நானோ காரில் ஓர் 'மேக்ரோ' பயணம்... டிரைவ்ஸ்பார்க் வாசகரின் பயண அனுபவம்!

இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக ஓர் சிறந்த நான்குசக்கர போக்குவரத்து வாகனமாக நானோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், நடுத்தர வர்க்கத்தினரின் கார் கனவை நிறைவேற்றும் விலையிலும் மிக குறைவான விலை மாடலாக இந்த கார் விற்பனைக்கு வந்தது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின் கலவையான விமர்சனத்திற்குள்ளானாலும், தேவை உள்ளவர்களுக்கு நானோ கார் மதிப்பு மிக்க வாகனமாகவே மாறியிருக்கிறது. இன்றைக்கும் பல குடும்பத்தினரின் பட்ஜெட்டிற்கு ஏற்ற மாடலாக மட்டுமின்றி, அனைத்து போக்குவரத்து தேவைகளையும் எளிதாக பூர்த்தி செய்யும் ஓர் சிறந்த போக்குவரத்து சாதனமாக நானோ விளங்கி வருகிறது.

இதனை மெய்ப்பிக்கும் வகையில், பெங்களூரை சேர்ந்த எமது வாசகர் எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் நானோ காரில் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு 1960 கிமீ தூரம் பயணித்து வந்துள்ளார். தனது பயணத்தையும், நானோ காரின் பங்களிப்பு பற்றிய அனுபவத்தையும் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.


நானோவில் பயணம்

நானோவில் பயணம்

நீண்ட தூர பயணத்தின்போது நானோ காரின் செயல்பாடுகள் பற்றி அடுத்தடுத்த ஸ்லைடுகளில் ரவிக்குமார் விவரிக்கிறார். வாருங்கள் நாமும் இணைந்து பயணிக்கலாம்.

 பயணத் திட்டம்

பயணத் திட்டம்

பெங்களூரில் பணிபுரிந்து வரும் ரவிக்குமார், தமிழ்நாடு,கேரளா உள்ள வழிபாட்டு தலங்களுக்கு தனது குடும்பத்தினருடன் நானோ காரில் பயணம் செய்து நஞ்சன்கூடு வழியாக பெங்களூர் திரும்பியுள்ளார். மொத்தம் 8 நாட்கள் நானோ காரில் பயணித்ததுடன், தென் இந்தியாவின் முக்கிய கடற்கரையோர சாலைகளையும் தொட்டு வந்துள்ளார்.

 கலாச்சார பயணம்

கலாச்சார பயணம்

தென் இந்திய கலாச்சாரம் மற்றும் கட்டட கலையின் மாண்பை பரைசாற்றும் விதத்தில் அமைந்திருக்கும் கோயில்களில் சாமிதரிசனம் செய்யவும், அந்த கோயில்களின் கட்டட கலையின் சிறப்பையும் பார்க்கும் திட்டத்தோடு இந்த பயணத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார். மதுரை, திருப்பறங்குன்றம், பழமுதிர்சோலை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், சோட்டானிக்கரை, குருவாயூர் மற்றும் நஞ்சன்கூடு ஆகிய இடங்களுக்கு சென்று வந்ததாக தெரிவித்துள்ளார்.

 நானோ கார் மாடல்

நானோ கார் மாடல்

ரவி பயணம் மேற்கொண்ட நானோ கார் 2011ம் ஆண்டு மாடலின் எல்எக்ஸ் வேரியண்ட். இதுவரை 27,143 கிமீ தூரம் ஓடியிருக்கிறது. இந்த பயணத்தின்போது மணிக்கு 80 கிமீ முதல் 110கிமீ வேகத்தில் பயணித்தாக தெரிவித்தார். முழுவதுமாக ஏசி பயன்படுத்தியதாகவும், லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் கொடுத்ததாகவும் கூறி மெய்சிலிர்க்கிறார்.

 சிறந்த அனுபவம்

சிறந்த அனுபவம்

நானோ காரின் 624சிசி எஞ்சின் எவ்வித பிரச்னையும் இன்றி பயணத்தை நிறைவு செய்ய உதவி செய்ததாக ரவி கூறினார். நகர்ப்புறத்துக்கான மாடல் மட்டும் என்றில்லை, நெடுஞ்சாலையிலும் சிறப்பான செயல்திறனை இதன் எஞ்சின் வழங்குவதாக அவர் கூறினார்.

 பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

டாடா நானோ காரில் 4 பெரியவர்களும், 2 சிறுவர்களும் பயணித்தாக தெரிவித்தார். சிறிய காராக இருந்தாலும் சிறப்பான இடவசதியை அளிப்பதும் இதன் ஸ்பெஷாலிட்டி என தனது நானோ காரை பற்றி புகழ்ந்து கூறுகிறார். பயணத்தில் அனைவரும் சவுகரியமான உணர்வுடன் பயணித்ததற்கு இடவசதியும் முக்கிய காரணமாக குறிப்பிட்டார்.

4வது நீண்ட தூர பயணம்

4வது நீண்ட தூர பயணம்

தனது நானோ காரில் ஏற்கனவே, மூன்று முறை நீண்ட தூர பயணங்களை மேற்கொண்டதாக ரவி தெரிவித்தார். முதல் தடவையில் தர்மஸ்தலா, குக்கே சுப்ரமணியா, கொல்லூர், சிருங்கேரி, உடுப்பி, முருடேஷ்வர் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு சென்று வந்துள்ளார். இரண்டாவது முறை, மஹாநதி, ஸ்ரீசைலம் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு சென்று வந்ததாகவும், மூன்றாவது முறை பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்ததாகவும் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

 குறையொன்றுமில்லை...

குறையொன்றுமில்லை...

"எனது அனைத்து தேவைகளையும் நானோ கார் சிறப்பாக பூர்த்தி செய்கிறது. கொடுக்கும் பணத்திற்கு சிறப்பான பயன்பாட்டை நானோ அளிக்கிறது, என்று கண்களில் மகிழ்ச்சி ததும்ப பேசுகிறார் ரவி. நானோ காரின் வைத்திருப்பதில் மகிழ்ச்சி கொள்ளும் வாடிக்கையாளர்களில் ரவியும் ஒருவர் என்றால் மிகையில்லை.

நானோ சிறப்பம்சங்கள்

நானோ சிறப்பம்சங்கள்

வாசகர் ரவிக்குமார் கூறியதை கேட்டு உங்களுக்கும் நானோ கார் வாங்கும் ஆசை பிறந்துவிட்டதா. அப்படியானால், இந்த காரில் இருக்கும் அனைத்து சிறப்பம்சங்களையும் தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

டாடா நானோ கார் சிறப்பம்சங்கள்

Most Read Articles
English summary
One of our avid readers, Mr. Ravi Kumar KS, has taken his Tata Nano for a 1,960 kilometre trip around south India, with his family. Mr. Ravi travelled three states in his Nano, visiting temples and just absolutely adores the Nano.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X