தலைகீழாக ஓடும் விசித்திரமான பிக்கப் டிரக்...!!

By Saravana

ஃபோர்டு பிக்கப் டிரக் ஒன்றை தலைகீழாக செல்லும் வகையில், சக்கரங்களை பொருத்தி வினோதமாக மாற்றியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ரிக் சுல்லிவான் என்ற மெக்கானிக்.

விசித்திரமான தோற்றத்துடன் சாலையில் செல்லும்போது, வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் இந்த பிக்கப் டிரக் திரும்பி பார்க்கவைப்பதோடு, சமயத்தில் மிரட்சியையும் ஏற்படுத்துகிறதாம்.

01.ஐடியா

01.ஐடியா

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம், கிளின்ட்டன் என்ற இடத்தில் ஒரு கார் ஒர்க்ஷாப்பை ரிக் சுல்லிவான் தனது மனைவி கதேயுடன் சேர்ந்து நடத்தி வருகிறார். இந்த ஒர்க்ஷாப்பில் தலைகீழாக கிடத்தப்பட்டிருந்த ஒரு பிக்கப் டிரக்கை பார்த்ததும்தான் இந்த ஐடியா வந்ததாம். இந்த டிரக் தலைகீழாக ரோட்டில் சென்றால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்து, உடனே வடிவமைக்கத் துவங்கிவிட்டார்.

02. அதெல்லாம் இல்லீங்க

02. அதெல்லாம் இல்லீங்க

இந்த தலைகீழ் பிக்கப் டிரக்கை வடிவமைக்க அடிப்படை அளவீட்டுத் தகவல்கள் கொண்ட வடிவமைப்பு வரைபடங்கள், நுட்பங்கள் எதுவும் இல்லாமல், தனது கற்பனையில் தோன்றியதை வைத்து வடிவமைத்தாராம்.

 03. பிக்கப் டிரக் மாடல்

03. பிக்கப் டிரக் மாடல்

இவர் இரண்டு பிக்கப் டிரக் மாடல்களை பயன்படுத்தி இந்த தலைகீழ் பிக்கப் டிரக்கை உருவாக்கியுள்ளார். 1991 ஃபோர்டு ரேஞ்சர் மற்றும் 1995 ஃபோர்டு எஃப்- 150 பிக்கப் டிரக்குகளின் பாகங்களை பயன்படுத்தியுள்ளார்.

04. உதிரிபாகங்கள்

04. உதிரிபாகங்கள்

ஃபோர்டு எஃப்-150 பிக்கப் டிரக்கின் உதிரிபாகங்களை பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கி பயன்படுத்தியுள்ளார். ஃபோர்டு ரேஞ்சர் பிக்கப் டிரக்கின் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் சிஸ்டத்தை சேர்த்து இந்த பிக்கப் டிரக்கை உருவாக்கியுள்ளார்.

05. வினோத தோற்றம்

05. வினோத தோற்றம்

நான்கு சக்கரங்கள் மேலே பார்த்து பொருத்தியிருக்க, வெளியில் தெரியாத அளவு கீழே பொருத்தப்பட்டிருக்கும் சக்கரங்களில் அந்த பிக்கப் டிரக் தலைகீழாக செல்வது வினோதமாக வாகனமாக இதனை காட்டுகிறது.

06. லைசென்ஸ் பிளேட்

06. லைசென்ஸ் பிளேட்

இந்த காருக்கு FLIPOVER என்று நம்பர் பிளேட் பொருத்தியுள்ளனர். மேலும், சாலையில் இயக்குவதற்கு அனுமதிப்பெற்றிருக்கும் ஒரே தலைகீழ் வாகனம் என்பதற்கு பொருத்தமாக இதன் நம்பர் பிளேட்டும் அமைந்துள்ளது.

07.சாலை நாயகன்

07.சாலை நாயகன்

ஒவ்வொரு நாளும் சாலையில் செல்லும்போது இந்த பிக்கப் டிரக்கை வைத்து ஆயிரத்திற்கும் அதிகமான படங்கள் எடுக்கப்படுவதாக ரிக் சுல்லிவான் தெரிவித்தார். மேலும், பல இடங்களில் தன்னை நிறுத்தி இந்த பிக்கப் டிரக்கை பற்றி கேட்பது மகிழ்ச்சி தரும் விஷயம் என்கிறார் ரிக்.

 08.. கடின முயற்சி

08.. கடின முயற்சி

சுமார் 6 மாதகாலம் எடுத்துக் கொண்டு இந்த தலைகீழாக செல்லும் பிக்கப் டிரக்கை உருவாக்கியுள்ளார்.

09. செலவு

09. செலவு

6,000 டாலர்களை செலவினத்தில் இந்த தலைகீழ் பிக்கப் டிரக்கை உருவாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
What's the strangest pickup truck you have seen? Get behind the wheel of this pickup truck and you will surely turn heads.
Story first published: Thursday, March 26, 2015, 15:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X