விமானம் பறக்கும்போது பைலட்டுகள் சந்திக்கும் சவால்களும், மறைக்கும் விஷயங்களும்!

விமானம் பறக்கும்போது நிகழும் அபாயகரமான நிகழ்வுகள் மற்றும் பைலட்டுகள் எதிர்கொள்ளும் சில சவால்கள் குறித்து ஒரு ஆய்வை நடத்தி ரெட்டிட் தளம் வெளியிட்டிருக்கிறது. அதில், பல அதிர்ச்சியும், சுவாரஸ்யமும் கலந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

அபாயம் குறித்து பயணிகளிடம் விமானிகள் தெரிவிப்பது ஒரு வழக்கம். ஆனால், அனைத்து விஷயங்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதாவது, பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் என்பதால், விமானிகள் மறைத்துவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. விமானிகள் சர்வசாதாரணமாக அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதிர்ச்சியான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

01. கரண்ட் போச்சே...

01. கரண்ட் போச்சே...

வீட்டில் கரண்டு போனாலே எரிச்சலடைகிறோம். ஆனால், 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் கரண்டு போனால் என்னாகும். ஆம், ஏர்பஸ் ஏ320 விமானத்தை இயக்கிய விமானியின் அதிர்ச்சி தரும் அனுபவம் இது. ஒருமுறை விமானம் 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த மூன்று மின்சார ஜெனரேட்டர்கள் மற்றும் பேட்டரி ஆகிய அனைத்தும் செயல் இழந்துவிட்டன. ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு மேற்கொண்ட முயற்சியின் பலனாக பேட்டரி மூலமாக கிடைத்த மின்சாரத்தில், விமானத்தின் கட்டுப்பாட்டு கருவிகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. அதனை வைத்து விமானத்தை பாதுகாப்பாகவும், அனுபவத்தை வைத்து சாமர்த்தியமாக தரை இறக்கினர். ஆனால், கடைசி வரை விமானத்தில் விளக்குகள் மட்டுமே எரியவில்லை. ஆனால், விமானம் முழுவதுமே கரண்டு போனது பயணிகளுக்கு கடைசி வரை தெரியாதாம்.

02. அச்சச்சோ...

02. அச்சச்சோ...

விமான பணிப்பெண்ணாக பணிபுரிபவரின் மகன், தனது தாய் தெரிவித்த இந்த தகவலை ரெட்டிட் பத்திரிக்கையிடம் தெரிவித்திருக்கிறார். அவரது அம்மா பணிபுரிந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, அந்த அதிர்வில் அந்த விமானத்தின் வின்ட் ஸ்கிரீன் எனப்படும் முகப்பு கண்ணாடி ஒருபக்கம் உடைந்துவிட்டதாம். மேலும், விமானியும் காயமடைந்துவிட்டாரம். ஆனால், மற்றொரு விமானி பத்திரமாக விமானத்தை இயக்கி பத்திரமாக நிறுத்தியிருக்கிறார். இதுவும் பயணிகளுக்கு தெரியாத விஷயமாக நடந்திருக்கிறது.

03. டர்புல்லன்ஸ்...

03. டர்புல்லன்ஸ்...

டிரான்ஸ் அட்லாண்டிக் விமானத்தை இயக்கிய விமானியின் அனுபவ பதிவு இது. சமீபத்தில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மிக மோசமான காற்று சுழற்சியில் விமானம் சிக்கி குலுங்கியிருக்கிறது. இதில், துணை விமானி நிலைகுலைந்ததால், அவரது முழங்கால் வந்து மோதி எனது முகத்தை பதம் பார்த்துவிட்டது. ஆனால், எனது துணை விமானி சுதாரித்துக் கொண்டு, விமானத்தின் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு விமானத்தை இயக்கினார். எனது விமான இயக்கும் அனுபவத்தில் அதுபோன்றதொரு, மோசமான அனுபவத்தை சந்தித்ததில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

04. தவறான சமிக்ஞை

04. தவறான சமிக்ஞை

தவறான சமிக்ஞையால் ஓடுபாதையில் தனது விமானம் மற்றொரு விமானத்துடன் மோத இருந்த தகவலை விமானி ஒருவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எனது விமானத்திற்கு விமான கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விமானத்தை மேலே ஏற்றுவதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால், அந்த ஓடுபாதையின் குறுக்காக செல்லும் மற்றொரு ஓடுபாதையில் மற்றொரு விமானத்தை மேலே ஏற்றுவதற்கும் அவர்கள் அனுமதி வழங்கிவிட்டனர். இரு விமானங்களும் தரையிலிருந்து சற்றே மேலே எழும்பிய நிலையில், சிறிய இடைவெளியில் கடந்துவிட்டன. எனது வாழ்க்கையே முடிந்து போய்விட்டதாக கருதிய தருணம் அது என்று கூறியிருக்கிறார்.

