இந்தியாவில் முதல் முறையாக நடந்த பைக் ரைடர்களுக்கான பிரத்யேக இசைத் திருவிழா!

ரைடர்களுக்கென இந்தியாவில் முதல் முறையாக இசை நிகழ்ச்சி ஒன்றினை பிரம்மாண்ட அளவில் நடத்தியுள்ளனர். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

இசை என்பதும் ரைடிங் என்பது தனித்தனி கலாச்சாரமாகவே இருந்து வருகிறது. அவ்விரண்டையும் இன்றினைத்து, பல்வேறு சிறப்புகளுடன் ஆரவாரமான பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று இந்தியாவில் முதல் முறையாக அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக பைக் ரைடர்களுக்கான இசைத் திருவிழா

தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ‘ரைடர்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவல்' என்ற பெயரில் இருசக்கர வாகன சாகச ஓட்டுனர்கள் அல்லது ரைடர்கள் என்ற அடைமொழியுடன் கம்பீரமாக வலம்வோருக்கு என பிரத்யேகமாக ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வெறும் இசை நிகழ்ச்சியாக மட்டும் அது நடத்தப்படவில்லை.

இந்தியாவில் முதல் முறையாக பைக் ரைடர்களுக்கான இசைத் திருவிழா

இருசக்கர சாகசங்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சி, டாட்டூ, பைக் கஸ்டமைசேஷன், உணவுத் திருவிழா, பைக் பேரணி என அட்டகாசமான நிகழ்ச்சிகளுடன் ஒரு உற்சாக அனுபவவத்தை, ரைடர்களுக்கு வழங்கியது ‘ரைடர்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவல்'.

இந்தியாவில் முதல் முறையாக பைக் ரைடர்களுக்கான இசைத் திருவிழா

இசைத் திருவிழா நடைபெற்ற இருதினங்களுமே தங்கள் பைக்குகளில் டெல்லியை கம்பீரமாக வலம் வந்தனர் ரைடர்கள், இந்த பைக் பேரணி முதலில் செங்கோட்டையில் துவங்கி, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நிறைவடைந்தது. தங்களின் பைக்குகளின் கம்பீரத்தை வெளிக்காட்டும் விதத்தில் பேரணி அமைந்த போதிலும், பொதுமக்களும் அவற்றை காண நேர்ந்ததால் உற்சாகம் கொண்டனர்.

இந்தியாவில் முதல் முறையாக பைக் ரைடர்களுக்கான இசைத் திருவிழா

இந்த அரிய நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த ரெட் எஃப்எம் மற்றும் ஃபீனீக்ஸ் லைவ் ஆகியவை கைகோர்த்தன. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 20 அமைப்புகள் மற்றும் சில நிறுவனங்களும் ஆதரவு அளித்தன. மேலும் 16க்கும் மேற்பட்ட பிரபலக் கலைஞர்கள் நிகழ்ச்சியை கலகலப்பாக்க உதவினர்.

இந்தியாவில் முதல் முறையாக பைக் ரைடர்களுக்கான இசைத் திருவிழா

லக்கி அலி, ஹரி, ஷுக்மானி, குட்டில் கான் போன்ற பிரபல இசைக்கலைஞர்களும், கனன் கில் மற்றும் கெனி செபாஸ்டியன் போன்ற பிரபல காமெடி நட்சத்திரங்களும் தங்கள் திறனை வெளிபடுத்தி ரைடர்களை மகிழ்வித்தனர். இதோடு லோக்கல் ட்ரெயின், வோக்ட்ரோனிகா போன்ற சில முன்னனி இசைக்குழுவினரும் பங்கேற்று கலகலப்பூட்டினர்.

இந்தியாவில் முதல் முறையாக பைக் ரைடர்களுக்கான இசைத் திருவிழா

இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ரெட் எஃப் எம்மின், முதன்மை இயக்க அலுவலர் நிஷா நாராயணன் பேசியபோது, "முதல் முறையாக இந்தியாவில் ரைடர்களையும் இசையையும் ஒருங்கிணைத்து அதனை கலகலப்புடன் நடத்தி ரைடர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தை அளித்துள்ளோம், இது வேறுபட்ட ஒரு அனுபவத்தையும் வழங்கியுள்ளது" என்றார்.

இந்தியாவில் முதல் முறையாக பைக் ரைடர்களுக்கான இசைத் திருவிழா

மேலும், அவர் தெரிவித்தபோது இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களிலும் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படும் என கூறினார். மிகவும் வண்ணமயமான இந்நிகழ்ச்சியில் மொத்தம் 15,000 ரைடர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா ஆஃப்ரிகா டிவின் பைக்கின் படங்கள்:

Most Read Articles
English summary
The Rider's Music Festival had more than 16 music artists performing at the venue; it also had grub stations and food trucks, and flea markets.
Story first published: Tuesday, February 21, 2017, 12:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X