இனி சாலைகளில் காரை பார்க் செய்ய கட்டணம்; 2 கார் வைத்திருந்தால் கூடுதல் கட்டணம்..!!

Written By:

உங்களது வீட்டிற்கு அருகில் கார்கள் பார்க்கிங் செய்யும் வழக்கம் உடையவரா நீங்கள்? ஆம் என்றால் ஒரு கனிசமான தொகையை அரசிற்கு செலுத்த தயாராகுங்கள்.

டெல்லியில் கார் பார்க்கிங் செய்வதற்கான வரைவு கொள்கை கடந்த வியாழன்று வெளியிடப்பட்டது.

சாலைகளில் கார் பார்க்கிங் செய்யும் உரிமையாளர்கள் அரசிற்கு கட்டணம் செலுத்தும் புதிய சட்டம் அமலாகிறது.

டெல்லி கார் பார்க்கிங் வரைவு கொள்கை படி, சாதரண நேரங்களை விட பகல் நேர பார்க்கிங் மற்றும் பீக் ஹவர் பார்க்கிங்கிற்கு கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்பட உள்ளன.

மேலும் இந்த கொள்கையில் வாரநாட்கள் மற்றும் வார இறுதி நாட்களுக்கான பார்க்கிங் கட்டணம் மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி இந்த புதிய பார்க்கிங் வரைவு கொள்கையை தயாரித்துள்ளது.

இதற்கு டெல்லியின் துணை நிலை ஆளுநர் அனில் பாய்ஜெல் ஒப்பதல் அளித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களில் 17 மில்லியன் மக்கள் வசித்து வரும் தலைநகர் டெல்லியில் மாசு அளவு ஆபத்து நிலையை அடைந்து வருகிறது. மேலும் கோடிக்கான வாகனங்கள் டெல்லியில் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கிட்டத்தட்ட டெல்லியில் சுமார் 9.5 லட்சம் வாகனங்களில் அரசின் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்து தான் பார்க்கிங் செய்யப்படுகின்றன.

இப்படி நிறுத்தப்படும் கார்களால், டெல்லியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஏராளம். இது கமர்ஷியல் பகுதிகளில் மட்டுமில்லாமல், குடியிருப்பு பகுதிகளிலும் ஏற்படுவது தான் கொடுமை.

டெல்லியின் புதிய பார்க்கிங் வரைவு கொள்கையில் குடியிருப்பு பகுதிகளுக்கான சாலைகளில் நிறுத்தப்படும் காரின் அளவை வைத்து கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது வழியை பார்க்கிங்கால் ஆக்கிரமிப்போருக்கு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வரம்பு மீறி பார்க்கிங் செய்வோருக்கு அதிக தொகை வசூலிக்கப்படும் என்றும் வரைவு கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வீட்டிற்கு ஒரு கார் மேல் வாங்குபவர்களுக்கு சாலை வரியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு கார்களை சாலையில் பார்க்கிங் செய்ய கட்டண அளவு அதிகமாகும்.

குடியிருப்பு பகுதிகளை தவிர மார்கெட், கடை வீதி போன்ற பகுதிகளில் பார்க்கிங் செய்தால், அதற்கான கட்டணம் இன்னும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லியின் புதிய பார்க்கிங் வரைவு கொள்கையில், நடைபாதையை ஆக்கிரமித்து கார்களை பார்க்கிங் செய்பவர்கள் மீது குற்றவழக்கு பதியப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Pay to park outside homes, higher fee for two cars, says Delhi’s new parking policy. Click for details...
Please Wait while comments are loading...

Latest Photos