கொலை, கொள்ளை பாலியல் வண்புணர்வின் கூடாரமாக மாறிப்போன நெடுஞ்சாலைகள் : பாதுகாப்பான பயணத்திற்கான வழிகள்

தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பாலியல் வண்புணர்வு சம்பவங்களை தவிர்க்க காவல்துறை கூறும் அறிவுரைகள் குறித்த இந்த தொகுப்பில் காணலாம்.

By Arun

உத்தரப்பிரதேச மாநில நெடுஞ்சாலையில் 4 பெண்கள் பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதும், ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதும், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்திற்கு காவல்துறையினர் 10 சேஃப்டி டிப்ஸ்களை வழங்கியுள்ளனர்.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள்..!!

உத்தரபிரதேச மாநிலம் புலன்சாதர் மாவட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் தங்களது உறவினரை பார்ப்பதற்காக ஒரு குடும்பத்தினர் காரில் புறப்பட்டனர். காரில் 4 பெண்கள் உள்பட 7 பேர் இருந்தனர். இந்த கார் நொய்டாவின் சபூட்டா கிராமத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென சாலையில் தறிகெட்டு ஓடியது.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள்..!!

இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி பார்த்தார். அப்போது முன்பக்க டயர்கள் இரண்டும் ‘பஞ்சர்' ஆகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது சகோதரருக்கு போன் செய்து உதவிக்கு அழைத்தார்.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள்..!!

இதனால் காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கி நின்றுகொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கிகளுடன் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்து அவர்களை சுற்றிவளைத்தது. பின்னர் அந்த மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த நகை, செல்போன்கள் மற்றும் பணப்பை உள்ளிட்டவற்றை பறித்தனர்.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள்..!!

அவர்கள் அதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த அந்த 4 பெண்களையும் மறைவான பகுதிக்கு இழுத்துச்சென்று கற்பழித்தனர். இதனை தடுக்க முயன்ற அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள்..!!

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெடுஞ்சாலை பயணங்கள் ஆபத்து நிறைந்ததாக மாறி வருவதாக அச்சம் தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள். இந்தப் பிரச்சனை உ.பி-யில் மட்டும் நடப்பதல்ல, பெரும்பாலான நெடுஞ்சாலைகளிலும் இது தொடர்கதையாகி வரும் சம்பவமே. இதனை தடுக்க காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அது குறித்து விரிவாக காணலாம்.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள்..!!
  • நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது தெரியாதவர்களுக்கும், மர்மமாக காணப்படுவோர்க்கும் கண்டிப்பாக லிஃப்ட் கொடுக்கக்கூடாது.
  • குழந்தைகளுக்கு தண்ணீர், பால், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவைகளை அவசியம் எடுத்துச் செல்வது நல்லது.
  • நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள்..!!
    • அதிக விழிப்புணர்வுடன் சாலைகளில் பயணித்தல் நல்லது. மரங்கள், கற்கள் உள்ளிட்டவை சாலையின் நடுவே இருந்தால் மிக மிக எச்சரிக்கை அவசியம்.
    • பயணத்தின் போது காரின் கதவுகள், ஜன்னல்கள், பானட் உள்ளிட்டவற்றில் ஏதாவது பொருள் வந்து விழுந்தால் நிச்சயம் காரை நிறுத்தக்கூடாது.
    • நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள்..!!
      • பயணத் திட்டம் குறித்து சாலையோர உணவகங்கள் அல்லது கடைகள் உள்ளிட்டவைகளில் பேசுவது கூடாது.
      • இரவு பயணங்களின் போது இரட்டிப்பு எச்சரிக்கையுடன் வாகனத்தை செலுத்துவதுடன் காருக்கு தேவையான மாற்று சக்கரம், கழற்றி மாற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
      • நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள்..!!
        • செல்லும் வழியில் யாராவது அருகே வந்து உங்களது வாகனத்தில் இருந்து பெட்ரோல்/டீசல்/ஆயில் கசிகிறது என்று கூறினால் நிச்சயம் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் சுங்கச்சாவடி, காவல் நிலையம் அருகில் நிறுத்துவதே சிறந்தது.
        • யாரேனும் உங்களை தொடர்ந்து வருவது போல் உணர்ந்தால் காவல் துறையினரை உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
        • நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள்..!!
          • வாடகை டேக்ஸிக்களில் பயணம் செய்யும் போது உங்களுக்கு தெரிந்தவருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிப்பதோடு காரின் பதிவு எண், ஓட்டுநரின் மொபைல் எண் மற்றும் பயணத் திட்டம் உள்ளிட்ட தகவல்களை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
          • பயணத்தின் போது சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக ஆள அரவமற்ற பகுதிகளில் வாகனத்தை நிறுத்துவது ஆபத்தாகலாம், எனவே உணவகங்கள், சுங்கச்சாவடி உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த பகுதிகளில் மட்டுமே வாகனத்தை நிறுத்துவது நலம்.
Most Read Articles
English summary
Read in Tamil about tips for travelling safely in highways
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X