"தேங்க்யூ சச்சின்"... ஒரு சகாப்தத்தின் நிறைவு நாள்!!

By Saravana

வாழ்நாளின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியை ஆடிய சச்சின் ஆனந்த கண்ணீர் மல்க, நீங்கா நினைவுகளை மனதில் சுமந்தபடி இன்று விடைபெற்றார். விபரம் தெரிந்த நாள் முதல் கிரிக்கெட்டுடன் பின்னி பிணைந்து கிடந்த சச்சினுக்கு இன்று ஓய்வு என்ற ஒற்றைச் சொல் மிகுந்த மன வலியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. பணம், புகழ் ஒருபுறம் இருந்தாலும், தனி மனித அளவில் ஓய்வு எனும் வார்த்தை மிகுந்த ரணத்தை தரக்கூடியது. இருந்தாலும், இது என்றுமே தவிர்க்க முடியாத நாள் என்பது அவர் அறிந்திராரது அல்ல.

இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட் வரலாற்றின் ஒரு சகாப்த நிறைவு நாளாக மிகவும் உணர்ச்சி பெருக்குடன் இன்றைய தினத்தை தேசம் கடந்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட் ஆடாத சமயங்களில் கார்கள்தான் எனக்கு உற்சாகத்தை தரும் விஷயம் என அவர் அடிக்கடி பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

கிரிக்கெட்டுக்கு முன்னர் இருந்தே கார் காதலரான சச்சினிடம் ஏராளமான கார்கள் இருக்கின்றன. சொந்தமாக வாங்கியது, பரிசாக பெற்றது என இந்த பட்டியல் மிக நீளம். ஒய்வு என்ற சொல்லால் மனதில் ஏற்பட்டிருக்கும் வலியை மறக்கச் செய்யும் மருந்தாக அவரது கார் கேரேஜ் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சச்சின் டெண்டுல்கரின் முதல் காரிலிருந்து இதுவரை வைத்திருந்த முக்கிய கார்களை பற்றிய விபரங்களை இந்த சிறப்புச் செய்தித் தொகுப்பில் காணலாம்.

மாருதி 800

மாருதி 800

பல இந்தியர்களை போலவே சச்சின் டெண்டுல்கருக்கும் மாருதி 800 கார்தான் முதல் காராகும்.

ஃபியட் பாலியோ

ஃபியட் பாலியோ

2000க்கு முன்னர் விளம்பர தூதராக இருந்த சச்சினுக்கு பாலியோ காரை ஃபியட் பரிசாக வழங்கியது. சச்சினை பெருமைப்படுத்தும் விதத்தில் பாலியோ எஸ்10 என்ற பெயரில் சிறப்பு பதிப்பு மாடலும் வெளியிடப்பட்டது.

ஓபல் அஸ்ட்ரா

ஓபல் அஸ்ட்ரா

1998ல் ஷார்ஜாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் டெண்டுல்கருக்கு ஒபல் அஸ்ட்ரா செடான் கார் பரிசாக வழங்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர் கேரேஜை அலங்கரித்ததில் இந்த காருக்கும் மிக முக்கிய பங்கு உண்டு.

ஃபெராரி கார்

ஃபெராரி கார்

2002ல் சர் டான் பிராட்மேனின் 29 சத சாதனையை தொட்டதற்காக, ஃபியட் நிறுவனம் ஃபெராரி 360 மொடேனா ஸ்பைடர் காரை பரிசாக வழங்கியது. இந்த காருக்கு இறக்குமதி வரியை ஃபியட்தான் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

நிசான் ஜிடி-ஆர்

நிசான் ஜிடி-ஆர்

ஃபெராரி காரை விற்பனை செய்தவுடன் சச்சின் வாங்கிய ஸ்போர்ட்ஸ் கார் நிசான் ஜிடிஆர். கடந்த 2011ம் ஆண்டு இந்த காரை அவர் இறக்குமதி செய்து வாங்கினார். இந்த கார் ரூ.2.5 கோடி மதிப்புடையது. சச்சினுக்கு தகுந்தவாறு காரில் மாற்றங்களை செய்து தருவதற்காக நிசான் நிறுவனம் துபாயிலிருந்து எஞ்சினியர்களையும் அனுப்பியது நினைவிருக்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி36 ஏஎம்ஜி

மெர்சிடிஸ் பென்ஸ் சி36 ஏஎம்ஜி

பிஎம்டபிள்யூ பிரியரான சச்சினின் முதல் கார் இதுதான். 276 எச்பி ஆற்றலை அளிக்கும் சக்தி கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் சி36 ஏஎம்ஜி காரை தவிர்த்து, மெர்சிடிஸ் பென்ஸ் 600எஸ் ரோட்ஸ்டெர் காரையும் வைத்திருக்கிறார்.

போர்ஷே பாக்ஸ்டர்

போர்ஷே பாக்ஸ்டர்

போர்ஷே பாக்ஸ்டரை ஓட்டுவது சச்சினுக்கு மிகந்த உற்சாகத்தை தருமாம். சச்சின் கேரேஜில் இடம்பிடித்த பெருமைக்குரிய கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

பிஎம்டபிள்யூ கார் காதலரான சச்சின் டெண்டுல்கர், அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் செயல்பட்டு வருகிறார். 1 சீரிஸ், 3 சீரிஸ், 7 சீரிஸ் கார்களை பிரபலப்படுத்தும் முயற்சிகளில் சச்சினுக்கும் பங்கிருந்தது. பிஎம்டபிள்யூவின் 2013 மாடல் 7 சீரிஸ் காரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சச்சின் பங்கு கொண்டபோது எடுத்த படம் இது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை சொந்தமாக சச்சின் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினும் கார்களும்...

சச்சினும் கார்களும்...

கிரிக்கெட்டும், கார்களும் சச்சினுக்கு இரு கண்கள் போன்றவை. இவற்றை விட்டு சச்சினால் பிரிந்திருக்க முடியாது. எனவே, வேறு புதிய வடிவில் நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களுடன் சச்சின் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வார் என்ற நம்பிக்கையில்... இன்றைய நிறைவு நாளை துவக்கமாக கருதி சச்சினை வாழ்த்துவோம்.

Most Read Articles
English summary
With Sachin having played possibly the last cricket match of his life it marked the end of an era. While fans will certainly miss the master blaster the man himself is sure to terribly miss game. But on the bright side he should now have a lot of spare time. Time which can be used to indulge in his other passion. Cars.
Story first published: Saturday, November 16, 2013, 16:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X