2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகனங்கள் அனைத்தும் மின்சார மயம். சாத்தியமா?

உலகை அச்சுறுத்து வரும் காற்று மாசு குறைப்பாடு இந்தியாவை விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் இதை களைய இந்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

By Azhagar

காற்று மாசு குறைப்பாட்டில் விரைவில் சீனாவை தோற்கடிக்கும் நிலையில் உள்ளது இந்தியா. இதனால் தற்போது விழித்துக்கொண்ட இந்திய அரசு விரைவில் நாடு முழுவதும் மின்சார ஆற்றல் கொண்டு வாகனங்கள் இயக்கப்படும் முடிவை பரிசீலித்து வருகிறது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

உலகளவில் நகரங்களில் வாழும் மனிதர்களில் 80% பேர் மோசமான மாசடைந்த காற்றையே சுவாசித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

காற்று மாசு காரணமாக உலகளவில் ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கின்றனர் என்றும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஃபிரிட்ஜ், மைக்ரோ அவன், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஜென் - செட் மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் ஆகியவை காற்று மாசடைவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

ஆனால் இவை எல்லாவற்றையும் விட, பைக், கார்கள் மற்றும் அனைத்து ரக வாகனங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் புகை, எளிதாக மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜன் காற்றை சென்று தாக்குகின்றன.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்த்மா மற்றும் இதர நோய்களால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். அதிலும், ஏழை நாடுகளின் நகரங்களில் வாழும் மக்களே மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

மனித இனத்திற்கே ஆபத்து ஏற்படத்தக்கூடிய காற்று மாசு குறைப்பாட்ட களைய உலகின் நான்கு முக்கிய பெரு நகரங்கள் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருக்கின்றன.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

டீசலால் இயங்கும் கார்கள் மற்றும் கனரக வாகனங்களை விரைவில் தடை செய்ய இருப்பதாக பாரீஸ், மெக்சிகோ சிட்டி, மேட்ரிட் மற்றும் ஏதேன்ஸ் நகரங்களின் மேயர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

டீசலால் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மாற்றும் தொழில்நுட்பத்தை கையாளவும் இந்த நான்கு நகரங்களின் மேயர்கள் முடிவு செய்துள்ளனர்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

டீசல் வாகனங்கள் தயாரிக்கப்படும் போது காற்று மாசு அதிகளவில் ஏற்படுகிறது. பின் அந்த வாகனம் டீசலால் இயங்கும் வகையில் பயன்பாட்டிற்கு வரும் போது நச்சு பொருந்திய நைட்ரஜன் ஆக்சைடு அதிலிருந்து வெளியாகி பாதிக்கசெய்கிறது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

இதை களையவே டீசல் ரக வாகனங்களை தடை செய்வதாக பாரீஸ், மெக்சிகோ சிட்டி, மேட்ரிட் மற்றும் ஏதேன்ஸ் நகரங்களை சேர்ந்த மேயர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

பெட்ரோல் மற்றும் டீசல் எரிவாயுகளுக்கு மாற்றாக மின்சாரம், ஹைட்ரஜன் மற்றும் ஹைபிரிட் போன்ற ஆற்றல்களின் படையடைப்பு அதிகமாகி வருவதால், டீசல் வாகனங்களை கைவிடும் இந்த நகரங்களின் முடிவு சாத்தியமே என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

பாரீஸ் நகரத்தை பொறுத்தவரையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டது. இதற்கான நடவடிக்கைகளை டோக்கியோவை பார்த்து பின்பற்றுகிறது பாரீஸ்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

1997ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்களை சாலைகளில் மக்கள் பயன்படுத்த பாரீஸ் நகர அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு கொஞ்சம் கொஞ்சமாக 2020ம் ஆண்டிற்குள் கடுமையாகப்படும் எனவும் பாரீஸ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

