அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் பயன்படுத்திய ஃபெராரி கார் விற்பனைக்கு

Written By:

அமெரிக்காவின் மிக பிரபலமான , சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்ட செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த கோடீஸ்வரரான டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்காவின் புதிய அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்றார். வர்த்தகப் பேரரசராக விளங்கிய ட்ரம்ப் பயன்படுத்திய விலையுயர்ந்த ஃபெராரி கார் ஒன்று ஏலத்திற்கு வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பயன்படுத்திய காடிலேக் லிமோ கார் ஒன்று சமீபத்தில் தான் ஏலதிற்கு விடப்பட்ட நிலையில், தற்போது அவர் பயன்படுத்திய ஃபெராரி எஃப் 430 எனும் விலை உயர்ந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரும் ஏலத்திற்கு வருகிறது. இந்த ஃபெராரி காரை 2007ஆம் ஆண்டில் தான் ட்ரம்ப் வாங்கியுள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் நிறுவனங்களின் தலைமையிடமான ட்ரம்ப் டவர் பெயரில் இக்கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஏலத்தில் விடப்படும் ஃபெராரி எஃப் 430 கார் வெறும் 3,862 கிமீ மட்டுமே ஓடியுள்ளது. இது அதிகபட்சமாக 3,50,000 அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 2.32 கோடி ரூபாய் ஆகும்.

2007 ஆம் ஆண்டு இக்காரை சொந்தமாக்கிய ட்ரம்ப் அதனை கடந்த 2011ஆம் ஆண்டு வரையில் உபயோகப்படுத்தியுள்ளார். இதன் பிறகு வேரொருவருக்கு அதனை விற்றுள்ளார். இதனை வாங்கியவர் அதனை நல்ல முறையில் பராமரித்து வந்துள்ளார். 12 ஆண்டுகளாக இரண்டு பேரிடம் இருந்துள்ள இக்கார் வெறும் 3.862 கிமீ தான் ஓடியுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேர் அமெரிக்கா ஆக்ஸன்ஸ் எனும் நிகழ்ச்சியில் இக்கார் ஏலம் விடப்பட உள்ளது. இது சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இக்காரின் சர்வீஸ் ரெகார்ட் புத்தகம், இதர ஒரிஜினல் சான்றிதழ்கள், கார் மேனுவல், டூல் கிட், கார் கவர் மற்றும் அதன் பேக் உள்ளிட்ட பொருட்களும் இணைந்தே ஏலத்தில் விடப்படுகிறது.

இது தொடர்பாக, இக்காரை ஏலத்தில் விடும் ஆக்ஸன்ஸ் அமெரிக்கா நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "மிகவும் சிறந்த பொருட்களை உபயோகப்படுத்துவதில் பெயர் போனவர் ட்ரம்ப், ஆகவே அவர் உபயோகப்படுத்திய இந்த ஃபெராரியும் விதிவிலக்கல்ல. இக்கார் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் தொழில்நுட்பத்திலும், செயல்திறனிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இந்த கார் திகழ்நது

அதிகபட்சமாக மணிக்கு 325 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது இக்காரில் 4.3 லிட்டர் வி8 பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 490 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

சந்தையில் இருந்த போது இதன் விலை அப்போதே ஒன்றரை கோடி ரூபாயாக இருந்தது. 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் இம்மாடல்களை ஃபெராரி நிறுவனம் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஸ்போர்ட்ஸ் மாடாலான ஃபெராரி 812 சூப்பர் ஃபாஸ்ட் காரின் படங்கள்: 

English summary
Trump held on to the vehicle until 2011 and then sold and ended up in possession of the current vendor
Please Wait while comments are loading...

Latest Photos