’சீட் பெல்ட்’ அணியாத காரணத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட ராயல் என்பீல்டு ரைடர்: கோவாவில் விசித்தரம்!!

Written By:

நாடு முழுவதும் வாகனப் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு போக்குவரத்து விதிகள் அமலில் உள்ளன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்ற நாடு முழுவதும் பல காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இத்தனை செயல்பாடுகள் இருந்தும், நீங்கள் இந்த செய்தியை படிக்கும் நேரத்தில் கூட எங்கோ ஒரு இடத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் நடந்துக்கொண்டு இருக்கும்.

இந்தியாவில் வாகன ஓட்டிகளால் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு காரணம், சட்டங்களும், செயல்பாடுகளும் இன்னும் கடுமையாக்கப்படாமல் இருப்பது தான்.

அதற்கு சான்றாக கோவாவில் நடைபெற்ற ஒரு செய்தியைத்தான் இந்த பக்கத்தில் படிக்க உள்ளீர்கள். மனதை திடப்படுத்திக்கொண்டு தொடர்ந்து கீழே படியுங்கள்.

கோவாவில் ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடலில் தனிமை பயணம் மேற்கொண்டு இருந்தார் சதீஸ் எஸ். நாயிக் என்ற இளைஞர்.

அப்போது, ஹெல்மெட் போடாமல் இருந்த காரணத்தினால், கோவா போக்குவரத்து போலீசார் அவரை அதே சாலையில் மடக்கி பிடித்தனர்.

போக்குவரத்து விதிமீறல் செய்த சதீஸ் எஸ். நாயக்கிற்கு கோவா போலீசார் ரூ.100 அபராதத் தொகையாக விதித்தனர். அதுவரை அனைத்தும் சட்டப்படி தான் நடந்தது.

ஹெல்மெட் போடாத காரணத்தினால் கோவா போலீசார் விதித்த ரூ.100 அபராதத் தொகையை சதீஸ் எஸ். நாயக்கும் கட்டிவிட்டார். அதற்கு சதீஸிடம் செலானும் வழங்கப்பட்டு விட்டது.

செலானை பார்த்த சதீஸ் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அதில் ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் ’சீட் பெல்ட்’ அணியாத காரணத்தினால் கோவா போலீசார் சதீஸ் எஸ். நாயக்கிற்கு அபராதம் விதித்திருந்தனர்.

நமக்கு தெரிந்தவரை எந்த மோட்டார் சைக்கிளும் ’சீட் பெல்டு’ பாதுகாப்போடு வருவதில்லை. அப்படியிருக்க எந்த சிந்தனையில் போலீசார் இப்படியொரு அபாரதம் வழங்கினர் என்பதில் சதீஸ் குழப்பமடைந்துவிட்டார்.

படிக்கும்போதே சிரிப்பை வரவழைக்கும் இந்த செய்தியை இணையதளங்களில் போலீசார் வழங்கிய செலானின் புகைப்படத்துடன் பதிவேற்றப்பட்ட போது, இன்னும் டிரென்டிங் ஆனது. கோவா காவல்துறைக்கு இணையவாசிகள் பல்வேறு கமெண்டுகளையும் வழங்கினர்.

மேலும், அந்த செலானில் சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணமும் தெளிவாக இருந்தது.

வாகன சட்டப்படி ஹெல்மெட் அணியவில்லை என்றால் அதற்கு 129 விதியின் கீழ் அபராதம் வசூலிக்கப்படும்.

காரில் சீட் பெல்டு அணியாமல் இருந்தால் அதற்கு 177 விதியின் கீழ் அபாரதம் போடப்படும்.

சட்டப்படியான அபாரத விதிகளை குறிப்பிட்ட வரை நல்லதே. இருப்பினும் காரணத்தை தவறாக எழுதியிருந்த காரணத்தினால், கோவா போலீசார் சதீஸ் எஸ். நாயக்கிற்கு வழங்கிய இந்த செலான், இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த செய்தி படிக்கும் போது நமக்கு சிரிப்பு வரலாம். ஆனால் பயணங்களின் போது சீட் பெல்டு மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருப்பது என்றும் ஏற்புடையாதக இருக்காது.

ஆபத்தான சாலை பயணங்கள் அதிகரித்து வரும் இன்றைய நாட்களில், பாதுகாப்பு இல்லாத பயணங்களை செய்ய எப்போதும் உங்களை நீங்களே அனுமதிக்காதீர்கள் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Tuesday, June 13, 2017, 16:30 [IST]
English summary
Royal Enfield Rider Fined For Not Wearing Seatbelt. Click for Detials...
Please Wait while comments are loading...

Latest Photos