ஃபோர்டு மஸ்டாங் காரை கஸ்டமைஸ் செய்து வாங்கிய பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி!

ஃபோர்டு மஸ்டாங் காரை கஸ்டமைஸ் செய்து வாங்கியிருக்கிறார் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. அந்த காரின் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

அமெரிக்காவின் கார் தயாரிப்பு பாரம்பரியத்தையும், தனித்துவத்தையும் பரைசாற்றும் மாடல்களில் ஃபோர்டு மஸ்டாங் புகழ்மிக்கது. வேறு எந்த நாட்டு சாலைகளிலும் கிடைக்காத மாடல் என்ற பெருமையுடன் அமெரிக்காவின் தனித்துவமிக்க மாடலாக இருந்து வந்தது.

அமெரிக்காவில் கல்லூரி மாணவர்கள் ஃபோர்டு மஸ்டாங் காரை கஸ்டமைஸ் செய்வது வழக்கமான செயல்தான். ஆனால், இந்தியாவிற்கு ஃபோர்டு மஸ்டாங் கார் மிகவும் தனித்துவம் மிக்க மாடல். மஸில் ரகத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் கார் மாடலாகவும் பெருமையை பெற்றிருக்கிறது.

ஃபோர்டு மஸ்டாங் காரை வாங்குவதற்கு இந்தியர்கள் மத்தியில் ஆர்வம் காணப்படுகிறது. இந்தநிலையில், பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி ஃபோர்டு மஸ்டாங் காரை சமீபத்தில் வாங்கியிருக்கிறார்.

அத்துடன், தனது கார் மிகவும் தனித்துவம் மிக்கதாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அதில் பல கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் மாறுதல்களை செய்து பெற்றிருக்கிறார். ரோஹித் ஷெட்டியின் ஊதார வண்ண ஃபோர்டு மஸ்டாங் கார் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. பானட்டில் ஏர் ஸ்கூப் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க க்ரில் அமைப்பில் விளக்கு ஒளி பின்னணி கொண்ட அலங்கார ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

முகப்பு க்ரில் அமைப்பின் மத்தியில் மஸ்டாங் காரின் குதிரை சின்னம் அலங்கரிக்கிறுத. ஹெட்லைட்டில் சிவப்பு வண்ண அலங்கார ஆக்சஸெரீகளும், பகல்நேர விளக்குகளும் உள்ளன.

சாம்பல் வண்ணத்திலான புதிய 12 ஸ்போக் அலாய் வீல்கள், ஷோல்டர் லைனில் சேர்க்கப்பட்டிருக்கும் மற்றொரு ஏர்ஸ்கூப், லோ புரோஃபைல் டயர்கள் போன்றவை மஸில் காருக்கான அந்தஸ்தை அதிகரித்துள்ளன.

இந்த காரில் இருக்கும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 397 பிஎச்பி பவரையும், 515 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இது போதுமான சக்தியை கொண்டிருப்பதால், எஞ்சினில் ட்யூனிங் வேலைகள் எதுவும் இல்லை என்றே கருதப்படுகிறது.

கார் பிரியரான ரோஹித் ஷெட்டி தனது ரேஞ்ச்ரோவர் வோக் எஸ்யூவியையும் இதேபோன்று, சிவப்பு வண்ண அலங்காரத்துடன் கஸ்டமைஸ் செய்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Bollywood director Rohit Shetty Gets Coustomised Ford Mustang Car!
Please Wait while comments are loading...

Latest Photos