சிம்லா டூ லே... இமயமலையில் ஓர் சிலிர்ப்பான பயணம்

உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றான இமயமலை உலக அளவில் சாகச பிரியர்களை ஈர்த்து வருகிறது. சாகச பிரியர்கள் விரும்புவதை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் த்ரில்லையும், மறக்க முடியாத அனுபவங்களையும் இமயமலை பயணங்கள் கொடுத்து வருகின்றன.

உலகின் மிக உயரமான மோட்டார் வாகன பாதை அமைந்துள்ள இமயமலைக்கு செல்வதை பலரும் விரும்புகின்றனர். அதுபோன்று திட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக இந்த செய்தியை வழங்குகிறோம். இமயமலையின் லே பகுதிக்கு செல்வதற்கு பல வழிகள் இருந்தாலும், ஸ்பிட்டி பள்ளாத்தாக்கிலிருந்து லே பகுதிக்கு செல்லும் வழிகாட்டுதல்களை காணலாம். மேலும், லே பயணத்திற்கு ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டம் சிறப்பானதாக இருக்கும்.


பயணத்தை துவங்குவோம்...

பயணத்தை துவங்குவோம்...

இந்த படத்தை பார்த்தவும் எழும் ஆவலை பூர்த்தியாக்கும் விதத்தில், லே பயணத்தை அடுத்த ஸ்லைடிலிருந்து துவங்குவோம் வாருங்கள்.

சிம்லா

சிம்லா

இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவிலிருந்து லே பயணத்தை துவங்குவது சிறந்தது. தேனிலவு செல்வோரின் சொர்க்கபூமியாக கருதப்படம் சிம்லா கடல்மட்டத்திலிருந்து 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சிம்லாவின் பனிமலைச் சிகரமான குஃப்ரி ஹில்ஸ் பகுதியும் பார்க்க வேண்டிய ஒன்று. வெறும் 10,000 மக்கள் தொகை கொண்ட நகரமாக இருந்த சிம்லா தற்போது 2 லட்சம் மக்கட்தொகை கொண்ட மலை நகரமாக மாறியுள்ளது.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள்

சிம்லாவிலிருந்து இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னாவூர் மாவட்டத்திலுள்ள சங்லா என்ற இடத்திற்கு ஓர் இனிய பயணத்தை அனுபவித்து செல்லலாம். இந்த பயணம் இந்தோ- திபெத் நெடுஞ்சாலை வழியாக தொடரும். செயின்ஞ் என்ற இடத்தில் பிரியும் சாலையில் திரும்பி ஜலோரி கணவாயை கடந்து பயணத்தை தொடர வேண்டும். ஜலோரி கணவாய் கடல் மட்டத்திலிருந்து 3,120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சாலைகள் மிக குறுகலாகவும், செங்குத்தாகவும் இருக்கும். மலை உச்சியை அடைந்தவுடன் ஏராளமான தேநீர் விடுதிகள், ஓட்டல்களும் இருக்கின்றன. மேகி நூடுல்ஸ், ரஜ்மா கறியுடன் அரிசி சாதமும் கிடைக்கின்றன.

Picture credit: Wiki Commons

Sankara Subramanian

 இயற்கை எழில்

இயற்கை எழில்

அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்பதுபோல இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை அமைப்புக்கு இடையே ஆபத்து நிறைந்த குறுகிய சாலை வழியாக பயணத்தை தொடரவேண்டும். மலை உச்சியை அடைந்ததும் மீண்டும் கிடுகிடுவென பள்ளத்தாக்கில் சாலை இறங்குகிறது. சட்லெஜ் ஆற்றுடன் இணைந்து மீண்டும் நெடுஞ்சாலையை பிடிக்க வேண்டும். அங்கிருந்து சங்லா என்ற இடத்திற்கு செல்லும் சாலையும் குறுகலாகவே இருக்கின்றன. அதேசமயம் இந்த பாதை மிக ரம்மியமான பயண அனுபவத்தை வழங்கும்.

