விலை மதிப்பில்லா 8 கார்வெட் கார்களை உள்வாங்கிய மெகா பள்ளத்துக்கு வந்த மவுசு!

அமெரிக்காவில் கென்டக்கி என்ற இடத்தில் செவர்லே கார்வெட் கார்களுக்கான பிரத்யேக கண்காட்சியகம் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த மியூசியத்தில் உள்ள ஸ்கைடோம் என்ற கண்காட்சி அரங்கின் உள்பகுதியில் பூமி உள்வாங்கி 40 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஒன்று உருவானது.

அங்கு காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை மதிப்பற்ற 8 கார்வெட் கார்கள் அந்த பள்ளத்திற்கு விழுந்து புதைந்தன. கான்கிரீட், மண் போன்றவற்றால் அந்த கார்கள் கடுமையாக சேதமடைந்தன.

இந்த நிலையில், அந்த ஸ்கைடோம் கண்காட்சியக அரங்கில் ஏற்பட்ட பள்ளத்தை காண ஏராளமானோர் வருகை தர துவங்கினர்.பார்வையாளர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை அப்படியே பாதுகாத்து பராமரிக்க முடிவு செய்துள்ளனர்.

தவிர, அந்த பள்ளத்தில் ஒரு சில கார்களை போட்டு அதனை சுற்றுலாப் பகுதியாக மாற்றியுள்ளனர்.

கூடுதல் சுவாரஸ்யத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அரிய கார்கள்

அரிய கார்கள்

கென்டக்கி பகுதியில் அமைந்திருக்கும் இந்த மியூசியத்தில் அரிதான பல கார்வெட் கார்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பள்ளத்திற்குள் விழுந்த ஒவ்வொரு காருக்கு பின்னாலும் பல சுவாரஸ்யங்கள் இருப்பதாகவும், அவை மதிப்பிட முடியாத பொக்கிஷங்கள் என கண்காட்சியத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மீட்பு

மீட்பு

பள்ளத்திற்குள் விழுந்த 8 கார்வெட் கார்களில் 5 கார்களை மீட்டுவிட்டனர்.

மதிப்பு

மதிப்பு

பள்ளத்திற்குள் விழுந்த 8 கார்களின் மொத்த மதிப்பு 1 மில்லியன் டாலருக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

 கார்கள் விபரம்

கார்கள் விபரம்

1962 பிளாக் கார்வெட்

1984 பிபிஜி பேஸ் கார்

1992 மாடல் ஒரு மில்லியனாவது கார்வெட் கார்

1993ம் ஆண்டு கார்வெட் காரின் 40 ஆண்டு கொண்டாடத்திற்கு வெளியிடப்பட்ட ரூபி ரெட் மாடல்

2001 மல்லெட் ஹாமர் இசட்06 கார்வெட்

2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு மில்லியனாவது வெள்ளைநிற கார்வெட்

மேற்கண்ட கார்கள் மியூசியத்துக்கு சொந்தமானது. மீதமுள்ள இரண்டு கார்கள் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கிய கடனில் இருந்தவையாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றின் விபரம்,

1993 இசட்ஆர்-1 ஸ்பைடர்

2009 இசட்ஆர்-1 புளூ டெவில்

மியூசியம்

மியூசியம்

கடந்த 1994ம் ஆண்டு இந்த தேசிய கார்வெட் மியூசியம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. இந்த மியூசியத்தில் வாடிக்கையாளர் விரும்பினால் கார்வெட் காரை டெலிவிரி கொடுக்கும் வழக்கமும் இருந்து வருகிறது.

கார்வெட் ஆலை

கார்வெட் ஆலை

தேசிய கார்வெட் மியூசியம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில்தான் செவர்லே கார்வெட் கார்கள் தயாரிக்கும் பவுலிங் க்ரீன் அசெம்பிளி ஆலை அமைந்துள்ளது. கடந்த 1981ம் ஆண்டு முதல் இந்த கார் ஆலையில்தான் செவர்லே கார்வெட் கார்கள் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இது சகஜம்

இது சகஜம்

மியூசியம் அமைந்திருக்கும் கென்டக்கி பகுதியில் தரையில் இதுபோன்று திடீர் பள்ளங்கள் ஏற்படுவது வாடிக்கை என தெரிவிக்கப்படுகிறது.

ரசிகர்கள் வேதனை

ரசிகர்கள் வேதனை

கார்வெட் கார்கள் பள்ளத்தில் விழுந்து சேதமடைந்ததை மியூசியத்தை சேர்ந்த அதிகாரிகள் மட்டுமின்றி கார்வெட் ரசிகர்களும் வேதனை தெரிவித்திருந்தனர்.

Most Read Articles
English summary
A 40-foot sinkhole opened up in the National Corvette Museum on Feb 12, 2014, swallowing eight priceless Corvettes in the process. Now this sinkhole has become such a popular attraction that officials want to preserve it. They may even put some of the crumpled cars back inside the hole. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X