பாரீஸில் விபத்துக்குள்ளாகி உருக்குலைந்த பகானி ஹூய்ரா பேர்ல் ஒன்-ஆஃப் கார்...

By Meena

இத்தாலியைச் சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம் பகானி. இந்த நிறுவனம் தயாரித்த ஒன் - ஆஃப் எடிசன் கார் (ஒரே ஒரு முறை மட்டும் தயாரிக்கப்பட்ட மாடல்) பகானி ஹூய்ரா பேர்ல்.

பார்க்க படு பந்தாவாக இருக்கும் இந்த கார், அண்மையில் நேர்ந்த விபத்தொன்றில் சிக்கி அப்பளம் போல நொறுங்கிவிட்டது. அதுதான் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. கார்கள் விபத்துக்குள்ளாவது சகஜம்தானே... இதிலென்ன சர்ச்சை என்கிறீர்களா? இருக்கிறது.

விபத்தில் சின்னாபின்னமான பல கோடி பகானி கார்!

விபத்துக்குள்ளான பகானி ஹூய்ரா பேர்ல் மாடல் காருக்கு முன்பக்கத்தில் எந்தவிதமான அடியும் இல்லை. பின்பக்கம்தான் அப்படியே காணாமல் போயிருக்கிறது. குறிப்பாக இடது பக்கம் பின்னால் உள்ள வீலை காணவில்லை. அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான பாகங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன.

விபத்தில் சின்னாபின்னமான பல கோடி பகானி கார்!

இந்தச் சம்பவம் பாரீஸ் நகரில் கோர்ட் ஆல்பர்ட் அயர் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இதற்கு அருகில்தான் காங்கோ நாட்டின் தூதரகம் அமைந்துள்ளது. இரு சாலைகளும் சந்திக்கும் இடத்தில் அந்த கார் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருந்து ஏதோ ஒரு வாகனம் மோதி விபத்துக்குள்ளனதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் சின்னாபின்னமான பல கோடி பகானி கார்!

வேகக் கட்டுப்பாடின்றி பகானி ஹூய்ரா பேர்ல் கார் விரைவாக வந்ததால்தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக மற்றொரு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி மது போதையில் இருந்த ஒருவர் இந்த விபத்தை நிகழ்த்தி விட்டு தப்பியோடி விட்டதாகவும் யூகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சின்னாபின்னமான பல கோடி பகானி கார்!

விபத்துக்குள்ளான காரை யார் ஓட்டி வந்தார்கள் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர்தான் அதை ஓட்டி வந்ததாக சில பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

விபத்தில் சின்னாபின்னமான பல கோடி பகானி கார்!

எது, எப்படியோ ஒன்-ஆஃப் மாடலாக வெளியான பகானி ஹூய்ரா பேர்ல் கார் விபத்தில் சிக்கி பின்புறம் மட்டும் சிதிலடமைந்திருப்பது அந்தக் காரின் நம்பகத்தன்மையையும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது.

விபத்தில் சின்னாபின்னமான பல கோடி பகானி கார்!

பகானி ஸோண்டா ஆர் மற்றும் எஸ் மாடல்கள், பகானி ஹூவைரா கார்களின் சிறப்பம்சங்களை எடுத்து உருவாக்கப்பட்ட மிகவும் பிரத்யேகமான மாடல்தான் விபத்தில் சிக்கிவிட்டது. தயாரிக்கப்பட்ட ஒரேயொரு காரும் இப்படி சரிசெய்ய முடியாத அளவுக்கு உருக்குலைந்துவிட்டது, பகானி நிறுவனத்தையும், அதன் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.இந்த விபத்து குறித்து போலீஸார் நடத்தி வரும் விசாரணையில் உண்மைச் சம்பவங்கள் வெளிவரும். அதுவரை காத்திருப்போம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Pagani Huayra Pearl Crashed in Paris; Drunk Driver To Be Blamed?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X