தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் தார் சாலை?

By Saravana
Thar Road
தார் சாலைகள் வெகு சீக்கிரம் சேதமடைவதை தவிர்க்கும் புதிய தொழில்நுட்பத்தை டெல்ஃப்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் எரிக் சிலாஞ்சன் கண்டுபிடித்துள்ளார். இந்த புதிய யுக்தியை கொண்டு அமைக்கப்படும் சாலைகள் நீண்ட நாட்கள் சேதமடையாது என்பதால் பராமரிப்பு மற்றும் புதிய சாலை அமைப்பதற்கான செலவீனம் வெகுவாக குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சாலைகள் சீக்கிரம் சேதமடைவதற்கு தார் சாலையின் மேல் அதிக அளவில் துளைகள் மற்றும் ஓட்டைகள் இருப்பதும் காரணம். இதனை தவிர்க்கும் வகையில், தாருடன் ஸ்டீல் ஃபைபர் இழைகளை கலந்து சாலைகளை அமைக்கும் யுக்தியை கண்டறிந்துள்ளோம்.

இதன்மூலம், பகல் வேளையில் அல்லது வெயில் நேரத்தில் தாருடன் கலந்திருக்கும் ஸ்டீல் ஃபைபர்கள் வெப்பமடைந்து தாரை உருகச் செய்து சிறு துளைகள் மற்றும் வெடிப்புகளை அடைத்துவிடும். இதனால், சாலை சீக்கிரத்தில் சேதமடையாது. பொதுவாக நன்கு அமைக்கப்படும் சாலைகள் 8 ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும்.

ஆனால், இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அமைக்கப்படும் சாலைகள் இருமடங்கு கூடுதல் ஆயுளை வழங்கும் என்று கூறினார். இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெதர்லாந்தில் 400 மீட்டருக்கு சோதனை முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில் சாலை பராமரிப்பு மற்றும் புதிய சாலை அமைப்பதற்கான செலவீனம் வெகுவாக குறையும் என நம்பலாம்.

Most Read Articles
Story first published: Monday, April 15, 2013, 12:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X