ஓட்டுநர் இல்லாமல் சாலையில் ஓடிய பைக் ஏற்படுத்திய பரபரப்பு..!!

Written By:

ஓட்டுநர் உட்பட யாருமே இல்லாமல் சாலையில் பயணித்த மோட்டார்சைக்கிள் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஓட்டுநர் இல்லாமல் மோட்டார்சைக்கிள் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

இதனைக் கண்ட வாகன ஓட்டி ஒருவர் உண்மையில் இந்த பைக்கை படங்களில் வருவதைப் போன்று பேய் (கோஸ்ட்) தான் ஓட்டிவருகிறதா என அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்த நிலையில், அந்த பைக் எப்படி ஓடியது என்ற மர்மம் தற்போது விலகியுள்ளது.

இந்த வீடியோவை எடுக்கும் ஒரு சில வினாடிகளுக்கு முன்னர் தான் அந்த பைக்கை ஓட்டிவந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் விபத்தில் சிக்கியுள்ளார்.

அந்த இளைஞர் மற்றொரு மோட்டார்சைக்கிளுடன் மோதியதில் தனது பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வாகனஓட்டி ஒருவர் அடிபட்ட இளைஞரை மீட்டுள்ளார்.

எனினும் அந்த இளைஞர் வந்த பைக்கை மட்டும் அந்த இடத்தில் காணவில்லை, இருவரும் அவர்களின் காரில் சிறிது தூரம் சென்று பைக்கை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் அந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டொரு நாட்களுக்கு பின்னர் காவல்துறையினர் அந்த கோஸ்ட் மோட்டார்சைக்கிளை, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்து மீட்டுவிட்டதாக அந்த இளைஞருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

க்ரூசர் மோட்டார்சைக்கிள்களில் கார்களில் இருப்பதைப் போன்று க்ரூஸ் கண்ட்ரோல் என்ற அம்சம் இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் ஆக்ஸிலரேட் செய்யாமலே வாகனத்தை குறிப்பிட்ட தூரம் வரை இயக்க இயலும். அதைப்போன்ற அம்சம் எதுவும் இந்த கோஸ்ட் மோட்டார்சைக்கிளில் இருந்ததா என்ற விவரம் உறுதியாக தெரியவில்லை.

என்றாலும் கோஸ்ட் மோட்டார்சைக்கிள் என்ற பெயரில் இந்த வீடீயோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வரும் அந்த வீடியோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணுங்கள்..

English summary
Read in Tamil about Video of ghost rider: bike which run without driver
Please Wait while comments are loading...

Latest Photos