சவூதி அரேபியாவில் உருவாகும் '5 ஸ்டார்' ரயில்வே ஸ்டேஷன்!

Posted by:
Updated: Thursday, May 23, 2013, 13:11 [IST]
 

சவூதி அரேபிய தலைநகர், ரியாத்தில் உலகின் மிக ஆடம்பரமான மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. எண்ணெய் வளம் கொழிக்கும் சவூதி அரேபியாவை ஆண்டு வரும் மன்னர் அப்துல்லா இந்த புதிய ரயில் நிலையத்தையும், 6 வழித்தடங்கள் கொண்ட ரயில் பாதையையும் 4 ஆண்டுகளில் முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

மிகவும் குறுகிய காலத்தில் உலகின் மிக ஆடம்பரமான இந்தரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையம் 6 ரயில் வழித்தடங்களை கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. லண்டனை சேர்ந்த ஈராக் வம்சா வளி கட்டட கலை வல்லுனர் ஸாகா ஹாதித் இந்த ரயில் நிலைய வடிவமைப்புக்கான ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

தங்கத் தகடுகள்

தரையில் மார்பில் கற்களும், சுவர்களில் தங்கத் தகடுகளும் பதிக்கப்பட உள்ளன.

நகரும் படிக்கட்டு

எளிதாக செல்வதற்கு வசதியாக நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிஃப்ட் வசதிகள் இருக்கும்.

குளு குளு வசதி

ரயில் நிலையம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.

கூரை டிசைன்

பாலைவன மணல் மடிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் கூரை டிசைன் செய்யப்பட உள்ளது.

குறுகிய காலம்

நியூயார்க்கில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தை புனரமைக்கவே 4 ஆண்டுகள் பிடிக்கும் நிலையில், ஒட்டுமொத்த பணிகளையும் 4 ஆண்டுகளில் முடிக்கப்பட உள்ளது கட்டுமான உலகிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகின் ஆடம்பர ரயில் நிலையம்

ஒட்டுமொத்தத்தில் உலகில் இருக்கும் அனைத்து ரயில் நிலையங்களையும் பின்னுக்குத்தள்ளும் அம்சங்களுடன் 7 ஸ்டார் ஓட்டல்களுக்கு இணையாக காட்சி தரும்.

செல்வ செழிப்பு

தங்களது செல்வ செழிப்பை உலகுக்கு பரைசாற்றும் விதத்தில் இந்த ஆடம்பர மெட்ரோ நிலையத்தை சவூதி அரேபிய மன்னர் அமைக்க முடிவு செய்துள்ளார்.

Story first published:  Thursday, May 23, 2013, 13:04 [IST]
English summary

Saudi Arabia will get 5 star railway station

Saudi Arabia’s King Abdullah wants to build (Five) 5 star railway station. Check out, some model images of this new 5 star railway station.
கருத்தை எழுதுங்கள்

Latest Photos

Latest Videos

Free Newsletter

Sign up for daily auto updates

New Launches