ரஷ்யாவின் பிரமிக்கவைக்கும் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல்: டிமிட்ரி டான்ஸ்காய்

உலக நாடுகளுக்கு அணு ஆயுத பலத்தை காட்ட 1980ம் ஆண்டில் ரஷ்யா உருவாக்கிய நீர்மூழ்கி கப்பல் டிமிட்ரி டான்ஸ்காய். மிகப்பெரிய போர்கப்பலான் இது, தற்போது பேல்டிக் கடல் பகுதியை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது.

By Azhagar

டிமிட்ரி டான்ஸ்காய் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் வலிமை மிகுந்த நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா 1980 உருவாக்கியது. மிகவும் மேம்படுத்தப்பட்ட ஆற்றலை பெற்றுள்ள இந்த நீர்மூழ்கி கப்பலை தற்போது ரஷ்ய அரசு பேல்டிக் கடல் பகுதியை நோக்கி செல்ல உத்தரவிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

வடிவத்திலும் சரி, ஆயுதங்களை கொண்டுயிருப்பதிலும் சரி கடல்சார் தயாரிப்புகளில் அசுரனாக பார்க்கப்படும் டிமிட்ரி டான்ஸ்காய், தற்போது ஏன் பேலிடிக் கடலில் பயணிக்க ரஷ்யா உத்திரவிட்டுள்ளது என்பது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

சமீபத்தில் தான் சிரியாவில் அமெரிக்க தாக்குதல் நடத்தியது , இதனால் நச்சு வாயு வெளியேறி அப்பாவி உயர்கள் பல இறக்க காரணமாக அமைந்தன.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

சிரியா உடன் நட்பு பாராட்டி வரும் ரஷ்யா, அமெரிக்க படையின் மீது தாக்குதலை நடத்தவே, தனது டிமிட்ரி டான்ஸ்காய் நீர்மூழ்கி கப்பலை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக பெலிட்டிக் கடல் பகுதியில் இருக்கக்கூடிய நார்வே, லித்துவெனியா, எஸ்டோனியா , லேத்வியா போன்ற நாடுகள், டிமிட்ரி டான்ஸ்காயின் பயணத்தால் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளன.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

இந்த நீர்மூழ்கி கப்பலின் நகர்வு உலக நாடுகள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியிருக்க காரணம் ஏன் என்றால் ரஷ்ய நாட்டின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள இதில் 20 அணு ஏவுகணைகள் உள்ளன.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

உலக நாடுகளுக்கு தனது பலத்தை காட்டவே ரஷ்யா இந்த நீர்மூழ்கி கப்பலை தயாரித்தது. 574 அடி நீளம் கொண்ட டிமிட்ரி டான்ஸ்காய் நீர்மூழ்கி கப்பலில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறான அனைத்து ஆயுதங்களும் உள்ளன.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

டிமிட்ரி டான்ஸ்காய் நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா 'கஸான்' என்ற பெயரிலும் குறிப்பிடுகிறது. உலகின் பெரிய நீர்மூழ்கி கப்பலான இதில் 160பேர் வரை இருக்கலாம். கடலுக்கு அடியில் சுமார் 120 நாட்கள் வரை இருக்ககூடிய திறனுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

டிமிட்ரி டான்ஸ்காய் நீர்மூழ்கி கப்பல் மொத்தம் 453 கிலோ எடை வரை தாங்கிக்கொண்டு கடலில் பயணிக்க முடியும். கலிபர் என்று சொல்லக்கூடிய எட்டு கப்பல் ஏவுகணைகள் , கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அணு ஆயுதங்கள் உட்பட 200 விதமான பேரிழவை ஏற்படுத்தும் ஆயுதங்களுடன் பெலிடிக் கடல் பகுதியில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது டிமிட்ரி டான்ஸ்காய்.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

பல்நோக்கு தாக்குதல்களை மேற்கொள்ளும் விதமாக இது 1980ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. பொதுவாக இதுபோன்ற கப்பல்களை ரஷ்யா அரசு யாஸன் - கிளாஸ் என குறிப்பிடும். அந்த வரிசையில் டிமிட்ரி டான்ஸ்காய் முதன்மையான நீர்மூழ்கி கப்பலாக உள்ளது.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