 சங்லாவில் கேம்ப்

சங்லாவில் கேம்ப்

அன்றைய தினம் தங்குவதற்கான இடம் சங்லாதான். கூடாரம் அல்லத ஓட்டல்களில் அறை எடுத்து இங்கே இரவு தங்கலாம்.

 மூன்றாம் நாள்...

மூன்றாம் நாள்...

சங்லாவிலிருந்து அடுத்ததாக ரெக்காங் பியோ என்ற இடத்தின் வழியாக நாகோ என்ற இடத்திற்கு செல்ல வேண்டும். இதுவும் செங்குத்தான மலைகளை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இங்குள்ள ஏரி சுற்றுலாப் பிரியர்களை கவர்ந்த ஒன்று. உலகின் மிக உயரமான இடத்திலுள்ள கிராமம்தான் நாகோ.

 காப் பாலம்

காப் பாலம்

நாகோவிற்கு செல்லும் வழியில் சட்லெஜ் ஆறும், ஸ்பிட்டி ஆறும் காப் என்ற இடத்தில் கலக்கின்றன. இந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாலமும் புகைப்பட விரும்பிகளுக்காக அமைக்கப்பட்டது போன்றே இருக்கிறது. இங்கிருந்து 18 கிமீ தொலைவில்தான் திபெத் அமைந்துள்ளது.

 சாலைகள் மோசம்

சாலைகள் மோசம்

இங்கு சாலைகள் மிக மோசமாக இருக்கின்றன. இந்த வழியில்தான் பிரபலமான தபோ மற்றும் தான்கர் மடலாயங்கள் அமைந்துள்ளன. மடலாயங்களின் வாயில்களில் சில கடைகள் இருக்கின்றன.

புத்த மடலாயம்

புத்த மடலாயம்

தபோ மடலாயத்திலிருந்து சிறிது தூரம் கடந்து சென்றால் தன்கர் மடலாயம் வந்துவிடுகிறது. இது கடல்மட்டத்திலிருந்து 3,894 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு ராஜாவின் தலைநகராக செயல்பட்டது.

 ஸ்பிட்டி பள்ளத்தாக்கு

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு

இப்போது ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியில் நுழைந்துவிடுகிறோம். பவுத்த மத வலிமைக்கு சான்றான பகுதியாக விளங்குகிறது. அங்கிருக்கும் புத்த பிக்குகளின் வரவேற்பும், கனிவும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

 இரவு கேம்ப்

இரவு கேம்ப்

நான்காம் நாள் இரவு காஸா என்ற இடத்தில் தங்கலாம். ஏராளமான ஓட்டல்கள் இருக்கின்றன. ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் தற்போதை தலைநகரம் கஸாதான். மேலும், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையம் இங்குதான் உள்ளது. இந்த இடம் கடல்மட்டத்திலிருந்து 3,650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

 ஐந்தாம் நாள்...

ஐந்தாம் நாள்...

ஐந்தாம் நாள் பயணத்தை காலங்கார்த்தாலே துவங்குவது உசிதம். ஏனெனில், சற்று நீண்ட பயணத்தை அன்று மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஏராளமான ஆறுகள், பனிக்கட்டிகள் உருகிச் செல்லும் சாலைகள் என ஆபத்துக்களும் அதிகம். கடல் மட்டத்திலிருந்து 4,551 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குன்சும் லா கணவாய் வழியாக பயணத்தை தொடர வேண்டும்.

காந்த கல் மடலாயம்

காந்த கல் மடலாயம்

வழியில் இருக்கும் சிறிய மடலாயம் தென்படுகிறது. அதனை ஒரு சுற்று சுற்றி வந்து நெடுஞ்சாலையில் ஏறிக் கொள்கின்றனர். இந்த மடலாயத்தில் பிரார்த்தனைகள் செய்தபின் அங்கிருக்கும் கல் மீது நாணயத்தை ஒட்ட வேண்டுமாம். அப்படி நாணயம் கல்லோடு ஒட்டிக் கொண்டால் நல்ல மனதுக்காரர்கள், பிரார்த்தனை நிறைவேறிவிடும் என்று அங்குள்ளவர்கள் அர்த்தம் கற்பிக்கின்றனர்.