05. தீவிரவாத அச்சுறுத்தல்

05. தீவிரவாத அச்சுறுத்தல்

விமானியின் நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட தகவல் இது. அதாவது, எனது நண்பர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து டோக்கியோவுக்கு தனது விமானத்தை செலுத்தியிருக்கிறார். பசிபிக் கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. ஒருபுறம் அதிர்ச்சி தந்தாலும், பசிபிக் சமுத்திரத்தின் நடுப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று கருதி, நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக விமானத்தை செலுத்தியிருக்கின்றனர். அதேநேரத்தில், ஒவ்வொரு முறை வெற்றிட பகுதியை கடக்கும்போது ஏற்பட்ட அதிர்வுகளால் குண்டு வெடித்து விடுமோ என்ற பயத்தில் அடிவயிறு கலங்கியதாக எனது நண்பர் தெரிவித்தார் என்று கூறியிருக்கிறார்.

06. மின்னல் தாக்குதல்...

06. மின்னல் தாக்குதல்...

இது விமானிகள் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை. இதுபற்றி ஒரு விமானி கூறுகையில், ஹீத்ரூ விமான நிலையத்தில் தரையிறக்கும்போது விமானத்தின் முன்பகுதியில் வலுவான மின்னல் தாக்கியது. எங்கள் முன்னால் இருந்த வின்ட் ஸ்கிரீன் கண்ணாடி அருகே மின்னல் தாக்கியதால், நான் உள்பட மூன்று விமானிகளும் அச்சத்தில் நாற்காலியை விட்டு விலகி குழந்தைகள் போல எழுந்துவிட்டோம். அது மறக்க முடியாத அனுபவம் என்றார்.

07. அப்படியா...

07. அப்படியா...

ஒரு விமானி தெரிவித்திருக்கும் விஷயம், விந்தையாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அதாவது, விமானம் 11,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, காக்பிட் பகுதியில் புகை நெடி வந்துள்ளது. இதையடுத்து, விமானிகள் காக்பிட்டை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒரு விமானியின் பேண்ட்டிலிருந்துதான் தீப்பிடித்து புகை வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த விமானி பேண்ட்டை கழற்றி, தீ அணைப்பானை வைத்து தீயை அணைத்துள்ளனர். இதில், வேடிக்கை என்னவெனில், விமானி வைத்திருந்த காலி வாட்டர் பாட்டில், வின்ட் ஸ்கிரீன் மூலமாக வந்த சூரிய ஒளி கதிர்கள் குவிந்து வாட்டர் பாட்டிலின் பிளாஸ்டிக் சூடாகி, தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து, பிளாஸ்டிக் பொருட்களையும், கண்ணாடி பொருட்களையும் காக்பிட்டில் வைப்பதை அவர் தவிர்த்து வருகிறாராம்.

08. ஜெட் பிளாஸ்ட்

08. ஜெட் பிளாஸ்ட்

அதாவது, பெரிய வகை விமானங்களின் எஞ்சின் மிக அபரிமிதமான சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டவதை. பெரிய விமானங்கள் மேலே எழும்புவதற்கு ஓடுபாதையில் செல்லும்போது மிக அதிகப்படியான காற்றை உந்தித் தள்ளும். மணிக்கு 190 கிமீ வேகத்தில் காற்றை வெளித்தள்ளும். அவ்வாறு வெளித்தள்ளப்படும் காற்றால், விமானத்தின் பின்புறத்தில் 200 அடி வரை இருக்கும் பொருட்கள் மற்றும் மனிதர்களை பாதிக்கும் அபாயம் உண்டு. அந்த பெரிய விமானங்களை தொடர்ந்து செல்லும் சில சிறிய விமானங்கள் பாதிப்புக்கு ஆளாகி, விமானிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த அனுபவத்தை சந்தித்திருப்பதாக பல விமானிகள் தெரிவித்துள்ளனர்.

 09. சவால்

09. சவால்

வானில் ஏற்படும் திடீர் சூறாவளி மற்றும் வெற்றிடங்கள்தான் விமானிகளுக்கு பெரும் சவாலான விஷயங்கள். சில சமயம் இந்த திடீர் சூறாவளியால் விமானம் நிமிடத்திற்கு 6,000 அடி கூட கீழே இறங்கிவிடும் அபாயம் ஏற்படும். அதனை சுதாரித்து விமானத்தை கட்டுப்பாடுக்கு கொண்டு வருவது சவாலான விஷயமாக பார்க்கின்றனர். விமானத்தின் வால் பகுதியில் இருக்கும் ஸ்பாய்லர்கள் மூலமாக விமானத்தை கட்டுக்குள் கொண்டு வருகின்றனராம்.

10. ஆபத்து...

10. ஆபத்து...

பரபரப்பான விமான நிலையங்களில் அடிக்கடி நிகழும் சம்பவம், இரு விமானங்கள் மோதிக் கொள்ளும் சூழல். பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பைலட்டுகள் சமிக்ஞையை தவறாக புரிந்து கொண்டு இயக்கிவிடுவதும், கட்டுப்பாட்டு அறை பணியாளர்களின் குழப்பங்களும் சில சமயம் விமானங்கள் மோதிக்கொள்ளும் ஆபத்தை உருவாக்குகின்றன. விமானத்தின் உயரத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். பயணிகள் இது சூறாவளி காற்று காரணமாகவே விமானம் குலுங்குவதாக பயணிகள் நினைப்பதுண்டு. ஆனால், இதுதான் உண்மை என்று அந்த விமானி தெரிவிக்கிறார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Pilots reveal 10 terrifying secrets.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X