குழந்தையை மறந்து சென்ற பெற்றோருக்கு துபாய் காவல்துறை கடும் எச்சரிக்கை

Written by: Azhagar

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுலாவிற்கு வந்திருந்த தம்பதிகள், தங்களது கைக்குழந்தையை மறந்து வாடகை காரில் விட்டு சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தை பிடிக்க அவசரகதியில் சென்ற காரின் பின் இருக்கையில் தூங்கிக் கொண்டுயிருந்த தங்களது குழந்தையை கவனிக்காமல் தம்பதிகள் அங்கேயே விட்டு சென்றனர்.

தம்பதிகளை இறக்கிவிட்டு வாடகை கார் சென்ற பிறகே குழந்தையை குறித்த ஞாபகம் பெற்றோருக்கு வந்துள்ளது. திக்கதியில் தம்பதிகள் இருவரும் துபாய் விமானநிலையை காவல்துறையினரை நாட, அவர்கள் உடனடியாக துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தை தொடர்ப்புகொண்டு சம்பவத்தை விளக்கி கூறினர்.

குழந்தையை விட்டுசென்றது குறித்து தம்பதிகள் இருவரிடமும் விசாரித்த காவல்துறைக்கு, அவர்களது அலட்சியப்போக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக குழந்தையின் தந்தை, காரின் பின் இருக்கையில் தூங்கிக் கொண்டுயிருந்த குழந்தையை கவனியாது, உடைமைகளை மட்டும் பத்திரப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர், குழந்தை மனைவியிடம் உள்ளது என்று நினைத்துக்கொண்டே ஏர்போர்ட்டில், மனைவி உடன் சென்றுள்ளார். இதைக்கேட்ட காவல்துறையினர் தம்பதிகளின் அலட்சியமான நடவடிக்கையை மிகவும் கண்டித்தனர். பிறகு குழந்தையுடன், தம்பதிகள் வாடகை காரை பிடித்த இடத்தை வைத்து ஓட்டுநரை தொடர்ப்புக்கொள்ள முயற்சித்தனர்.

துபாயில் இயங்கும் அனைத்து வாடகை கார்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால், தம்பதிகள் பயன்படுத்திய வண்டியை ட்ராக் செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கினர். பிறகு விமானநிலையத்தின் அருகே அந்த வாடகை கார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், காரின் ஓட்டுநர், அருகிலிருக்கும் சிற்றுண்டியில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டு இருப்பதாகவும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக காவல்துறை ஓட்டுநரை தொடர்ப்புக்கொண்டு, குழந்தை காரின் உள்ளதா என்று கேட்க, பதறிப்போய் காரின் பின் இருக்கையில் பார்த்த ஒட்டுநருக்கு நிம்மதி கிடைத்தது. பெற்றோர் எப்படி குழந்தைய தூங்க கிடத்தியிருந்தார்களோ, அவ்வாறே எந்த சலனுமும் இல்லாமல், குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தது.

குழந்தை பத்திரமாக உள்ளது என ஓட்டுநர் தகவல் தெரிவித்தபின், அவரை போலீசார் இருக்கும் இடத்திற்கு வரச்செய்து, ஓட்டுநரிடமிருந்து குழந்தையை போலீசார் பெற்றனர். பிறகு குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்து, அவர்களது அலட்சியமான செயல்பாடுகளுக்கு கண்டிப்பு தெரிவித்தனர்.

குழந்தையுடன் கடைசி நிமிடத்தில் விமானத்தை பிடித்து பெற்றோர் போலீசாருக்கும், வாடகை கார் ஓட்டுநருக்கும் நன்றி தெரிவித்து பெற்றோர்கள் விடைபெற்றனர்.

துபாய் விமானநிலையத்திற்கான பகுதிகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால், காவல்துறை சுற்றுலாவருபவர்களுக்கு பல பாதுகாப்பு எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது. தங்களது உடமைகளை பாதுகாப்பாகவும், குழந்தைகளை பத்திரமாகவும் உரியவர்கள் வைத்திருக்கவேண்டும் என சுற்றுலாவாசிகளுக்கு துபாயின் சுற்றுலாதுறைக்கான காவல்துறை உயர் அதிகாரி அறிவுறைகளை வழங்கியுள்ளார்.

ஃபெராரியின் புதிய 812 சூப்பர் பாஸ்ட் காரின் புகைப்படங்களை கீழே காணுங்கள்

Story first published: Tuesday, March 14, 2017, 11:06 [IST]
English summary
A top official at the tourist police department warned tourists of leaving their children and/or luggage in public transport.
Please Wait while comments are loading...

Latest Photos