பால்வாக்கர் உயிரை பலிவாங்கிய கார் விபத்து: அதிவேகமே காரணம் என தகவல்

By Saravana

பால்வாக்கர் கார் விபத்து தொடர்பாக ஆய்வு செய்வதற்காக போர்ஷே நிறுவனம் சிறப்பு நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் நாயகன் பால்வாக்கர் மரணம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஆனால், அந்த காரை பால்வாக்கர் ஓட்டவில்லை. அவரது நெருங்கிய நண்பர் ரோஜர் ரோடாஸ்தான் ஓட்டியுள்ளார். அவர் ஒரு கார் பந்தய வீரர்தான்.

Paul Walker

மேலும், இருவரும் சேர்ந்து ஆல்வேஸ் எவால்விங் என்ற ரேஸ் அணியையும் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், பால்வாக்கர் மற்றும் அவரது நண்பர் உயிரை பலி வாங்கிய விபத்து குறித்த விசாரணை தீவிரமாகியுள்ளது.

விபத்துக்குள்ளான போர்ஷே கரீரா ஜிடி கார் 2005ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட அந்த பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் பல பிரபலங்களின் கையில் தவழ்ந்து வருகிறது. இந்த நிலையில், பால்வாக்கரும், ரோஜரும் சென்ற கார் விபத்துக்குள்ளானது குறித்து அமெரிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதத்திலும், தொழில்நுட்ப பிரச்னை காரணமாக கார் விபத்துக்குள்ளானதா என்பது குறித்து கண்டறிவதற்காக போர்ஷே நிறுவனம் சிறப்பு நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது.

காரில் இருந்து கைப்பற்றப்பட்ட நிகழ்வு பதிவு கருவி எனப்படும் கருப்புப் பெட்டியை வைத்து சோதனை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த கருவியில் விபத்துக்குள்ளான நேரத்தில் காரின் வேகம், பிரேக், ஏர்பேக் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், மிக அதி வேகத்தில் காரை செலுத்தியதே விபத்துக்கான காரணம் என்று விசாரணையில் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Most Read Articles
English summary
The ‘Carrera GT' is considered to be one of the Top Sports Cars of All Time, that was manufactured by Porsche between 2004 - 2007. Now, that raises a Big Question? Was there any issue with Paul Walker and Rondas' Carrera? or Was it, purely a driver error? Porsche has sent across a team of experts to aid in the investigation. The Law enforcement officials have managed to recover the black boxes from the car.
Story first published: Saturday, December 21, 2013, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X