பென்ட்லீ கார்களில் கஸ்டமைஸ் வசதிகளை எளிதாக பார்க்க வசதி

By Saravana Rajan

கார் வாங்க செல்லும்போது கூடுதல் அலங்காரம் செய்ய விரும்புவர்களுக்கு ஷோரூமில் கூறப்படும் கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் அலங்கார விஷயங்களை அவர்களது வாய் ஜாலங்களை நம்பி கொடுத்துவிட்டு வந்துவிடுவோம். ஆனால், கஸ்டமைஸ் செய்து வாங்கும்போது, நாம் எதிர்பார்ப்பு சமயத்தில் பொய்த்து போய் ஏமாற்றமே மிஞ்சும்.

இதுபோன்ற ஏமாற்றங்களை தவிர்ப்பதற்காக பிரிட்டனை சேர்ந்த பென்ட்லீ சொகுசு கார் நிறுவனம் புதிய வசதியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம், தனது கார்களில் இருக்கும் வசதிகள் மற்றும் கஸ்டமைஸ் ஆப்ஷன்களை மின்னணு தொழில்நுட்ப முறையில் மாற்றியிருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

கடின முயற்சி

கடின முயற்சி

இங்கிலாந்தை சேர்ந்த RealtimeUK என்ற நிறுவனம்தான் இந்த வசதியை உருவாக்கி தந்துள்ளது. கடந்த 6 மாத கால உழைப்பிலும் முயற்சியிலும் இந்த வசதி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இரு மாடல்கள்

இரு மாடல்கள்

பென்ட்லீ முல்சான் மற்றும் பென்ட்லீ பென்டைகா ஆகிய இரு சொகுசு கார்களில் இருக்கும் கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் குறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

தத்ரூபம்

தத்ரூபம்

காரில் இருக்கும் தையல் வேலைப்பாடுகள் மற்றும் சிறு அலங்காரங்களை கூட மிக தத்ரூபமாக வாடிக்கையாளர்கள் பார்க்கும் விதத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

சுற்றி பார்க்கலாம்

சுற்றி பார்க்கலாம்

மேலும், 360 டிகிரி கோணத்தில் கார்களின் உட்புறத்தையும், வெளிப்புற அம்சங்களையும் வாடிக்கையாளர்கள் பார்க்கவும் முடியும்.

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தில் புகைப்படங்களை எடுத்து ஒருங்கிணைப்பதற்காக அமெரிக்க விண்வெளி மையமான நாசா பயன்படுத்திய புதிய வகை மின்னணு நிழற்பட தொழில்நுட்பத்தின் மூலமாக எடுக்கப்பட்ட படங்களை ஒருங்கிணைத்து மிகவும் உயரிய தொழில்நுட்பத்தில் இந்த படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

 அப்ளிகேஷன்

அப்ளிகேஷன்

மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் படங்களை முப்பரிமாணத்தில் காணும் வசதியையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இதனால், இருந்த இடத்திலிருந்தே ஆயிரக்கணக்கான கஸ்டமைஸ் ஆப்ஷன்களை எளிதாக தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படும்.

கையேடு

கையேடு

மின்னணு முறையில் மட்டுமின்றி, பென்ட்லீ பென்டைகா மற்றும் முல்சான் கார்களின் அனைத்து முக்கியத் தகவல்களை உள்ளடக்கிய கையேடுகளிலும் இந்த படங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

 பெருமிதம்

பெருமிதம்

இந்த படங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்று பென்ட்லீ பெருமிதம் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, பல ஆயிரக்கணக்கான கஸ்டமைஸ் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பம்போல் எளிதாக தேர்வு செய்ய முடியும் என்றும் கூறியிருக்கிறது.

Most Read Articles
English summary
RealtimeUK completes digital Bentley Car Project.
Story first published: Saturday, August 13, 2016, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X