தனது பிஎம்டபிள்யூ ஐ8 காரை கலக்கலாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர்!

By Saravana Rajan

சச்சின் கிரிக்கெட் ஆடும்போது களத்தில் இருக்கும் எதிர் அணியினரைகூட தன் நேர்த்தியான ஆட்டத்தால் தன் வசப்படுத்தி விடுவார். ஆனால், அவரை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் கார் பிராண்டு பிஎம்டபிள்யூ. தனது சிறு வயதிலிருந்தே விருப்ப பிராண்டாக இருக்கும் பிஎம்டபிள்யூவுக்கு ரசிகனானதோடு மட்டுமின்றி, அந்த பிராண்டின் விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார்.

அதனால்தான், சச்சின் வீட்டு கார் கராஜில் பிற பிராண்டுகளைவிட பிஎம்டபிள்யூ பிராண்டின் கார் மாடல்கள் ஏராளமாக வரிசை கட்டி நிற்கின்றன. அந்த வரிசையில், கடைசியாக அவர் ஆசையாய் வாங்கிய பிஎம்டபிள்யூ கார் மாடல்தான் ஐ8. உலகிலேயே மிகவும் சிறந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமைக்குரியது இந்த மாடல்.

தனது பிஎம்டபிள்யூ ஐ8 காரை கலக்கலாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர்!

இந்த காரின் அருமை பெருமைகளை பற்றி தெரிந்து கொண்டு, இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே இந்த காரை வெளிநாட்டில் ஓட்டி பார்த்தார் சச்சின். மேலும், இந்த காரை 2014ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ததும்தான் சச்சின் டெண்டுல்கர்தான். அத்தோடு நிற்கவில்லை. முதல் ஆளாக பதிவு செய்து சில மாதங்களில் இந்த காரை தன் வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்.

தனது பிஎம்டபிள்யூ ஐ8 காரை கலக்கலாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர்!

அவர் பிஎம்டபிள்யூ ஐ8 கார் வாங்கியது குறித்த செய்தியை ஏற்கனவே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் செய்தியை படித்திருப்பீர்கள். இப்போது அந்த காரின் வண்ணத்தை தனது டேஸ்ட்டுக்கு தகுந்தவாறு மாற்றியிருக்கிறார் சச்சின்.

தனது பிஎம்டபிள்யூ ஐ8 காரை கலக்கலாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர்!

பொதுவாக, தன் விருப்பத்திற்கு இணங்க இதுபோன்று கார் கலரை மாற்றுவதற்கு வினைல் ஸ்டிக்கர் பயன்படுத்துவது வழக்கம். இதுகுறித்து பல செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள். தெரிந்தும் வைத்திருப்பீர்கள். ஆனால், சச்சின் டெண்டுல்கர் தனது காரை முற்றிலுமாக புதிய வண்ண பெயிண்ட்டை பூசி மாற்றியிருப்பதுதான் இங்கே முக்கிய விஷயம்.

தனது பிஎம்டபிள்யூ ஐ8 காரை கலக்கலாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர்!

அவரது வெள்ளை நிற பிஎம்டபிள்யூ ஐ8 கார் தற்போது சிவப்பு நிறத்திற்கு மாறிவிட்டிருக்கிறது. மேலும், இந்தியாவின் முதல் வண்ணம் மாற்றப்பட்ட பெருமையையும், சச்சினின் இந்த கஸ்டமைஸ் பிஎம்டபிள்யூ ஐ8 கார் என்ற பெறுகிறது.

பிஎம்டபிள்யூ ஐ8 காரை கலக்கலாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர்!

தற்போது பாடி பேனல்கள் சிவப்பு வண்ணத்திற்கு மாறியதுடன், ஏற்கனவே காரின் கொடுக்கப்பட்டிருக்கும் கருப்பு வண்ணக் கூரை, ஆங்காங்கே வசீகரிக்கும் வான் நீல வண்ணம் ஆகியவை எல்லாம் சேர்ந்து பார்ப்போரை மயக்குகிறது.

தனது பிஎம்டபிள்யூ ஐ8 காரை கலக்கலாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர்!

கன் மெட்டல் HRE மேக் வீல்கள் மற்றும் அதற்கு ஏற்றவாறான அகலமான டயர்கள் என கலக்கலாக மாறியிருக்கிறது சச்சின் டெண்டுல்கரின் பிஎம்டபிள்யூ ஐ8 கார். கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் ரூ.2.29 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்தது. வரி உள்பட சேர்த்து ரூ.3 கோடிக்கும் மேல் அடக்கம் கொண்டது.

தனது பிஎம்டபிள்யூ ஐ8 காரை கலக்கலாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர்!

இந்த ஹைபிரிட் ரக ஸ்போர்ட்ஸ் காரில் 231 எச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 131 எச்பி பவரை வழங்க வல்ல லித்தியம் அயான் பேட்டரியில் இயங்கும் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. இவை இரண்டும் சேர்ந்து இயங்கும்போது அதிகபட்சமாக 362 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெறும்.

தனது பிஎம்டபிள்யூ ஐ8 காரை கலக்கலாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர்!

மின் மோட்டாரில் மட்டும் இயங்கும்போது அதிகபட்சமாக 35 கிமீ தூரம் வரை பயணிக்கும். நகர்ப்புறத்திற்குள் சென்று வருவதற்கு சிறந்தது. பெட்ரோல், மின் மோட்டார் என இரண்டையும் சேர்த்து கணக்கீடு செய்யும்போது லிட்டருக்கு 47.75 கிமீ மைலேஜ் தரும் என பிஎம்டபிள்யூ சொல்கிறது.

தனது பிஎம்டபிள்யூ ஐ8 காரை கலக்கலாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர்!

இந்த கார் செயல்திறனிலும் மிரட்டுகிறது. 0 - 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.4 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இதுபோன்று, காரின் வண்ணத்தை முற்றிலுமாக மாற்றும்போது, அதனை போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டியதும் அவசியம்.

சச்சினின் கார் கலெக்ஷன்

சச்சினிடம் இருக்கும் அனைத்து கார்களின் விபரங்களை விவரிக்கும் விசேஷ செய்தித் தொகுப்புக்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும்.

Photo Credit: Rapid Spotters Mumbai

Most Read Articles
English summary
Read in Tamil: Sachin Tendulkar's BMW I8 Car Gets Custom Paint Job.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X