ரோமன் ஹாலிடே என்ற படத்திலும் இந்த வெஸ்பா ஸ்கூட்டர் அதிகமான காட்சிகளில் உபயோகப்பட்டுள்ளது.

Catawiki என்ற ஏல நிறுவனத்தினர் இந்த பழமையான வெஸ்பா ஸ்கூட்டரை ஏலத்தில் விட உள்ளனர். இது 2,50,000 முதல் 3,00,000 யூரோக்கள் விலை போகும் என எதிர்பார்ப்பதாக ஏல நிறுவனத்தினர் தெரிவித்தனர். இது நம்மூர் மதிப்பில் 1.76 கோடி ரூபாய் முதல் 2.10 கோடி ரூபாயாகும்.

ஏலத்திற்கு வரும் உலகின் பழைய வெஸ்பா ஸ்கூட்டர்

ஏல நிறுவனத்தின் இணையத்தில் இந்த வெஸ்பா ஸ்கூட்டருக்கான ஏலம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இது வரும் 28ஆம் தேதி வரை நடக்கிறது. அதிக தொகைக்கு ஏலம் கோருபவருக்கு இந்த வெஸ்பா விற்கப்படும்.

ஏலத்திற்கு வரும் உலகின் பழைய வெஸ்பா ஸ்கூட்டர்

ஏல நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் கூறும்போது, "இத்தாலி மட்டுமல்லாது வரலாற்றின் சின்னமாக விளங்கும் வெஸ்பாவை மியூசியத்திலோ அல்லது சிறந்த ஒரு வரலாற்று சேகரிப்பாளருக்கோ செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

71ஆண்டுகள் பழமையான இந்த வெஸ்பா இன்றும் நல்ல நிலையில் இயங்கி வருகிறது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. ஏலம் முடிய இன்னும் 3 தினங்கள் இருப்பதால் வாங்குறவங்க வாங்கலாம்...வாங்குறவங்க வாங்கலாம்...

Most Read Articles
English summary
world's oldest vespa scooter comes for auction at italy
Story first published: Saturday, March 25, 2017, 11:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X