இரண்டு அடுக்கு கொண்ட உதய் எக்ஸ்பிரஸ்: இந்திய ரயில்வே நிர்வாகத்தின் புதிய அறிமுகம்

Written By:

போக்குவரத்து துறையில் இந்தியாவின் வளர்ச்சி தற்போது மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பை எட்டியுள்ளது. குறிப்பிட்டு, இரயில்வே துறை சார்ந்த கட்டமைப்புகளில் மத்திய அரசு வளர்ச்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் ஆந்திராவில் கண்ணாடிகளான இரயில் பெட்டி சேவையை சோதனை முயற்சியில் வெளியிட்ட பின்னர், இந்திய இரயில்வே நிர்வாகம் இரண்டு அடுக்கு கொண்ட இரயில் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியாவின் மிக முக்கிய வழித்தடங்களில் இந்த இரண்டு அடுக்கு சேவைக்கொண்ட இரயில்கள் இயக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக இது டெல்லி முதல் லக்னோ வரையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

உத்கிரிஷ் டபுள் டக்கர் அதிவேக ஏசி ரயில் என்ற பெயரில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த இரயில் சேவை, உதய் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகிறது.

இரவுப் பயணங்களை கருதி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் இந்த இரயில் சேவையில் படுக்கை வசதிக்கு பதிலாக உட்கார்ந்துகொண்ட தூங்கக்கூடிய வகையில் சாயும் வசதிக்கொண்ட நாற்காலிகள் அமைக்கப்படும்.

மேலும் பயணிகளின் தேவை கருதி காபி, குளிர் பாணங்களை வழங்கும் வெண்டிங் மெஷின்கள். மேலும் வை-ஃபை உடன் கூடிய எல்.சி.டி ஸ்பீக்கர் சிஸ்டம் என பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் உள்ளன.

பயணிகளை ஈர்க்க, பல தனித்துவமான செயல்பாடுகளும் உதய் எக்ஸ்பிரஸில் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சாதரணமான இரயில்கள் ஏசி பேட்டிகளின் பயணிப்பதை விட உதய் எக்ஸ்பிரஸில் இன்னும் மலிவான விலையில் பயணிக்கலாம்.

இதுபோன்ற சேவைகளுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கும் என்ற காரணத்தினாலே,உதய் எக்ஸ்பிரஸ் இரயிலில், மற்ற இரயில்களை விட கூடுதலாக 40 சதவீத எடையை தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பெர்த் இல்லாமல் இருப்பது இதில் குறை தான் என்றாலும், இருக்கையிலே பயணிகள் அனைத்து நிறைவான பயண அனுபவத்தை பெறும் வகையில் இரயில் அனைத்து கட்டமைப்புகளும் இருக்கும் என இந்திய இரயில்வே நிறுவாகம் உறுதியளித்துள்ளது.

கால்களை வசதிக்கு ஏற்றுவாறு வைக்கக்கூடிய வகையில் இந்த இரயில் இருக்கைகளின் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இரயில் உள்கட்டமைப்புகள் அனைத்தும் அதிக கலையுணர்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உணவு வசதிகளை பொறுத்தும் சில மார்டன் தொழில்நுட்பங்கள் உள்ளன. ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவுகளை, தேவைக்கு ஏற்றவாறு வெண்டிங்க் மெஷின்கள் மூலம் காசு கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

2016-17ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டின் போது உதய் எக்ஸ்பிரஸ் குறித்த அறிவிப்புகள் வெளியானது. அதில் உதய் எக்ஸ்பிரஸ் அதிவேக இரயில் ஒரு மணி நேரத்தில் 110கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என குறிப்படப்பட்டு இருந்தது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Tuesday, April 25, 2017, 14:57 [IST]
English summary
Railway To Launch Double-Decker AC Trains With Large Screens. Click for more details
Please Wait while comments are loading...

Latest Photos