டிமிட்ரி டான்ஸ்காய் நீர்மூழ்கி கப்பலை குறித்த பேசிய ரஷ்யாவின் கடற்படையின் தலைமை அதிகாரி அட்மிரல் விளாடிமிர் கோர்லோவ், இதுவரை தயாரிக்கப்பட்ட போர் கப்பல்களிலேயே அதீத திறனோடும், முக்கிய தொழில்நுட்பங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ள ஒரே கப்பல் என குறிப்பிட்டார்.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

மேலும் நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு , இதுபோன்ற அணு ஆயுதத்தை தாங்கி நிறக்கூடிய நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா தொடர்ந்து உருவாக்கும் என அட்மிரல் விளாடிமிர் கோர்லோவ் கூறினார்.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

இராணுவ திறன்களை சமகால கட்டத்திற்கு ஏற்றவாறு வலிமையாக்க தொடர்ந்து ரஷ்யா முயலும் என்றும் அதற்காக கிட்டத்தட்ட 650 கோடி ரூபாயை ரஷ்யா அரசு ஒதுக்கியுள்ளதாகவும் , இவை அனைத்தும் 2020-ம் ஆண்டிற்குள் சாத்தியமாக்கப்படும் என்றும் கடற்படையின் தலைமை அதிகாரி அட்மிரல் விளாடிமிர் கோர்லோவ் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

அட்மிரல் விளாடிமிர் கோர்லோவ் தெரிவித்ததோடு மட்டுமின்றி டிமிட்ரி டான்ஸ்காய் கப்பலை விட , அர்ஹான்ஜெல்ஸ்க், கிராஸ்னோயார்ஸ்க், நோவொஸிப்ரிஸ்க் மற்றும் பெர்ம் என்ற பெயர்களில் 4 புதிய நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா தயாரித்து வருகிறது. இவை அனைத்தும் ரஷ்யாவின் எல்லைகளில் 2023ம் ஆண்டிற்குள் நிலைநிறுத்தப்படவுள்ளன.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

20 அணு ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் போகும் அணு ஆயுதங்கள் மற்றும் இன்னபிற கப்பல் ஏவுகணைகளுடன் ரஷ்யாவின் டிமிட்ரி டான்ஸ்காய் நீர்மூழ்கி கப்பல் எங்கு கிளிம்பிவிட்டது என்ற ஒரு பரபரப்பு உலக நாடுகள் மத்தியில் உருவாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் பேலிடிக் கடல் பகுதியில் தாக்குதல் நடத்தப்படுமா என்று பல நாடுகளும் , அந்நாட்டு மக்களும் கூறிவருகின்றனர். ஆனால் டிமிட்ரி டான்ஸ்காய் நீர்மூழ்கி கப்பலின் பயணம் குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள தகவல் என்ன என்றால்?

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

வரும் ஜூலை 30ம் தேதி ரஷ்யாவின் செயிண்ட். பீட்டர்ஸ்பெர்க்கில் கடற்படையின் அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது. அதில் கலந்துகொண்டு, அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தவே டிமிட்ரி டான்ஸ்காய் பேலிட்டிக் கடற்பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் : டிமிட்ரி டான்ஸ்காய்

ஆனால் உண்மை என்ன என்பது இந்த டிமிட்ரி டான்ஸ்காய் நீர்மூழ்கி கப்பல் பேலடிக் கடல் பகுதியை சென்றடைந்த பின் தான் தெரியவரும். தற்போது வெண் கடலில் பயணம் மேற்கொண்டுள்ள டிமிட்ரி டான்ஸ்காய், ஜூலை 2வது வாரத்தில் செயிண்ட். பீட்டர்ஸ்பெர்கை சென்றடையும், அணிவகுப்பு முடிந்த பின், ரஷ்யாவின் கடல்பகுதியில் நிலைநிறுத்தப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Via- Dailymail

Most Read Articles
English summary
Russia to send the world's largest submarine Dmitry Donskoy to the Baltic sea. Its sub-armed with 20 nuclear missiles.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X