ஒரே நாளில் 500 விபத்துக்களை ஏற்படுத்திய டிரக் விளம்பர பலகை!

சாலையோரத்தில் கவர்ச்சி விளம்பர பலகைகளால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி போராட்டங்கள் ஒரு புறம் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ரஷ்யாவில், டிரக்குகளில் பொருத்தப்பட்டிருந்த படு கவர்ச்சியான விளம்பர பலகைகளால் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ரஷ்யாவை சேர்ந்த விளம்பர நிறுவனம் ஒன்று வாகனங்களின் பக்கவாட்டில் விளம்பர பலகைகளை பொருத்துவதற்கு முடிவு செய்தது. மேலும், இதுபோன்று விளம்பரம் செய்ய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பெண் ஒருவர் மார்பகங்களை காட்டும் வகையில், படு கவர்ச்சியான விளம்பர பலகைகளை டிரக்குகளில் பொருத்தி மாஸ்கோ சாலைகளில் விட்டது.

இந்த விளம்பர பலகைகள் பொருத்தப்பட்ட வாகனங்களை பார்த்த வாகன ஓட்டிகள் தடுமாறி, பிற வாகனங்கள் மீது மோதினர். இதனால், மாஸ்கோ நகரில் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டன. இதுகுறித்து போலீசாருக்கு புகார்கள் குவியத் துவங்கியது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட டிரக்குகளை ரோந்து வாகனங்களில் சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.


விளக்கம்

விளக்கம்

இதுதான் அந்த விளம்பரம். இதேபோன்று வாகனங்களின் பக்கவாட்டில் விளம்பரம் செய்வதற்கு நிறுவனங்களை தூண்டும் வகையில், இந்த விளம்பர பலகைகளை பொருத்தியதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பறிமுதல்

பறிமுதல்

விபத்துக்களை ஏற்படுத்திய விளம்பர பலகைகள் பொருத்தப்பட்ட டிரக்குகளை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். அந்த டிரக்குகளின் இருந்த விளம்பர பலகைகளையும் உடனடியாக அகற்றினர்.

இழப்பீடு

இழப்பீடு

விபத்துக்களில் சிக்கிய கார்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் மூலம் கிடைக்கும் உரிமை தொகையை ஏற்படும் இழப்பீட்டுக்கான தொகையை கார் உரிமையாளர்களுக்கு வழங்க இருப்பதாக சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் தெரிவித்துள்ளது.

 விபத்து

விபத்து

இந்த விபத்து குறித்து ஒருவர் கூறுகையில், எனது வியாபார விஷயமாக நடைபெற இருந்த கூட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது, பின்னால் வந்த கார் என் கார் மீது மோதியது. விளம்பர பலகை பொருத்தப்பட்ட டிரக்கை பார்த்ததால், மோதிவிட்டதாக பின்னால் வந்த டிரைவர் கூறினார். எனது அலுவலக கூட்டத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை என்பதோடு, காரும் சேதமடைந்து சர்வீஸ் சென்டரில் விடும்படியாகிவிட்டது. இன்ஸ்யூரன்ஸ் இருந்தாலும், கையிலிருந்தும் பணம் போட வேண்டியிருக்கும் என்று விபத்தில் சிக்கிய கார் உரிமையாளர் ஒருவர் கூறினார்.

ஐடியாவே கிடைக்கலையா

ஐடியாவே கிடைக்கலையா

புதிய யுக்தியாக இதனை அறிமுகம் செய்ததாக விளம்பர நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆனால், நடந்த சம்பவங்களுக்காக அந்த நிறுவனம் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை.

Most Read Articles
English summary
A sexy mobile advertisement showcasing a woman’s breasts is now being blamed for having caused over 500 car accidents in a single day.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X