ராக்கெட் ஸ்கேட்ஸ்... இனி லைஃப் ஆயிடும் ஜிங்கலாலா!!

இதுவரை இல்லாத சிறப்பம்சங்களுடன் கூடிய மின்மோட்டார் துணையில் இயங்கும் புதிய ஸ்கேட்டிங் சாதனத்தை அமெரிக்காவை சேர்ந்த பொறியாளர் வடிவமைத்துள்ளார். ராக்கெட் ஸ்கேட்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய போக்குவரத்து சாதனம் ஸ்கேட்டிங் பலகைகளுக்கு மாற்றான ஒரு புரட்சிகரமான சாதனமாக கூறலாம்.

காலணியை அணிந்துகொண்டு இந்த ஸ்கேட்டிங் சாதனத்தை கால்களில் பொருத்திக் கொண்டு கடை வீதிகளையும், அலுவலக வளாகத்தை வலம் வரலாம். ஏன் அருகிலுள்ள அலுவலகத்திற்கு கூட சென்று வரலாம். மோட்டார் பொருத்தப்பட்ட இந்த புதிய ஸ்கேட்டிங் சாதனம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள், விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


குட்டி மின் மோட்டார்

குட்டி மின் மோட்டார்

கால்களில் பொருத்திக் கொள்ளும் வசதி கொண்ட இந்த சாதனத்தில் இரு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாதாரண காலணிகளை அணிந்து கொண்டு இந்த சாதனத்தை பொருத்திக் கொள்ளும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லித்தியம் அயான் பேட்டரி

லித்தியம் அயான் பேட்டரி

மிக மிக இலகுவான எடை கொண்டது. இரு சிறிய எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை லித்தியம் அயான் பேட்டரி துணையில் இயங்குகின்றன.

 அதிகபட்ச வேகம்

அதிகபட்ச வேகம்

மணிக்கு 19 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. ஆர்6, ஆர்8 மற்றும் ஆர்10 ஆகிய மூன்று மாடல்களில் ராக்கெட் ஸ்கேட்ஸ் சாதனம் வெளியிடப்பட்டுள்ளது.

 சார்ஜ் நேரம்

சார்ஜ் நேரம்

இதில் பொருத்தப்பட்டிருக்கும் லித்தியம் அயான் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்வதற்கு ஒன்றரை மணி நேரம் பிடிக்கும்.

ரிமோட் கூட வேண்டாம்

ரிமோட் கூட வேண்டாம்

இந்த சாதனத்தை இயக்குவதற்கு ரிமோட் கன்ட்ரோல் தேவையில்லை. பின்புறம் இருக்கும் பொத்தானை அழுத்திவிட்டால் போதுமானது. மேலும், இதிலிருக்கும் சிறிய பலகையை முன்புறமாக தரையை தொடும்படி சாய்த்தால் நின்றுவிடும். இந்த சாதனத்தின் நகர்வுகள் மைக்ரோ- ப்ராசசர் மூலம் கண்காணித்து அதற்கு ஏற்ப செயல்படும். மேலும், இதனை கால்களில் மாட்டிக் கொண்டே மாடிப்படிகளில் ஏறலாம்.

 ரேஞ்ச்

ரேஞ்ச்

ஆர்6 மாடல் அதிகபட்சமாக 10 கிமீ தொலைவு செல்லும். அல்லது 45 நிமிடங்களுக்கு சார்ஜ் இருக்கும். ஆர்8 மாடல் 13 கிமீ வரை செல்லும் அல்லது 70 நிமிடங்களுக்கு சார்ஜ் இருக்கும். ஆர்10 மாடல் 16 கிமீ தொலைவு வரை செல்லும் அல்லது 90 நிமிடங்களுக்கு பேட்டரி சார்ஜ் இருக்கும்.

ஸ்மார்ட்போன் ஆப்

ஸ்மார்ட்போன் ஆப்

பாதை குறித்த தகவல்கள், சாதனத்தின் இயக்கம், அந்த சாதனத்தை இயக்கும் உங்களது செயல்திறன் போன்றவற்றை பிரத்யேக அப்ளிகேஷன் மூலம் ஸ்மார்ட்போனில் தெரிந்துகொள்ளலாம். இதுதவிர, வீடியோ கேம் மற்றும் பேட்டரியில் சார்ஜ் அளவு பற்றிய கூடுதல் வசதிகளையும் பெறலாம்.

 விலை

விலை

ஆர்8 மாடல் 249 டாலர் விலையிலும், ஆர்8 மாடல் 499 டாலர் விலையிலும் மற்றும் ஆர்10 மாடல் 599 டாலர் விலையிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
A Los Angeles based inventor has come up with a new motorised roller skates. Similar to the Air Treks the Japanese characters were using, these motorized blades will let you could ride along your campus at a top speed of 19kmph, and they don’t even require a remote control. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X