ரூ.2 கோடியில் புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்கிய சச்சின் டெண்டுல்கர்!

Written By:

பிஎம்டபிள்யூ பிரியரான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது கராஜில் பல பிஎம்டபிள்யூ மாடல்களை வரிசை கட்டி நிறுத்தி வைத்துள்ளார். இதுபற்றி பல செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்கியிருக்கிறது. கடைசியாக உலகின் அதிசிறந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மாலான பிஎம்டபிள்யூ ஐ8 காரை சச்சின் டெண்டுல்கர் வாங்கினார்.

இந்தியாவில் வெகு சொற்ப எண்ணிக்கையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரை அறிமுகம் செய்த கையோடு முதல் ஆளாக பதிவு செய்து டெலிவிரி பெற்றார். அத்துடன், அந்த காரை சமீபத்தில் தனது டேஸ்ட்டுக்க தகுந்தவாறு வண்ணத்தை மாற்றி கஸ்டமைஸ் செய்துள்ளார்.

இந்தநிலையில், இந்த ஆண்டில் இரண்டாவது புதிய பிஎம்டபிள்யூ காரை சச்சின் வாங்கியிருக்கிறார். தற்போது வாங்கியிருக்கும் மாடல் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய தலைமுறை 7 சீரிஸ் சொகுசு கார். இந்த காரை தனது விருப்பத்திற்கு ஏற்ப பல விசேஷ ஆக்சஸெரீகளுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கியிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை சச்சின்தான் இந்திய மார்க்கெட்டுக்காக அறிமுகம் செய்தார். அப்போதே முன்பதிவு செய்து வைத்து தற்போது டெலிவிரி பெற்றிருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் வாங்கியிருக்கும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 750எல்ஐ ஸ்போர்ட் என்ற வேரியண்ட். மேலும், இந்த காரில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பெர்ஃபார்மென்ஸ் பிராண்டான எம் பிராண்டு ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டு கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

எம் பெர்ஃபார்மென்ஸ் பேக்கேஜில் வழங்கப்படும் 20 இன்ச் அலாய் வீல்கள், க்ரோம் பூச்சுடன் கூடிய ஏர் இன்டேக்குகள், விசேஷ பம்பர் அமைப்பு என காரை சுற்றிலும் கூடுதல் விசேஷ ஆக்சஸெரீகள் மற்றும் மாற்றங்களுடன் கவர்ச்சியாக இருக்கிறது. லேசர்லைட் ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டுகள், க்ரோம் பீடிங் போன்றவை காருக்கு பாதுகாப்புடன் சேர்த்து அலங்காரத்தையும் தருகிறது.

சச்சின் இனிஷியலுடன் கூடிய உயர்தர லெதர் இருக்கைகள், ஒளிரும் எழுத்துக்களுடன் சில் கார்டுகள், 5.0 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம், முக்கியத் தகவல்களை முன்புற கண்ணாடியில் காட்டும் ஹெட் அப் டிஸ்ப்ளே வசதி, விரல் அசைவு மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் வசதி என வசதிகள் பட்டியல் நீள்கிறது.

பார்க்கிங் அசிஸ்டென்ஸ் வசதி உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை இந்த கார் கொண்டிருக்கிறது. இதன் செக்மென்ட்டில் சிறப்பான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கொண்ட மாடலும் கூட.

இந்த காரில் 8 சிலிண்டர்களுடன் இயங்கும் 450 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த பிரம்மாண்ட சொகுசு கார் செயல்திறனிலும் சளைத்ததல்ல. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த கார் மும்பையில் ரூ.2 கோடி அடக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Story first published: Tuesday, September 20, 2016, 18:32 [IST]
English summary
Sachin Tendulkar Gets A New Customised BMW 750Li M Sport To His Garage. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos