தந்தைக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் தந்த சர்பராஸ் கான்!

By Saravana

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் உலக அளவில் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களையே காதல் கொள்ள செய்த இளம் வீரர் மும்பையை சேர்ந்த சர்பராஸ் கான்.

ஒரே ஆட்டத்தில் உலகையே திரும்பி பார்க்க வைத்த அந்த இளம் வீரருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் அவரது குடும்பத்தினரையும், சுற்றுவட்டாரத்தையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான வேளையில், சர்பராஸ் கான் தனது தந்தைக்கு ஓர் சர்ப்ரைஸ் கிஃப்ட்டை அளித்துள்ளார். முதல் சம்பளத்தில், அவர் தனது தந்தைக்கு ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி ஒன்றை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார்.

தந்தையின் கஷ்டம்

தந்தையின் கஷ்டம்

குர்லாவிலிருந்து ஆசாத் மைதானத்துக்கு தினமும் சர்பராஸ் கானை அவரது தந்தை நவுஷத் கான் பைக்கில் அழைத்துச் செல்வாராம். சர்பராஸ் கானுக்கு முதல் கிரிக்கெட் குருநாதர் அவரது தந்தை நவுஷத் கான்தானாம். அவரது ஆர்வத்துக்கு அணை போடாமல், அவரை இந்தளவுக்கு உயர பறக்கச் செய்ததற்கு அவரது தந்தையே முழு காரணமாக அவர் கருதுகிறார்.

 அபாயகரமான பயணம்

அபாயகரமான பயணம்

குர்லாவிலிருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள ஆசாத் மைதானத்துக்கு சர்பராஸ் கானையும், அவரது தம்பி முஷீரையும் பைக்கில் அழைத்துச் செல்வாராம் நவுஷத். அது மிகவும் அபாயகரமான பயணமாக இருந்ததாக நினைவுகூர்ந்துள்ளார் நவுஷத். அவ்வாறு கஷ்டப்பட்ட காலத்தை நினைத்து பார்த்தே முதல் சம்பளத்திலேயே தந்தைக்கு ஒரு காரை வாங்கி பரிசளித்திருக்கிறார் சர்பராஸ் கான்.

முதல் சம்பளத் தொகை

முதல் சம்பளத் தொகை

தொழில்முறை ஆட்டக்காரர் என்ற அந்தஸ்துடன் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் சர்பராஸ் கான் இணைந்தார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தின்போது, சர்பராஸ் கானை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ.50 லட்சத்தை கொடுத்து சர்பராஸ் கானை ஏலத்தில் எடுத்தது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

கார் பரிசு

கார் பரிசு

பெங்களூர் அணி நிர்வாகத்திடமிருந்து 50 லட்ச ரூபாய்க்கான காசோலை கிடைத்தவுடன், முதல் வேலையாக தந்தைக்கு ஒரு ரெனோ டஸ்ட்டரை முன்பதிவு செய்து வாங்கிக் கொடுத்துவிட்டார் சர்பராஸ் கான். இந்த பரிசை அவரது தந்தை நவுஷத் கான் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

டஸ்ட்டர் தோற்றம்

டஸ்ட்டர் தோற்றம்

டஸ்ட்டரின் மிடுக்கான தோற்றம் சர்பராஸ் கானை கவர்ந்துள்ளது. இதுவே தனது தந்தை கம்பீரமாக செல்வதற்கு ஏற்ற வாகனம் என முடிவு செய்து ரெனோ டஸ்ட்டரை வாங்கி பரிசளித்துள்ளார்.

 ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் ரெனோ டஸ்ட்டர், பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. ரூ.9.89 லட்சம் முதல் ரூ.15.18 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எந்தவொரு சாலைப் பயணத்திற்கும் ஏற்றதாக இருப்பதே பலர் இந்த எஸ்யூவியை விரும்புவதற்கு காரணம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
RCB Player Sarfaraz Khan Gifted Reno Duster To His Father.
Story first published: Saturday, May 30, 2015, 16:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X