ஒலிம்பிக் நாயகிகளுக்கு பிஎம்டபிள்யூ கார்களை பரிசளித்தது இவர்தானாம்!

By Saravana Rajan

ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் வென்று அசத்திய வீராங்கனைகளுக்கு பிஎம்டபிள்யூ கார்களை பரிசளிக்கும் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடந்ததது.

பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து அவரது பயிற்சியாளர் கோபி சந்த், மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் நான்காவது இடம் பிடித்த தீபா கர்மாகர் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார்கள் பரிசாக வழங்கப்பட்டன.

ஒலிம்பிக்ஸ் போட்டி

இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டு பிஎம்டபிள்யூ கார்களை வீராங்கனைகளுக்கு பரிசளித்ததாக மீடியாவில் செய்திகள் வெளியாகின.

ஆனால், உண்மையில் கார்களை வாங்கி பரிசளித்தது ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், ஹைதராபாத் பேட்மிண்டன் சங்கத் தலைவருமான சாமுண்டேஸ்வரநாத் வாங்கி பரிசளித்துள்ளார்.

இந்த கார்களின் சாவியை சச்சின் டெண்டுல்கரை வைத்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அவரை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தாராம்.

சாவிகளை வழங்குவதற்காகவே சச்சின் அழைக்கப்பட்டதாக இப்போது தகவல் வெளியாகியிருக்கிறது. பல கோடி மதிப்பிலான கார்களை சாமுண்டேஸ்வரிநாத்தான் வாங்கி பரிசளித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரே கார்களை வாங்கி பரிசளித்ததுபோல செய்தி வெளியிட்டது அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த தகவலை அவர் வெளியிட்டதற்கு பின் இந்த தகவல்கள் தற்போது மீண்டும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Sachin Tendulkar did not buy BMW cars for India's Rio heroes.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X