இந்தியர்களின் திறனால் கவரப்பட்டு இந்தியாவில் தனது வணிகத்தை விரிவாக்கம் செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்..!!

Written By:

நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்ட இங்கிலாந்தின் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது வணிகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய உள்ளது.

பெங்களூருவில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் பிரிவுகளில் அதிகமாக முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பெஞ்சமின் ராபர்ட் ஸ்டோரி மற்றும் அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் கிஷோர் ஜெயராமன் ஆகியோர் சமீபத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை இது தொடர்பாக சந்தித்து பேசியுள்ளனர்.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தியர்களின் திறன் மற்றும் புதுமையான முன்னெடுப்புகளால் கவரப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் நிர்வாகத்தினர் பெங்களூருவில் உள்ள அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் பணிபுரிவோரின் எண்ணிக்கையை இந்த ஆண்டின் இறுதிக்குள் மூன்று மடங்காக உயர்த்தவுள்ளதாக தெரிவித்தார்.

ஆடம்பர கார்களுக்கு பெயர் போன இந்நிறுவனம் பயணிகள் மற்றும் மிலிட்டரி விமானங்களுக்கான கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் இதர உயர் ரக வாகனங்களுக்கான பவர் மற்றும் ப்ரொபல்ஷன் சிஸ்டம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள
ஒரு பொறியியல் நிறுவனமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த 80ஆண்டுகளுக்கு முன்னரே செயல்படத்துவங்கிவிட்டது. டாடா நிறுவனத்தின் முதல் விமானத்திற்கான இஞ்சினை இந்நிறுவனமே தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவின் 240 கடற்படை கப்பல்கள் மற்றும் கடலோரக் காவல்படை கப்பல்களில் ரோல்ஸ்ராய்ஸின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஏற்கெனவே பல சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அமைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் மனிதவளத்தை அதிகரிக்கச் செய்ய இருப்பது சிறந்த ஒரு முடிவாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது..

Story first published: Saturday, June 17, 2017, 14:43 [IST]
English summary
Read in Tamil about RollsRoyce to invest more in banglore R&D centre
Please Wait while comments are loading...

Latest Photos