பாரீஸை தொடர்ந்து மேட்ரிட் நகர மேயரான மனுயிலா கார்மேனா காற்று மாசு குறைப்பாட்டை தடுக்க இயற்கை வழியிலான முயற்சிகளை நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் மேற்கொண்டு வருகிறார்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

மேட்ரிட் நகரத்தை சுற்றி, மரம், செடி, பூங்காங்கள் அமைக்கப்படுகிறது. வாகனத்திலிருந்து வெளிவரும் புகையை மரங்கள் சீர்மைப்படுத்தும்படியான நடவடிக்கைகள் மேட்ரிட் நகரத்தில் எடுக்கப்படுகிறது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

காற்று மாசு குறைபாடு என்பது இன்று எங்கோ நடக்கும் பிரச்சனை அல்ல. இதே இந்தியாவில் டெல்லி உட்பட பல பெருநகரங்களில் காற்று மாசு பிரச்சனையால் உயிரழப்புகளும், உடல் உபாதைகளும் அதிகமாகிக்கொண்டு வருகின்றன.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

இந்தியாவிலும் காற்று மாச் குறைபாடு பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. இந்தியா மற்றும் சீனா போன்ற தொழில் வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் வெளிப்புற காற்று மாசுபாடு ஒரு முக்கிய பிரச்சனை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

பெய்ஜிங் நகரத்தை கொஞ்சம் கொஞ்சமாக காற்று மாசு அரக்கனிடம் இழந்து வரும் சீனா தற்போது மின்சார கார் உற்பத்தியை நாடு முழுவதும் ஊக்குவிக்க தொடங்கியுள்ளது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

இந்த நடவடிக்கையால், 2020ம் ஆண்டிற்குள் மின்சார கார் உற்பத்தி மற்றும் வாங்கும் திறனில் உலகின் தலை சிறந்த நாடாக நிச்சயம் சீனாவாகத்தான் இருக்கும் எனவும், சீனாவே மின்சார கார்களுக்கான தலைநகரமாக உருவெடுக்கும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

சீனாவின் நடவடிக்கையால் அந்த நாடு சுபிட்சம் அடையப்போவது உறுதி. பாரீஸ், மெக்சிகோ சிட்டி, மேட்ரிட் போன்ற நகரங்களும் காற்று மாசு குறைபாட்டை சீர்மைபடுத்தப்போவது உறுதி. ஆனால் இந்தியா?

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

இந்தியாவில் காற்று மாசு குறைபாடு கவலைக்கிடமாக வளர்ந்து வருகிறது. இதில் பெரிய பங்கு வகிப்பது வாகனமே. இந்தியாவில் வசிப்பவர்களுக்கு வாகனப் புகை இருமல், தலைவலி, குமட்டல் மற்றும் பல்வேறு மூச்சுக்குழாய் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

வாகனங்களால் காற்று மாசு அடைவதை தடுக்க மற்ற நாடுகளில் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பார்த்த பிறகோ என்னவோ, இந்திய அரசும் இதை தீவிரமாக உற்று நோக்கத் தொடங்கியிருக்கிறது. இதை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் குறித்து தற்போது ஆராய்ந்து வருகிறது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

இந்தியாவின் வாகனத்தேவையை கட்டுபடுத்த முடியாது. ஆட்டோமொபைல் துறை இந்தியாவில் முதுகெலும்பாகி வருகிறது. இந்நிலையில் வாகனத்தின் மீது கட்டுபாட்டு விதிப்பது பெரியளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்தாராது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

இதுகுறித்து தீவிரமாக யோசித்த அரசாங்கம், 2030ம், ஆண்டிற்குள் இந்தியாவின் அனைத்து வாகனங்களையும் மின் ஆற்றல் கொண்டு இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

இதுகுறித்த தகவலை தெரிவித்துள்ள நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மின்சார ஆற்றலை பெருக்குவதன் மூலம் செலவு மிச்சமாவதோடு, மக்களாகிய நாம் சீரான வாழ்க்கையை வாழலாம் என தெரிவித்துள்ளார்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

