சச்சின் டெண்டுல்கர் செய்த காரியத்தை பாருங்க.. வைரல் வீடியோ!

தன்னுடன் செல்பி எடுத்துக்கொண்டவர்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தலைக்கவசம் இல்லாமல் பயணித்த இருசக்கர வாகண ஓட்டிகளுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தலைக்கவசம் இல்லாமல் பயணித்த இருசக்கர வாகண ஓட்டிகளுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சச்சின் போன்ற பிரபலம் ஒருவரை சாலையில் பார்ப்பது என்பது சாதாரண ஒரு விஷயம் அல்ல, அப்படி அவர் காரில் சென்றுகொண்டிருந்ததை பார்த்த இருசக்கரத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் இருவர், தங்களுடன் செல்பி எடுத்துக்கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு சம்மதித்த சச்சின் அவர்கள் ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பதைப் பார்த்துள்ளார்.

உங்களுடன் செல்பி எடுத்துக்கொள்கிறேன், ஆனால், அடுத்த முறை ஹெல்மெட் இல்லாமல் சாலையில் வாகனம் ஓட்டமாட்டேன் என எனக்கு ஒரு சத்தியம் செய்துகொடுங்கள், ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது, தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் சச்சின்.

அந்த இடத்தில் நின்ற மேலும் ஒரு வாகன ஓட்டியிடம் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்யாதீர்கள் அண்ணா என செல்லமாக கடிந்துகொண்டார் சச்சின். அவர் நினைத்திருந்தால் செல்பி எடுத்ததோடு கிளம்பியிருக்கலாம், ஆனால் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு உணர்த்தியுள்ளதோடு அதை வீடியோவாக எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து சமூக விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளார் அவர்.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Monday, April 10, 2017, 10:53 [IST]
English summary
Read in Tamil about Sachin Tendulkar advices for youngsters about helmet's importance who attempts to take selfie with sachin.
Please Wait while comments are loading...

Latest Photos