புவியின் மூச்சுக்காற்றை நிறுத்திவிடாதீர்கள்...!!

உலக புவி தினம் இன்று சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. புவியின் உயிர்மூச்சு நின்றுவிடாமல் தடுக்கும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்த தினம் 190 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

புவி உருவாகி 450 கோடி ஆண்டுகளை தாண்டியுள்ள இந்த வேளையில் பல்வேறு காரணங்களால் புவியின் இயற்கைத் தன்மைகள் குறைந்து செயற்கைகளால் அழிவையும், ஆபத்தையும் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த தினத்தில் புவியை காக்கும் செயல்களை கடைபிடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் புவியின் உயிர் மூச்சு நிலைக்கும்.

(குறிப்பு: கருத்து பெட்டி முன்பைவிட எளிதான முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. வாசகர்கள் வழக்கம்போல் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம்.)

முதன்முதலில்

முதன்முதலில்

முதலில் செப்டம்பர் 21ம் நாள் புவி தினமாக கொண்டாடப்பட்டது. பூமியின் தென்பகுதியில் இலையுதிர் சமகால நாளாகவும், வடபகுதியில் வசந்தகால சமகால நாளாக இருந்ததால் இந்த தினத்தில் கொண்டாடப்பட்டது.

மாறிய புவி தினம்

மாறிய புவி தினம்

பின்னர், சுற்றுச் சூழலுக்காக முதன்முதலில் குரல் கொடுத்த கிறிஸ்தவ பாதிரியார் பிரான்ஸிஸ் நினைவாக 1970ம் ஆண்டு அவரது பிறந்த தினமான ஏப்ரல் 22ந் தேதி முதல் உலக புவி தினம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

வாகனங்களால் அதிகம்

வாகனங்களால் அதிகம்

புவிக்கு ஆஸ்துமா வருவதற்கு வாகனப் புகையும், தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் அடர்த்தியான கரும்புகையும் முக்கிய காரணம். ஒலி மாசுப்பாட்டுக்கும் வாகனங்களே காரணம். வாகனங்களின் ஒலிப்பான் மிக முக்கிய காரணியாக உள்ளது.

 கான்கிரீட் காடுகள்

கான்கிரீட் காடுகள்

மாநகரங்கள் இன்று கான்கிரீட் காடுகளாக காட்சியளிக்கின்றன. இதுவே புவி வெப்பமயமாதலுக்கான காரணங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், மழைப்பொழிவு குறைந்து பாலைவனமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

அணுசக்தி அரக்கன்

அணுசக்தி அரக்கன்

அணுசக்தியும் பூமியை அணு அணுவாக கொல்லும் காரணிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

தூய ஆற்றல்

தூய ஆற்றல்

இந்த புவி தினத்தில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, ஒலி மாசுபாடு ஆகியவற்றை தவிர்க்க நம்மால் இயன்றதை இன்றிலிருந்து கடைபிடிக்க வேண்டும். தூய ஆற்றல், மறுசுழற்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

 காடுகள் வளர்ச்சி

காடுகள் வளர்ச்சி

ஒரு பக்கம் மனிதர்களின் அடாவடி, ஆட்சிமானத்தால் காடுகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் கடந்த 30 ஆண்டுகளில் புவியின் மேற்பரப்பில் காடுகள் பரப்பு 7 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக நாசா தெரிவிதிருக்கும் செய்தி ஆறுதல் கொடுத்துள்ளது. புவியின் மேற்பரப்பில் காடுகள் வளர்ந்திருப்பது பச்சை, நீலத்தில் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.

உறுதி ஏற்போம்

உறுதி ஏற்போம்

தேவையில்லாத வாகன பயன்பாட்டையும், ஒலி எழுப்புவதை தவிர்ப்போம். வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் பயன்பாடு குறைத்தல் உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களில் கவனம் கொண்டு கடைப்பிடித்தால் குறைந்தபட்சம் நம் சந்ததியினருக்காக புவி உயிர் வாழும்.

Most Read Articles
English summary
Everyone can and should make a contribution, no matter how small each action appears. If everyone works together, we can make a difference that really matters. Please take a little time to view the 'SaveEarth'activities.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X