சைக்கிளில் 263 கிமீ., வேகத்தில் 'பறந்து' புதிய உலக சாதனை!

ராக்கெட் பொருத்தப்பட்ட சைக்களில் 263 கிமீ., வேகத்தில் பறந்து புதிய சாதனை படைத்துள்ளார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரான்கோயிஸ் கிஸ்ஸி. இதுதவிர, அவர் பயன்படுத்திய சைக்கிளுக்கும் உலகின் அதிவேகத்தில் சென்ற சைக்கிளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் மன்ச்ஹவுஸ் விமான நிலையத்தில் இந்த புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. கூடுதல் விபரங்கள் மற்றும் சாதனை நிகழ்வின் படங்களையும், வீடியோவையும் ஸ்லைடரில் காணலாம்.

ராக்கெட் பவர்

ராக்கெட் பவர்

உலக சாதனைக்காக பயன்படுத்தப்பட்ட சைக்கிளில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு எரிபொருள் நிரப்ப்பட்ட ராக்கெட் பொருத்தப்பட்டிருந்தது. இந்த எரிபொருள் 650 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை உற்பத்தி செய்ய வல்லதாகும்.

சுவிஸ் ராக்கெட் பவர்

சுவிஸ் ராக்கெட் பவர்

சைக்கிளை முன்னோக்கி சீறிப்பாய்வதற்கான ராக்கெட்டை சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த எக்ஸோட்டிக் தெர்மோ எஞ்சினியரிங் நிறுவனம் தயாரித்து கொடுத்தது.

சீறிப்பாய்ந்த சைக்கிள்

சீறிப்பாய்ந்த சைக்கிள்

ராக்கெட்டை இயக்கியவுடன் சைக்கிள் விசுக்கென்று விமான ஓடுபாதையில் சீறிப்பாய்ந்து சென்றது.

பார்வையாளர்கள் ஏமாற்றம்

பார்வையாளர்கள் ஏமாற்றம்

இந்த நிகழ்வை காணவந்த பலரும் கிஸ்ஸி சீறிப்பாய்ந்து செல்வதை படம் பிடிக்க கேமராவுடன் தயாராக இருந்தனர். ஆனால், ராக்கெட்டின் உந்துவேகத்தில் கண்மூடி கண் திறப்பதற்குள் அந்த சைக்கிள் சீறிப்பாய்ந்து சென்றுவிட்டதால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

முந்தைய சாதனை

முந்தைய சாதனை

2002ம் ஆண்டு இதேபோன்று ராக்கெட் துணையுடன் சைக்கிளில் அதிவேக உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. அப்போது, மணிக்கு 242.6 கிமீ., வேகத்தில் சென்று உலக சாதனை படைக்கப்பட்டது.

சைக்கிளில் அதிவேக சாதனை

சாதனை நிகழ்வின் வீடியோவை காணலாம்.

Most Read Articles
English summary
Frenchman Francois Gissy set a new speed record on his rocket powered bicycle. The world's fastest rocket powered bicycle reached a top speed of 263 km/h.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X