கீலாங்

கீலாங்

பிரார்த்தனையை முடித்துக் கொண்டு அங்கிருந்து கேலாங் என்ற இடத்திற்கு பயணம் தொடர்கிறது. கண்ணுக்கு எட்டியதூரம் வானுயர்ந்த மலைகளும், பரந்துவிரிந்த மண் பரப்புமாக காணப்படுகிறது. கீலாங் வரையிலான 50 கிமீ தூரம் இதே மாதிரியான சாலையே காணப்படுகிறது.

 கடைசி பெட்ரோல் நிலையம்

கடைசி பெட்ரோல் நிலையம்

கீலாங்கை அடைவதற்கு முன்பாக தண்டி என்ற இடத்தில் பெட்ரோல் நிலையம் உள்ளது. லே செல்லும் வழியில் இருக்கும் கடைசி பெட்ரோல் நிலையம் இதுதான். எனவே, இங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் டேங்க்கை முழுமையாக நிரப்பிக் கொள்வது நல்லது. அடுத்து கீலாங்கை தொட்டால் மிக அழகிய சிறிய நகரமாக காட்சியளிக்கிறது. இந்த இடம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் கனிவான உள்ளூர் வாசிகளால் கவர்கிறது. பாராகிளைடிங்கிற்கு புகழ்பெற்ற இடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது நாள்...

ஆறாவது நாள்...

ஆறாவது நாள் பயணத்தை சற்று சாவகாசமாக துவங்கலாம். கீலாங்கிலிருந்து இன்று சார்ச்சு என்ற இடத்தை தொடுவது இலக்கு. இமாச்சலப் பிரதேசத்தின் மிக உயரமான கணவாயாக கூறப்படும் பரலாச்சலா வழியாக இன்றைய பயணம் அமைகிறது. கடல் மட்டத்திலிருந்து 4,950 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த பகுதியில் அமைந்துள்ளது. இந்த சாலையை அடிக்கடி ராணுவத்தினர் பயன்படுத்துவதால் சாலை சிறப்பானதாக தெரிகிறது.

 புத்துணர்வுக்கான இடம்

புத்துணர்வுக்கான இடம்

இந்த கணவாய்க்கு முன்னதாக வழியில் ஸிங்ஸிங்பார் என்ற இடம் புத்துணர்வு பெறுவதற்கான இடமாக கூறலாம். இங்கு சில கடைகள் இருக்கினறன. இங்கு தேனீர் மற்றும் மேகி நூடுல்ஸ் கிடைக்கின்றன.

 கூடார வசதி

கூடார வசதி

கணவாயை தாண்டி வேகமாக சாலை வழியாக சார்ச்சு என்ற இடத்தை தொட்டுவிடலாம். அங்குதான் அன்றைய இரவு பொழுதை கழிக்க வேண்டும். அங்கு ஓட்டல்கள் எதுவும் கிடையாது. சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கம் கூடாரத்தில்தான் இரவு பொழுதை கழிக்க வேண்டும். மேலும், இந்த பயணத்தில் மிக உயரமான தங்கும் இடமாகவும் இதனை குறிப்பிடலாம்.

சார்ச்சு டூ லே

சார்ச்சு டூ லே

ஆறுகள், நீரோடைகள் கடப்பதோடு, லாச்சுலங்லா மற்றும் நகீலா ஆகிய இரண்டு கணவாய்கள் தாண்டி பயணத்தை சமவெளிகள் வழியாக லே நோக்கி தொடர வேண்டும்.

உயரமான வாகன சாலை

உயரமான வாகன சாலை

உலகின் இரண்டாவது உயரமான சாலை 5,328 மீட்டர் உயரத்தில் உள்ள உலகின் இரண்டாவது உயரமான வாகன சாலையில் பயணம் தொடர்கிறது. பள்ளம், மேடுகள் நிறைந்த இந்த சாலைகள் வழியாக லேயை நோக்கி பயணத்தை தொடர வேண்டும்.