இதற்கான தகவலை டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், 2015ம் ஆண்டு மின்சார செலவை கட்டுபடுத்த எல்.இ.டி விளக்குகளின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டது போல, மின்சார ஆற்றல் கொண்ட வாகனங்கள் இந்தியாவில் அதிகரிப்படும் என்றார் அவர்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

மேலும் சுயபரிசோதனைக்கு பிறகு மின்சார வாகனங்களுக்கான தேவை அறியப்பட்டு, அதற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்று பியூஷ் போயல் கூறினார்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

2030ம் ஆண்டிற்குள் பெட்ரோல், டீசலால் இயங்கும் எந்த வாகனங்களும் இந்தியாவில் விற்கப்படாத நிலை உருவாக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

மின்சார கார்களின் பயன்பாட்டை இந்தியாவில் பெருக்குவதற்கு, ஆரம்பக் கால கட்டத்தில் நிறுவனங்களுக்கு இந்திய அரசின் உதவி தேவைப்படும். பிறகு 2 அல்லது 3 ஆண்டுகள் கழித்து மின்சார கார்கள் மானியம் முறையில் அல்லாமல், தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

மின்சார ஆற்றலை வாகனங்களில் கொண்டுவரப்படும் தகவலை அறிந்த பல சுற்றுச்சூழல் வல்லுநர்கள், இந்தியா மின்சார கார்களுக்கான பயன்பாட்டை பெருக்கும் வித்தையை நார்வே நாட்டை பார்த்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

நார்வே நாட்டில் மின்சார காரை மக்களிடம் சென்று சேர்க பல விதங்களில் அந்நாட்டு அரசு மானியம் அளித்தது. சேவை வரி, சாலை வரி போன்ற கார் வாங்கும் போது போடப்படும் அனைத்து வரியையும் வாடிக்கையாளர்களுக்காக அந்நாட்டு அரசு ரத்து செய்தது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

பெட்ரோல் பங்குகள் போல பல இடங்களில் வாகனங்களின் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்து கொள்ள பெட்ரோல் பங்குகள் போல், ரீசார்ஜ் பங்குகளை அமைத்தது. இந்த செயல்பாடு மக்களிடம் பெரியளவில் சென்று சேர்ந்தது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

பிறகு சுங்க வரி நடைமுறையை தளர்த்தியது. மின்சார காரை மக்களிடம் பிரபலமாக்க நார்வே அரசு செய்த அனைத்து முயற்சிகளையும் பார்த்து அந்நாட்டு மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசுடன் சேர்ந்த தங்களையும் இணைத்துக்கொண்டனர்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

தற்போது பெட்ரோல், டீசல் கார்கள் நார்வே நாட்டில் கிடையவே கிடையாது. இதனால் நைட்ரஜன் அக்சைடு நச்சு காற்று அளவும் குறைந்து காணப்படுகிறது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

கனரக வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து ஊர்திகளுக்கு மட்டும் அந்தாட்டில் டீசல் மற்றும் பெட்ரோலை பயன்படுத்த நார்வே அரசு விளக்கு அளித்துள்ளது.

எனினும் அதுவும் இன்னும் சில மாதங்களில் மின்சார பயன்பாட்டிற்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

மின்சார கார் பயன்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்க நார்வே போல இந்தியாவும் பல நடைமுறைகளை உருவாக்கினால். இங்கும் வாகன பயன்பாட்டில் புதிய புரட்சி உருவாகும்.

புகை... தூசு... மாசு.., விழித்துக்கொண்டது இந்திய அரசு!

காரணம் இந்தியாவில் காற்று மாசு குறைபாடு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. வெளிப்புற காற்று மாசால் 2015ம் ஆண்டில் சீனாவை விட இந்தியா அதிக உயிரழப்புகளை ஏற்பட்டது. இது மிகவும் அபாயகரமான செய்தி.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Piyush Goyal, just revealed that by the year 2030, every car sold in India will be electric. Click for the details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X