கார் ஓட்டுனர்களை 'டார்கெட்' செய்து விளம்பரங்களை காட்டும் புதிய ஸ்மார்ட் விளம்பர பலகை!

By Saravana Rajan

வாடிக்கையாளர்களின் தேவைக்கும், ஆர்வத்திற்கும் ஏற்ப, இலக்கு வைத்து செய்யப்படும் Targeted Advertising தொழில்நுட்ப உத்திகள் தற்போது இணையதளங்களிலும், மொபைல்போனகளிலும் அதிக அளவு கையாளப்படுகின்றன.

உதாரணத்திற்கு, வீடு, கார் உள்ளிட்டவை பற்றிய விபரங்களை இணையதளங்களில் தேடும்பட்சத்தில், அதற்கு தொடர்புடைய விளம்பரங்களை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல்போனுக்கும், கம்ப்யூட்டருக்கும் விளம்பர நிறுவனங்கள் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துணையுடன் அனுப்புகின்றன. சில சமயம் போதும் போதும் என்றளவிற்கு இருந்தாலும், இதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.

விளம்பர பலகை

இந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த கிளவுடியன் என்ற சாஃப்ட்வேர் நிறுவனமும், டென்ட்சூ என்ற விளம்பர ஏஜென்சி நிறுவனமும் இணைந்து இந்த விளம்பர உத்தியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன. ஆம், சாலையில் செல்லும் கார் உரிமையாளர்களை இலக்கு வைத்து, விளம்பரங்களை ஒளிபரப்பும் புதிய ஸ்மார்ட் விளம்பர பலகை ஒன்றை இந்த நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன.

இந்த புதிய ஸ்மார்ட் விளம்பர பலகை மூலமாக, சாலையில் வரும் கார், எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பதையும், அதன் மாடல் விபரம் மற்றும் தயாரிக்கப்பட்ட வருடம் உள்ளிட்ட தகவல்களை விசேஷ கேமரா மூலமாக கண்டறிந்து, அதற்கு தகுந்தாற்போல் விளம்பரங்களை ஸ்மார்ட் பலகையில் ஒளிபரப்பும்.

அதாவது, ஒருவர் பழைய மெர்சிடிஸ் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இந்த ஸ்மார்ட் விளம்பர பலகைக்கு அருகில் வரும்போது, ஹாய், உங்களது பழைய மெர்சிடிஸ் காருக்கு பதிலாக, இந்த புதிய காரை மாற்றிக்கொள்ளாலாமே, என்று தெரிவிக்கும். அதாவது, அதன் போட்டி நிறுவனங்களான பிஎம்டபிள்யூ அல்லது ஆடி நிறுவனங்களின் கார்களுக்கான விளம்பரமாக இருக்கும்.

இதன்மூலமாக, வாடிக்கையாளர்களை எளிதாக கவர்வதோடு, அவர்களுக்கான தேவையான விளம்பரத்தை பலகையில் காட்டி, கூடுதல் கவனத்தை ஈர்ப்பதுதான் இந்த ஸ்மார்ட் விளம்பர பலகையின் நோக்கம். இந்த ஸ்மார்ட் விளம்பர பலகை எவ்வாறு சாலையில் செல்லும் கார் விபரத்தை கண்டறிகிறது என்கிறீர்களா?

ஒவ்வொரு காருக்கும் தொடர்புடைய பழைய கார் படங்களை கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துள்ளனர். ஒவ்வொரு காருக்கும் கிட்டத்தட்ட 4,000 படங்கள் கம்பயூட்டரில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். விளம்பர பலகையில் உள்ள கேமரா மூலமாக, சாலையில் வரும் காரை படம் பிடித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்யும். அந்த படத்துடன் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் படங்களை ஒப்பிட்டு பார்த்து, இது இன்ன மாடல்தான் என்பதை சரியாக கண்டுபிடித்துவிடும்.

கிட்டத்தட்ட 94 சதவீதம் அளவுக்கு துல்லியமாக கார் மாடல்களை இந்த ஸ்மாட்ர் விளம்பர பலகை கண்டறிந்துவிடுமாம். மேலும், வெறும் 5 வினாடிகளில் அந்த வாகன ஓட்டுனருக்கு தொடர்புடைய விளம்பரத்தையும் திரையில் காட்டிவிடுமாம்.

இந்த புதிய தொழில்நுட்பத்திலான ஸ்மார்ட் விளம்பர பலகை, விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பான வர்த்தகத்தை வழங்கும் என்றும், இதனை அறிமுகப்படுத்தியிருக்கும் கிளவுடியன் மற்றும் டென்ட்சூ நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், சாலையில் இருக்கும் விளம்பர பலகைகளால், ஓட்டுனர்களின் கவனம் சிதறும் அபாயம் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய ஸ்மார்ட் விளம்பர பலகை கார் ஓட்டுனர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதால், விபத்து அபாயம் அதிகரிக்கும் என்பதையும் மறுக்க இயலாது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Smart billboards will identify car models And Show The Related Ads To Drivers
Story first published: Friday, July 1, 2016, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X