Picture credit: Wiki Commons

Wolfgang Maehr

அப்பாடா...

அப்பாடா...

ஒருவழியாக அன்றை பொழுது லேயை பார்த்தவுடன்தான் ஒரு பெருமூச்சு விடத் தோன்றுகிறது. லே ஒரு அழகிய சிறு நகரமாக காட்சி தருகிறது. மேலும், இந்த பகுதியில் வசிப்போரின் 80 சதவீத வருவாய் ராணுவத்தினர் மூலமாகவே வருகிறது.

 முக்கிய இடங்கள்

முக்கிய இடங்கள்

நீண்ட பயணத்தால் ஏற்பட்ட களைப்பை போக்கிக் கொள்ள சரியான ஓய்வு தேவை. ஓய்வு எடுத்த பின்னர் லேயில் உள்ள அரண்மனை, ஹெமிஸ் கோம்பா மடலாயம் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள். இந்த இடம் கடல்மட்டத்திலிருந்து 3,500 மீட்டர் உயரத்தில் உள்ளது.

ஒவ்வாமை

ஒவ்வாமை

இந்த பயணத்தின் போது சிலருக்கு ஒவ்வாமை, வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. பயணத்திற்கு செல்லும்போது உடல்நிலை சீராக இருத்தல் அவசியம். மேலும், அங்கு சென்றபின் இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் டயாமாக்ஸ் மாத்திரையை எடுத்துச் செல்வது அவசியம். மேலும், உடல்நிலையில் பிரச்னை இருந்தால் உடனடியாக திரும்புவது உத்தமம். லேயில் தங்கும்போது அதுபோன்று உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் கர்துங்லா என்ற பகுதிக்கு வந்துவிடுவது நல்லது.

வாகனம்

வாகனம்

பெரும்பாலும் கரடுமுரடான சாலைகளிலும், ஆறுகளையும் கடக்க வேண்டியிருப்பதால் ஜீப் அல்லது எஸ்யூவி ரக வாகனங்கள் சிறப்பானதாக இருக்கும். அதேவேளை, வீல் டிரைவ் வாகனம்தான் வேண்டும் என்ற அவசியமில்லை. சிறிய கார்களில் சென்றால் கரடு முரடான சாலைகளிலும், ஆறுகளை கடக்கும்போதும் பாதிப்புகள் ஏற்படலாம். இருசக்கர வாகனங்களும் இந்த பயணத்திற்கு சிறந்ததாக கூறலாம்.

 பயணச் செலவு

பயணச் செலவு

இந்த பயணத்திற்கு குறைந்தபட்சம் ரூ.70,000 தேவைப்படும். ஓட்டல்கள் கட்டணம், சாப்பாட்டு செலவுகளை பொறுத்து இது மாறுபடும்.

இவையும் அவசியம்

இவையும் அவசியம்

இந்த பயணத்தின்போது பல இடங்களில் ஆள் ஆரவமற்ற சாலைகளாக நிறைந்துள்ளன. எனவே, டயர்களுக்கான ட்யூப், ஸ்பார்க் ப்ளக்குகள், ஹெட்லைட் பல்புகள் மற்றும் ஸ்பேர் வீல் போன்றவை கையிலெடுத்துச் செல்வது அவசியம். டயர்களை கழற்றி மாட்டுவதற்கான டூல் கிட்டும் இருக்க வேண்டும். குளிரை தாங்கும் உடைகள், டார்ச் லைட் போன்றவையும் இருத்தல் அவசியம்.

Most Read Articles
English summary
The mighty Himalayas, once the Tethys sea, is one of the biggest mountain ranges in the world. The world famous mountain range attracts many who wander looking for adventure, and makes sure it gives it to them with a little extra dose.The ideal time to get a taste of this adventure-packed mountain range would be during from June to mid-September. There are loads of routes and ways one can make it to the Leh. We will take you through the the stunning Spiti valley.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X