ஆபத்தை உணராமல் 4 வயது மகனுடன் காரில் பயணம் செய்யும் நடிகர் ஷாருக்கான்..!!

Written By:

பாதுகாப்பு இல்லாமல் தனது 4 வயது மகனை காரில் பயணம் செய்ய வைத்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது, சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் நான்கு வயது மகனான அப்ராம் கான், இந்திய ஊடகங்களின் பார்வையில் தற்போதே நட்சத்திர அந்தஸ்தில் உள்ளான்.

சமீபத்தில் ஷாருக்கான் காரை ஓட்ட, மகன் அப்ராம் கான் காரின் உள்ளே நின்றுக்கொண்டு சன்ரூஃப் மூலம் தலையை வெளியே நீட்டி உற்சாகமாக பயணிப்பது போன்ற புகைப்படம் வெளியானது.

சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகைப்படத்தால், மகனுக்கு போக்குவரத்து விதிமீறல்களை ஷாருக்கான் கற்றுத்தரமால் வளர்க்கிறார் என்று கண்டனங்கள் எழுந்தன.

சமூகவலைதள வாசிகள் இந்த 4 வயது அப்ராம் கான் மீது அக்கறை கொள்வதற்கும், ஷாருக்கானின் பொறுப்பற்ற நடவடிக்கையை கடிந்து கொள்வதற்கும் இரு காரணங்கள் உள்ளன.

டெல்லியில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களில், காரின் சன்ரூப்பில் தலையை வெளியே நீட்டி பயணம் செய்து கொண்டு இருந்த இரு குழந்தைகளின் கழுத்தில், எங்கியிருந்தோ பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சா நாணல் சிக்கிக்கொள்ள, அதனால் குழந்தைகளின் தொண்டை நசுக்கப்பட்டு, மூச்சுத்திணறி உயிரழந்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் 2016ல் ஆகஸ்டு மாதத்தில் அடுத்தடுத்து நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த விபத்தில் இறந்த இரு குழந்தைகளுக்குமே ஷாருக்கானின் மகன் அப்ராம் கானின் வயது தான் இருக்கும்.

இந்த இரு காரணங்களினால் தான் இணையதள வாசிகள், சிறுவன் அப்ராம் கானை தந்தை ஷாருக்கான் காரில் பொறுப்பில்லாமல் அழைத்து செல்வது கண்டன குரல்களை எழுப்பியுள்ளனர்.

தந்தை ஷாருக்கானின் முன்னிலையில் அப்ராம் கான் இதுபோல் பயணம் செய்து இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூப் டாப் இல்லாத கார் ஒன்றில், உதவியாளர் மடியில் ஏறி அப்ராம் கான் தலையை வெளியே காட்டி நிற்க, அதில் ஷாருக்கான் கார் ஓட்டுவது போன்று ஏற்கனவே ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது.

பயணத்தில் இருக்கும் கார் ஒன்றில் சன்ரூப்பில் தலையை வெளியே நீட்டி குழந்தைகளை பயணிக்க வைக்கும் பெற்றோரின் செயல் ஏற்க முடியாது.

ஒரு வயது வரை குழந்தைகளை சீட் பெல்டுகளை அணிவித்து தான் காரில் பயணிக்க வைக்க வேண்டும். அது தான் சரியான் நெறிமுறையும் கூட.

சமூகத்தில் பொறுப்பான ஒரு துறையில் பிரபலமாக இருக்கும் ஷாருக்கான் போன்றவர்களே இதுபோல போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்வது ஏற்புடையது அல்ல.

மேலும் இதை பார்க்கும் பலர் தங்களது குழந்தைகளையும் சன்ரூஃபில் தலையை வெளியே காட்டி பயணிக்க வைக்க இந்த செயலே காரணமாக அமைந்து விடும், என்பன போன்ற கருத்துகள் இதன்மூலம் முன்வைக்கப்படுகின்றன.

நட்சத்திர அந்தஸ்துடன் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பது பெரும்பாலான திரையுலகரின் விருப்பமாக இருக்கலாம்.

அனால் அதற்கான குழந்தைகளின் பாதுகாப்பை மறந்து செயல்படுவது ஏற்கமுடியாது எனவும் ஷாருக்கானுக்கு சிலர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

குழந்தைகளை காரில் அழைத்து செல்லும் பெற்றோர்கள், அதற்கான பாதுகாப்பை மறந்தாலும், கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல , குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 'சைல்டு ஸ்பேட்டி' என்ற வசதியை ஏற்படுத்தியுள்ளன.

உலகின் அதிகமாக நடக்கும் சாலை மரணங்களுக்கான பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது. நடிகர் ஷாருக்கான் போல சமூகத்தில் மதிக்கத்தக்க பதவிகளில் இருப்பவர்கள் இதை களையத்தான் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டுமே தவிர.

இதுபோன்ற செயல்களை செய்து, அதை செய்தியாக மாற்றி, பின்பு அது சமூகவலைதளங்களில் வைரலாக்கி பின்பு அதன்மூலம் ஒரு பெரிய பரபரப்பை ஏற்புடுத்திக்கொள்வது என்பது சினிமாவில் சாத்தியமாகலாம், நிஜ வாழ்க்கையில் நிஜமாகக் கூடாத ஒன்று.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Shah Rukh Khan Lets his 4 year old son AbRam Khan Unsafe in a Car Ride. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos