படுகாயங்களுடன் உயிருக்கு போராடி தீயில் கருகி பலியான பால்வாக்கர்!

By Saravana

கடந்த ஆண்டு இறுதியில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் புகழ் நடிகர் பால்வாக்கர் மரணம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

கடந்த நவம்பர் 30ந் தேதி நடந்த இந்த விபத்து குறித்த லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பால்வாக்கர் சென்ற போர்ஷே கார் விபத்துக்கான காரணங்கள் குறித்து 15 பக்க விசாரணை அறிக்கையை லாஸ் ஏஞ்சல்ஸ் கரொனர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

உயிரை குடித்த வேகம்

உயிரை குடித்த வேகம்

பால்வாக்கர் மரணத்துக்கு காரணமாக போர்ஷே கார் அளவுக்கு மீறிய வேகத்தில் சென்றதே விபத்துக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு வேகம், வேகம், வேகம் மட்டுமே காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பறந்த கார்

பறந்த கார்

விபத்து நடந்த பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பால்வாக்கர் சென்ற கார் மணிக்கு 160 கிமீ வேகத்தில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தொழில்நுட்ப குறைபாடு

தொழில்நுட்ப குறைபாடு

மேலும், விபத்தில் சிக்கிய போர்ஷே கரெரா ஜிடி காரில் ஏதெனும் தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் இல்லையென்று தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

காரை ஓட்டிய பால்வாக்கரின் நண்பர் ரோஜர் ரோடஸ் விபத்தில் சிக்கிய உடனே படுகாயமடைந்து மரணித்துவிட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பால்வாக்கர் விபத்தில் சிக்கிய உடனே இறக்கவில்லை என்றும், கழுத்து, தோல்பட்டை மற்றும் இடுப்பு எலும்புகள் உடைந்த நிலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், காரில் ஏற்பட்ட தீயில் சிக்கிய கருகி இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலை அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகிவிட்டாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ரிலீஸ்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ரிலீஸ்

பால்வாக்கர் திடீர் மரணத்தால் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்-7 திரைப்படத்தை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தில் பால்வாக்கர் ஏற்று நடித்து வந்த பிரையன் ஓ கொன்னர் கதாபாத்திரத்துக்கு ஓய்வு கொடுப்பதற்காக கதை மற்றும் திரைக்கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறதாம். இதன் காரணமாக வரும் ஜூலை 14ந் தேதி ரீலிசாகவிருந்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்-7 திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ந் தேதிக்கு திரைக்கு வர இருக்கிறது.

Most Read Articles
English summary
It has finally been confirmed that excess speed was the reason behind the car crash in which Hollywood actor Paul Walker and his friend Roger Rodas died. The Porsche Carrera GT in which Walker and Rodas, the driver at the time, met with the fatal accident was travelling at over 100 mph (160+ km/h) before it crashed, a report from the Los Angeles County Coroner's office has concluded.
Story first published: Monday, January 6, 2014, 12:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X