கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மனைவியுடன் விபத்தில் பலி

சென்னையை சேர்ந்த பிரபலமான கார் ரேஸரர் அஸ்வின் சுந்தர், அதிகாலை சுமார் 1.30 மணியளவில் சென்னை பட்டினம்பாக்கத்தில் நடைபெற்ற விபத்தில் மரணமடைந்தார்.

Written by: Azhagar

முன்னாள் MRF ஃபார்முலா கார் பந்தயங்களின் சாம்பியனும், தேசிய அளவில் முன்னணி கார் ரேஸருமான அஸ்வின் சுந்தர் சர்வதேச அளவில் நடைபெற்ற கார் பந்தயங்களுக்கான பல போட்டிகளில் கலந்துகொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.

அஸ்வினும் , அவர் மனைவி நிவேதிதாவும் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பி.எம்.டபுள்யூ Z4 காரில் பட்டினம்பாக்கம் பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். திடீரென கட்டுபாட்டை இழந்த கார் மரத்தில் மோதி தீபிடித்துக்கொண்டது.

அஸ்வினும் அவர் மனைவி நிவேதிதாவும் காரின் கதவை திறந்து வெளியே வர முயற்சிசெய்தபோது, விபத்தின் காரணமாக காரின் கதவுகள் இருகியதால், அவர்களால் வெளியே வர இயலவில்லை.

இதனால் கார் முழுக்க தீ பரவி, சம்பவ இடத்திலேயே ரேஸர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா உயரிழந்தனர். சாலையில் சென்ற சிலர் பி.எம்.டபுள்யூ Z4 கார் தீப்பிடித்து எரிவதை பார்த்து, சென்னை போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூன்று தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு, 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். பெரும் சிரமத்திற்கு இடையே உடல்களை மீட்ட போலீசார், விபத்தில் பலியானர்வர்களை குறித்து தகவல்களை ஆராய்ந்தனர்.

காரின் பதிவு எண்ணை வைத்து விபத்தில் பலியானவர்கள் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் மற்றும் நிவேதிதா தான் என்பதை உறுதிசெய்தனர். பின்பு உடல்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போரூர் ஆலம்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வரும் அஸ்வின் சுந்தர் மற்றும் அவர் மனைவி, எம்.ஆர்.சி நகரிலுள்ள தங்களது நண்பர்கள் வீட்டிலிருந்து திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளம் வயதில் இருந்தே கார் ரேஸிங்கில் அதிக ஈடுப்பாடு வைத்திருந்த அஸ்வின் சுந்தர், 2003ல் இருந்து 2013ம் ஆண்டு வரை கார் ரேஸிங்கில் தொடர்ந்து பல சாம்பியன் பட்டங்கள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவராவர்.

ரேஸிங் துறையில் புகழ் வெளிச்சத்தில் இருந்தபோது அஸ்வின் சுந்தர் மறைந்துள்ளது, இந்தியாவின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வின் சென்ற கார் விபத்திற்குள்ளான போது எடுக்கப்பட்ட ஃபேஸ்புக் வீடியோ!

 

எங்களது தளத்தில் வாசகர்கள் படித்துவரும் பிரதானமான மற்ற செய்திகள்...

கெ.டி.எமின் அடுத்த தயாரிப்பான டியுக் 390 மோட்டார் சைக்கிளின் புகைப்படங்கள்

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Saturday, March 18, 2017, 11:17 [IST]
English summary
Racer ashwin sundar and wife charred to death after speeding BMW crashes near marina
Please Wait while comments are loading...

Latest Photos