எங்களின் பார்வையில் ரெனோ க்விட் கார்... 5 முக்கிய விஷயங்கள்

By Saravana

இந்திய கார் மார்க்கெட்டின் வர்த்தகத்தின் முதுகெலும்பாக இருப்பது நடுத்தர வர்க்கத்தினர்தான். பெரும்பான்மையான கார் மார்க்கெட் நடுத்தர வர்த்தகத்தினரை குறிவைத்தே நடக்கிறது. எனவே, அவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் பட்ஜெட்டுக்கு தகுந்தவாறு புதிய மாடல்களை அறிமுகம் செய்வது என்பது அனைத்து கார் நிறுவனங்களுக்கும் இருக்கும் கடமையாக இருக்கிறது.

இந்த நிலையில், பட்ஜெட் கார் மார்க்கெட்டில் புத்தம் புதிய கார் மாடலை ரெனோ நேற்று சென்னையில் நடந்த விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கார் மாடல் பற்றி ஆட்டோமொபைல் துறை ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் கார்களுக்கு போட்டியாக குறிப்பிடப்பட்டாலும், இதன் டிசைன் மற்றும் வசதிகளில் தனித்துவம் அதிகம். அதாவது, வழக்கமான மாடலாக இல்லாமல், புதிய அம்சங்களுடன் இந்த காரை ரெனோ கார் நிறுவனம் நிலைநிறுத்த உள்ளது. எங்களின் பார்வையில் இந்த காரில் இடம்பெற்றிருக்கும் 5 முக்கிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

01. புத்திசாலி ரெனோ

01. புத்திசாலி ரெனோ

ரெனோ க்விட் காரை கடைசிவரை ஹேட்ச்பேக் மாடல் என்று ஏனோ ரெனோ குறிப்பிடவில்லை. அதாவது, இதனை பட்ஜெட் விலையிலான க்ராஸ்ஓவர் ரகத்தை சேர்ந்த மாடலாக நிலைநிறுத்த ரெனோ விரும்புவது இதன் மூலம் தெரிகிறது. அதாவது, ஃபியட் பான்டா போன்றே இதனை சற்று வித்தியாசப்படுத்தி மார்க்கெட்டிங் செய்ய விரும்புகிறது ரெனோ. இதன்மூலம், ஆல்ட்டோ, இயான் கார்களுடன் நேரடியாக மோதாமல், தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்க முயல்வது தெரிகிறது.

02. க்ராஸ்ஓவர் வரவேற்பு

02. க்ராஸ்ஓவர் வரவேற்பு

இப்போது க்ராஸ்ஓவர் மற்றும் காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கு இந்தியர்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருவது தெரிந்ததே. எனவே, மிகவும் குறைவான விலையிலான க்ராஸ்ஓவர் மாடலாக இதனை நிலைநிறுத்த ரெனோ திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலம், பட்ஜெட் விலையில் ஒரு பிரத்யேக டிசைனிலான காரை இந்தியர்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

03. க்ராஸ்ஓவர் அம்சங்கள்

03. க்ராஸ்ஓவர் அம்சங்கள்

ரெனோ க்விட் காரின் கம்பீரமான முகப்பு க்ரில் அமைப்பு, பெரிய வீல் ஆர்ச்சுகள், சுற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கும் கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங்குகள் போன்றவை இந்த காருக்கு க்ராஸ்ஓவர் அம்சங்களை கொடுக்கிறது. அதேநேரத்தில், பட்ஜெட் மாடல் என்பதால், காருக்கு பொருத்தமில்லாத அளவுடைய சக்கரங்கள் டிசைன் சிறப்பை குலைப்பதையும் குறிப்பிட வேண்டும். மேலும், இந்த கார் 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. அதாவது, மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி அளவுக்கு கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது.

04. சிறப்பம்சங்கள்

04. சிறப்பம்சங்கள்

4 லட்ச ரூபாய்க்கும் குறைவான கார் மார்க்கெட்டில் முதல்முறையாக 2 டின் மியூசிக் சிஸ்டம், 7.0 இன்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. இதுதவிர, முன்புறத்தில் பவர் விண்டோஸ், ஏசி போன்ற அடிப்படை வசதிகளும் இருக்கின்றன. சற்று பிரத்யேகமான டிசைன், கூடுதல் வசதிகள் மற்றும் இந்த செக்மென்ட்டில் சிறப்பான இடவசதி கொண்ட இந்த மாடல் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சத்திற்குள் வர இருப்பது நிச்சயம் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களுக்கு நெருக்கடியை தரும் விஷயமே.

05. தலையெழுத்தை மாற்றுமா?

05. தலையெழுத்தை மாற்றுமா?

டஸ்ட்டர் எஸ்யூவியால் காலத்தை ஓட்டி வரும் ரெனோ கார் நிறுவனம் இந்த புதிய மாடல் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளது. அதாவது, ரெனோவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாடலாக இதனை குறிப்பிடலாம். அதேநேரத்தில், மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் வலுவான சர்வீஸ் கட்டமைப்பு வசதிகளுக்கு மத்தியில் ரெனோ இந்த புதிய மாடல் மூலம் எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
We put together a list of five things you should know about the new Renault Kwid crossover, that should paint a clearer picture as to whether this car actually has the potential to be a game changer or not.
Story first published: Thursday, May 21, 2015, 9:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X