அமெரிக்காவில் அறிமுகமான ஸ்லீப் பஸ்: அமோக வரவேற்பு!

By Saravana

நம் நாட்டில் ஸ்லீப்பர் பஸ் எனப்படும் படுக்கை வசதி கொண்ட பஸ்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை போலவே, அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஸ்லீப் பஸ் என்ற படுக்கை வசதி கொண்ட பஸ்சிற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

விமானப் பயணத்திற்கு கணிசமான டாலர்களை செலவிட்ட அமெரிக்கர்களுக்கு இந்த பஸ் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. இந்த பஸ் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முக்கிய நகரங்கள்

முக்கிய நகரங்கள்

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு இடையில் இந்த பஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இரு நகரங்களுக்கும் இடையே செல்லும் பெரும்பான்மையானோர் விமான பயணத்தையே பயன்படுத்தி வந்த நிலையில், இந்த பஸ் அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

 ட்ரெயிலர் பஸ்

ட்ரெயிலர் பஸ்

நம்மூர் ஸ்லீப்பர் பஸ் போன்று அல்லாமல், வால்வோ டிரக் ட்ரெயிலரில் படுக்கைகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதனை தொழில்நுட்ப ரீதியாக பஸ் என்று கூற முடியாது. எனினும், இதனை அறிமுகம் செய்திருக்கும் நிறுவனம் பயணிகளை கவர்வதற்காக வணிக ரீதியில் ஸ்லீப் பஸ் என்று குறிப்பிடுகிறது.

சொகுசான படுக்கைகள்

சொகுசான படுக்கைகள்

இந்த பஸ்சில் மிகவும் சொகுசான படுக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ரீடிங் விளக்குகள், தலையணைகள் உள்ளிட்ட வசதிகளுடன் மிகவும் சொகுசாக பயணிக்கும் வாய்ப்பை இந்த பஸ் வழங்குகிறது.

ஓய்வு இடம்

ஓய்வு இடம்

தூக்கம் வராமல் இருப்பவர்களுக்காக தனியாக ஓர் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில், மேஜை, நாற்காலிகள் போடப்பட்டிருப்பதோடு, காபி, டீ போன்றவற்றை பெற்று அருந்தும் இடமாகவும் இருக்கிறது. அதில், டிவி திரையும் பொருத்தப்பட்டிருக்கிறது. எனவே, மற்றவர்களுக்கு தொந்தரவு தராத இடமாக அது அமைக்கப்பட்டிருக்கிறது.

 பயண நேரம்

பயண நேரம்

சான் பிரான்சிஸ்கோ நகரில் இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த பஸ் காலை 5.30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை அடைகிறது. அதேநேரத்தில், காலை 7.30 மணி வரை பஸ்சிலேயே பயணிகள் தூங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனவே, பஸ் நின்றவுடன் அவசரமாக இறங்கும் அவசியம் இல்லை.

கட்டணம்

கட்டணம்

இரு நகரங்களுக்கு இடையில் குறைந்தபட்ச விமான கட்டணமாக 114 டாலர்கள் உள்ளது. ஆனால், ஸ்லீப் பஸ்சில் 48 டாலர்கள் மட்டுமே கட்டணம். எனவே, பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 கூடுதல் பஸ்கள்

கூடுதல் பஸ்கள்

முதல் ஸ்லீப் பஸ்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதையடுத்து, மேலும் 10 ஸ்லீப் பஸ்களை இயக்குவதற்கு ஸ்லீப் பஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிக குறைவான கட்டணத்தில் நிறைவான சேவையை வழங்குவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

விமான நிலையத்திற்கு செல்லும் நேரம், பாதுகாப்பு சோதனைகளுக்கான நேரம், விமான பயண நேரம், கட்டணம் போன்றவற்றை ஒப்பிடும்போது, இது மிகச்சிறப்பானது என பயணிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
People are paying Just $48 to ride on this 'sleep bus'.
Story first published: Monday, June 13, 2016, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X