கரடுமுரடான சாலையோ, நீர் நிலையோ... இனி கவலையில்லை!

By Saravana

கரடுமுரடான சாலை, நீர் நிலை, பனிபடர்ந்த பிரதேசங்கள் என எந்தவொரு சாலையையும் அனாயசமாக எதிர்கொண்டு முன்னேறும் தகவமைப்புகள் கொண்ட ஆல் டெரெயின் வாகனம் ஒன்றை ரஷ்யாவை சேரந்த செர்ப் என்ற நிறுவனம் கட்டமைத்துள்ளது. பார்ப்போரை பிரம்மிப்பில் ஆழ்த்துவதோடு, ஆபத்தில் சிக்குவோர்க்கு புதிய நம்பிக்கை நாயகனாகவும் இதன் செயல்பாடுகள் விளங்குகின்றன.

செர்ப் ஏடிவி வாகனம்

மிகப் பிரம்மாண்டமான அளவுடைய டயர்கள், வலிமையான கட்டமைப்புடன் காட்சி தரும் இந்த வாகனம் கரடுமுரடான சாலைகளில் எளிதாக செல்லும் என்பதோடு, நீரில் மிதவை போல செல்லும் தொழில்நுட்ப கட்டமைப்பையும் பெற்றிருக்கிறது. இதனால், பனிப்பிரதேசங்களில் கண்ணுக்குப் புலப்படாத பனிக் கட்டிகளுக்கு கீழே இருக்கும் நீர் நிலைகளில் கூட மிதந்து செல்லும்.

இதனால், மீட்புப் பணிகளில் இந்த வாகனத்தின் பங்கு மிக அளப்பரியதாக இருக்கும் என நம்பலாம். இந்த வாகனம் 3,000 பவுண்ட்டுக்கும் கீழான எடை கொண்டது. இந்த ஏடிவி ரக வாகனத்தில் 45 எச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. தரையில் மணிக்கு 45 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் மணிக்கு 6 கிமீ வேகத்திலும் செல்லும். இந்த வாகனத்தின் படங்களை கேலரியில் கண்டு மிரளலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Russian automobile manufacturer Sherp has come out with what could possibly be the best vehicle for a post-apocalyptic world. The Sherp ATV is powered by a 45hp, 1.5-litre turbodiesel engine (must be for the mileage) that can hit 45km/h on land and 6km/h on water.
Story first published: Thursday, February 11, 2016, 13:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X