மொனாக்கோவில் நடைபெறும் கண்காட்சியில் அறிமுகமாகும் உலகின் முதல் பறக்கும் கார்

Written By:

கடுமையான சாலை போக்குவரத்தை இன்று நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் சந்தித்து வருகின்றனர். அதுவும் கோடைக்காலத்தில் எதிர்பாராத போக்குவரத்து நிறுத்தம் ஏற்பட்டால் அன்றைய பாடு அதோகதி தான். நினைத்ததை செய்ய முடியாமல், நேரத்திற்கு எங்கும் போகமுடியாமல் நமக்குள் அது பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.

கோடைக் காலத்தின் கடும் உஷ்ணத்தில் போக்குவரத்து நிறுத்தத்தில் வியர்த்து விறுவிறுத்து (இதில் வாகனத்தை வேறு பிடித்துக்கொண்டு) நாம் நிற்கும் போது, எஞ்சினின் பேரிச்சலுடன் வானத்தில் ஒரு விமானம் நம்மை பார்த்து சிரித்தபடியே பறக்கும். இதை பார்க்கும் நாம் ஏக்கப்பட்டு சிக்னல் விழுந்தபின் சாலையை கடந்து செல்வோம்.

விமானமோ அல்லது ஹெலிகாப்டரோ வாங்கவேண்டும் என்ற நமது எண்ணத்தில் எந்தவித குறையுமில்லை, அது இயல்பு. ஆனால் இதுபோன்ற ஒரு வசதி இருந்தும் நாம் ஏன் சாலை போக்குவரத்திற்கிடையில் சிக்கி சின்னாபின்னமாகிறோம் என்று நினைக்கும்போது ஏக்கம் கவலையாக மாறி அது வேறு மன அழுத்தத்தை ஏற்படுத்து விடும்.

மாறிவரும் காலத்திற்கேட்ப தொழில்நுட்ப உலகில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் சமீபத்திய வரவு தான் பறக்கும் கார். மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியாவை சேர்ந்த ஏய்ரோமொபில் என்ற நிறுவனம் வரும் 20ம் தேதி இரண்டு நபர் இருக்கை கொண்ட பறக்கும் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய காரை அறிமுகப்படுத்தவுள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடான மொனாக்கோவில் நடைபெறவுள்ள கார் கண்காட்சியில் ஏய்ரோமொபில் நிறுவனம் இந்த பறக்கும் கார் வெளியிடுகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோமொபைல் உலகில் பறக்கும் கார் என்ற சொல் தீவிரமடைந்துள்ளது.

கார் மற்றும் விமானத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் மார் புதிய யுகத்தின் அற்புத ஊர்தி என தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ள ஏய்ரோமொபில் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

கார் மற்றும் விமான தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த பறக்கும் காரை வானிலும், சாலையிலும் செலுத்த முடியும் எனவும்
ஏய்ரோமொபில் நிறுவனம் தனது இணையத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, சாலை கட்டமைப்புகளை பெரிது நம்பியிருக்காமல், துரிதமாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் வாகன தயாரிப்பில் ஈடுபட ஏய்ரோமொபில் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், அதற்கான முதல் படி தான் இந்த பறக்கும் கார் எனவும் தெரிவித்துள்ளது.

ஏய்ரோமொபைல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பறக்கும் கார் செங்குத்தாக புறப்பட (takeoff) மற்றும் தரையிறங்க (landing) தயாரிக்கப்பட்டுள்ளது. காரின் உள்கட்டமைப்பில் ஒட்டுநர் / விமானிக்கான் இருக்கை காக்பிட் (விமானி அறை) போன்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

காரிலிருந்து பறக்கும் காராக மாறவும், பறக்கும் காரிலிருந்து சாலையில் செல்லும் காராக மாறவும் ஒரு பட்டனை அழுத்தினால் போதுமானது. சாலையில் கார் இருந்தால், பின் சக்கரங்கள் உள்ளே மடக்கப்பட்டு முன் பாகம் கொஞ்சம் தூக்கியவாரே கார் மேல செல்லக்கூடிய திறன் பெற்றுள்ளது.

வசதிகளும், கட்டமைப்புகளும் மிகவும் மேம்படுத்தப்பட்ட வடிவில் உள்ளதால், அனைத்து தரப்பு மக்களும் வாங்கக்கூடிய விலையில் இவை தயாரிக்கப்படவில்லை. மேலும் இதுவரை வடிவமைப்புகள், ஆற்றல், விலை, விற்பனை விவரம் என பறக்கும் காரை பற்றிய எந்த தகவல்களையும் ஏய்ரோமொபைல் நிறுவனம் வெளியிடவில்லை.

அதேபோல, இந்த பறக்கும் காரை ஓட்ட நிச்சயம் வாடிக்கையாளர் விமான ஓட்டுநர் உரிமத்தை பெற்றவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏய்ரோமொபைல் நிறுவனம் தெரிவித்திருக்கும் தகவலின் படி ஸ்போர்ட்ஸ் ஃபைலட் உரிமம் அல்லது தனியார் விமான ஓட்டுநர் உரிமத்தை வாடிக்கையாளர்கள் கொண்டுயிருக்க வேண்டும்.

தயாரிப்பு பணிகள் குறைவில்லாமல் நடந்திருந்தாலும், தற்போது பறக்கும் காரை வெளியிடுவதில் தான் நிதி சிக்கல்களை ஏய்ரோமொபைல் நிறுவனம் சந்தித்து வருகிறது. இதற்காக சமீபத்தில் அந்நிறுவனம் 3.2 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியாக பெற்றது, இருப்பினும் கூடுதல் நிதிக்காக ஏய்ரோமொபைல் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

பறக்கும் காரை ஒரு நிறுவனம் தயாரிப்பது இது முதல்முறை அல்ல, 1947ம் ஆண்டில் அமெரிக்காவின் வல்டீ ஏர்கிராப்ட் கம்பெனி என்ற நிறுவனம் பறக்கும் காரை தயாரித்திருந்தது. கலிஃபோர்னியா மாகாணத்தில் சோதனை ஓட்டத்தையும் மேற்கொண்டது, ஆனால் இறுதி வரை வல்டீ ஏர்கிராப்ட் கம்பெனி பறக்கும் காருக்கான தயாரிப்பு பணிகளை தொடங்கவில்லை.

இவற்றுடன் ஃபோர்டு மற்றும் கிரைஸ்லர் தயாரிப்பு நிறுவனங்களும், பறக்கும் கார் தயாரிப்பில் களம் கண்டன. ஆனால் அவையேதும் சந்தைக்கு வரவில்லை. ஊபர் நிறுவனம் ஒருபடி மேல போய், தானாக இயங்கக்கூடிய பறக்கும் கார்களை நாசா பொறியாளர்களை வைத்து இயக்க திட்டமும் வகுத்தது.

ஊபர் நிறுவனம் அந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி
ஜெஃப் ஹோல்டன் வெளியிட்ட அறிக்கையில் தானாக் இயங்கக்கூடிய ட்ரோன் ரக விமானங்களை தயாரிக்கக்கூடிய முனைப்பில் ஊபர் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விமான ஊர்திகள் பெரும்பாலும் செங்குத்தான லேண்டிங் மற்றும் டேக் ஆஃபை கொண்டுயிருக்க வேண்டும் என்பது ஊபர் நிறுவனத்தின் திட்டவரையரையில் உள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Thursday, April 13, 2017, 12:34 [IST]
English summary
Slovakian flying car company AeroMobil launching worlds frst flying car at monacco car show on 20th. click for more details...
Please Wait while comments are loading...

Latest Photos