புழுதி படிந்த தோற்றத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் டாக்சி... காரணம் என்ன?

By Meena

தமிழ்ப் படங்கள்ளே, இங்க மருகு வெச்சுட்டு.............அந்த மாதிரி கபாலின்னு நெனச்சயா... கபாலிடா.... என்று விசில் பறக்க விடும் வசனம் ஆட்டோ மொபைல் துறையில் யாருக்குப் பொருந்துமோ இல்லையோ ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கு ஏற்புடையதாக இருக்கும். வெவ்வேறு விதமான புதுமைகளைப் புகுத்துவதிலும், சிறப்பான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதிலும், அந்த நிறுவனத்துக்கு நிகர் அதுவே.

அப்படித்தான் இப்போதும் ஒரு வித்தியாசமான நடவடிக்கையை மேற்கொண்டு வாவ் என ரசிகர்களை வியக்க வைத்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ்.

ரோல்ஸ்ராய்ஸ்

இப்போது விசேஷமான செய்தி என்னவென்றால், சாதாரணமாக பார்க்கும்போது ஜில்லுன்னு ஒரு காதல் ஜோதிகா ரேஞ்சுக்கு செம கிளாஸாக இருந்த கோஸ்ட் மாடல் காரை, சந்திரமுகி கிளைமாக்ஸ் ஜோதிகா மாதிரி மாற்றியிருக்கிறார்கள்.

1990-களின் பிற்பாதியில் வந்த கிரேஸி டாக்ஸி விடியோ கேம் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பியது. அதனை நினைவுகூரும் வகையில் கோஸ்ட் மாடலுக்கு மாசடைந்த கிரேஸி டாக்ஸி வண்ணம் பூசியுள்ளது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.

ரோல்ஸ்ராய்ஸ் டாக்சி

அட்லாண்டா, ஜார்ஜியா, டார்டியா ஆகிய பகுதிகளில் கடந்த 3-ஆம் தேதி நடந்த மோட்டார் ரேலியில் வெளிப்புற வண்ணம், ஸ்டிக்கர் மாற்றப்பட்ட புழுதி படிந்த தோற்றத்திலான கோஸ்ட் மாடல் கார் பங்கெடுத்தது.

இதோடு பிற கார்களும் அந்த மோட்டார் பேரணியில் கலந்து கொண்டு பார்த்தவர் கண்களை வியப்பில் பூக்க வைத்துள்ளன. கோஸ்ட காரை உருமாற்றம் செய்து உருவம் பட மோகன் மாதிரி மாற்றிய பெருமை அமெரிக்காவில் பிளாட்டினம் கார் நிறுவனத்தையே சாரும். இப்படி ஒரு கார், வேறு தீமின் அடிப்படையில் மாற்றப்படுவது இது முதல் முறையல்ல. ஆடி ஆர் எஸ்7, மெர்சிடைஸ் இ - 63 உள்ளிட்ட பிரம்மாண்ட வாகனங்களையும் உருமாற்றம் செய்திருக்கிறதாம் பிளாட்டினம் கார் நிறுவனம்.

விருப்பமான கார்களை வித்தியாசமாக மாற்றும் இத்தகைய நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் என்பதில் மாற்றமில்லை. இந்தியாவிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால், நம்ம ஊர் மக்களும் மகிழ்வுடன் பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை...

Most Read Articles
English summary
Rolls-Royce Ghost Is One 'Crazy' Taxi.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X