குடியரசு தின விழா விருந்தினராக பங்கேற்ற அபுதாபி இளவரசரின் சொகுசு விமானம்- வீடியோ!

குடியரசு தின விழாவில் பங்கேற்ற அரபு ஷேக்கின் பிரம்மாண்ட சொகுசு விமானம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

By Saravana Rajan

நாட்டின் 68வது குடியரசு தின விழா நேற்று டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த முறை குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தவர் அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யன். இவர் யார் என்பது குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் நேற்று மீடியாக்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.

அபுதாபி இளவரசரின் சொகுசு விமானம்- வீடியோ!

இந்த நிலையில், அவர் பறந்து வந்ததாக கூறி ஒரு சொகுசு விமானத்தின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் இருக்கும் விமானம் 7 நட்சத்திர ஓட்டலைவிட மிக சிறப்பான இன்டீரியர் வடிவமைப்பை பெற்றிருப்பதை காண முடிந்தது.

அபுதாபி இளவரசரின் சொகுசு விமானம்- வீடியோ!

மேலும், படுக்கை வசதிகள், ஓய்வு அறைகள், பெரிய டிவி திரையுடன்கூடிய பொழுதுபோக்கு வசதிகள் என ஒரு பறக்கும் மாளிகையாகவே அந்த விமானம் காட்சியளிக்கிறது.

அபுதாபி இளவரசரின் சொகுசு விமானம்- வீடியோ!

அந்த விமானத்தில் மூன்று பணிப்பெண்களும் உதவிகளை செய்ய தயார் நிலையில் இருக்கின்றனர். இதுபோன்றே, இவரது குடும்பத்தை சேர்ந்த பலரும் மிக சொகுசான தனி நபர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அபுதாபி பட்டத்து இளவரசரின் சொகுசு விமானம் என்று கூறி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோவை காணலாம்.

அபுதாபி இளவரசரின் சொகுசு விமானம்- வீடியோ!

அபுதாபி இளவரசர் முகம்மது பின் சயீத் அல் நஹ்யனின் சகோதரரான ஷேக் ஹமாத் பின் ஹம்தன் அல் நயான் பற்றி அடிக்கடி டிரைவ்ஸ்பார்க் தளத்தில் செய்தி படித்திருப்பீர்கள். அதாவது, புருனே மன்னருக்கு அடுத்ததாக உலகிலேயே அதிக கார்களை வைத்திருக்கும் கார் ஆர்வலராக இவரை குறிப்பிட்டு எழுதியிருக்கிறோம்.

அபுதாபி இளவரசரின் சொகுசு விமானம்- வீடியோ!

முகம்மது பின் சயீத் அல் நஹ்யனின் சகோதரர் ஷேக் ஹமாத் பின் ஹம்தன் கார்களுக்காக பிரத்யேகமான பிரம்மாண்டமான அருங்காட்சியகத்தை அமைத்து பராமரித்து வருகிறார். இவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம் கேட்போரை வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது.

அபுதாபி இளவரசரின் சொகுசு விமானம்- வீடியோ!

ஹமாத் அல் நஹ்யாமிடம் 400க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. தினசரி பயன்படுத்தும் சொகுசு கார்கள் தவிர்த்து, தன்னிடம் உள்ள அரிய வகை கார்கள் உள்ளிட்ட வாகனங்களை பராமரிப்பதற்காக பிரம்மாண்ட மியூசியத்தை அமைத்துள்ளார். பிரமிட் வடிவிலான இந்த மியூசியத்தை அபுதாபியிலிருந்து 45 நிமிடங்கள் பயண தொலைவில் உள்ளது.

அபுதாபி இளவரசரின் சொகுசு விமானம்- வீடியோ!

இந்த மியூசியத்தில் முத்தாய்ப்பான விஷயம். உலகின் மிகப்பெரிய டிரக் இங்குதான் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. டாட்ஜ் பவர் வேகன் டிரக்கின் மாதிரி மாடலாக இந்த பிரம்மாண்ட டிரக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிரக் 50 டன் எடை கொண்டது. இந்த டிரக்கில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட 4 பெரிய அறைகள் உள்ளன.

அபுதாபி இளவரசரின் சொகுசு விமானம்- வீடியோ!

வரவேற்பு கூடம், குளியல் அறைகளும் இந்த டிரக்கில் உள்ளன. டாட்ஜ் வேகன் டிரக்கைவிட உருவத்தில் 64 மடங்கு இந்த டிரக் பெரியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த டிரக்கில் 6 சிலிண்டர்களுடன் 300 குதிரைசக்தி திறன் பெற்ற எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற விசித்திரமும், வித்தியாமும் நிறைந்த பல கார்களும், வாகனங்களும் இவரது மியூசியத்தில் இடம்பெற்றுள்ளன.

அபுதாபி இளவரசரின் சொகுசு விமானம்- வீடியோ!

ஷேக்கின் வாகன ஆர்வத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை நினைவுகூறலாம். இவரது திருமணத்தின்போது 7 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை வாங்கி, ஒவ்வொரு காருக்கும் வானவில்லில் உள்ளதுபோன்று ஒவ்வொரு வண்ணத்தை தீட்டினாராம். வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ண பென்ஸ் காரில் செல்வது வழக்கமாக கொண்டிருந்தார்.

அபுதாபி இளவரசரின் சொகுசு விமானம்- வீடியோ!

இந்த பென்ஸ் கார்களை தயாரிப்பதற்காகவே, மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் வழக்கமான கார்களின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இந்த கார்கள் தயாரிக்கப்பட்டன. இந்த பென்ஸ் கார்களை வாங்கிய பிறகு, இவரை அனைவரும் ரெயின்போ ஷேக் என்றே செல்லமாக குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு கார் மற்றும் வாகனங்கள் ஈடுபாடு கொண்டவர்.

அபுதாபி இளவரசரின் சொகுசு விமானம்- வீடியோ!

தற்போது இந்த ரெயின்போ பென்ஸ் கார்கள் பிரமிட் மியூசியத்தில் காட்டி பொருளாகிவிட்டன. இதுபோன்று பல சுவாரஸ்யமான பின்னணி கொண்ட கார்கள் இவரது மியூசியத்தில் ஏராளமாக உள்ளன.

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்கள்!

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்களை கண்குளிர கண்டு மகிழுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Republic Day chief guest Abu Dhabi crown prince’s luxury aircraft.
Story first published: Friday, January 27, 2017, 13:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X