கார் ஓட்டுபவர்கள் செய்யும் சில மோசமான செயல்கள்!

சிலர் கார் ஓட்டும்போது, அதை தவிர்த்து மற்ற அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டு வருவர். ஒரு சிலர் விதிகளை பற்றியும், பிற வாகன ஓட்டிகள் பற்றியும் கவலைப் படாமல் இஷ்டத்திற்கு காரை செலுத்துவர்.

அதுபோன்று, சாலையில் இன்று நாம் காணும் சில டிரைவர்களின் கெட்ட செயல்களை படம் மூலம் விளக்கும் வகையில் இந்த செய்தியை தொகுத்துள்ளோம். அனைவரையும் இந்த லிஸ்ட்டில் சேர்க்க முடியாது. சிலர் டிரைவர்கள் செய்யும் இதுபோன்ற சுயநலமிக்க செயல்களுக்கு ஒரு காரணத்தையும் கையோடு வைத்திருப்பர். முடியாத பட்சத்திற்கு அவசரமாக போறேன் என்ற பதிலை சொல்லி வாயடைக்க வைக்கின்றனர். ஸ்லைடரில் வந்து பாருங்கள். இந்த பிரச்னையை நீங்களும் நித்தமும் சந்திக்கலாம்.

புகைப்படங்களின் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

மோசமான செயல்கள்

மோசமான செயல்கள்

அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இதனை தொகுத்துள்ளோம்.

நடைபாதையில் செல்வது

நடைபாதையில் செல்வது

சிலர் சாலையை விட்டுவிட்டு நடைபாதையின் மீது ஏற்றி சிக்னலுக்கு முன்னே செல்ல துடிப்பார்கள். சிலர் அதிலேயே பார்க்கிங் செய்துவிட்டு சென்றுவிடும் வழக்கமும் உண்டு.

ரிவர்ஸ் எடுக்கும்போது...

ரிவர்ஸ் எடுக்கும்போது...

டிரைவிங்கில் நான் சூரப்புலி என்பதை காட்டுவதற்காக மொபைலில் பேசிக்கொண்ட ரிவர்ஸ் எடுப்பது.

மேக்கப் போடுவது

மேக்கப் போடுவது

கார் ஓட்டும்போதும், சிக்னலில் நிற்கும்போதுதான் பலர் மேக்கப் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிக்னல் போட்டாலும் இவர்களுக்கு தெரியாது.

காலை டிபன்

காலை டிபன்

பலருக்கு காலை டிபன் காரில்தான். சாப்பிடக்கூட நேரமில்லை என்பது இவர்களின் ஆதங்கம். அரை மணி நேரம் முன்கூட்டி எழுந்தால் இந்த பிரச்னை இருக்காது.

அடுத்தவரை குற்றம் சொல்வது

அடுத்தவரை குற்றம் சொல்வது

கார் ஓட்டும்போது எதற்கெடுத்தாலும் அடுத்தவரை குறைசொல்லிக் கொண்டு டென்ஷனாவது.

ரோட் ரேஜ்

ரோட் ரேஜ்

தேவையில்லாமல் அடுத்தவருடன் சண்டை போடுவது.

டெயில் கேட்

டெயில் கேட்

சிலர் முன்னால் செல்லும் காருக்கு பின்னால் மோதுவது போன்று ஓட்டுவதுடன், ஹாரனை அடித்து எரிச்சலூட்டுவர்.

சிகரெட்

சிகரெட்

காரில் சிகரெட்டை பிடித்து வெளியில் சாம்பலை தட்டுவது. பின்னால் வருபவர்களின் கண்களில் படும் என்ற பொது அறிவு இல்லாத அறிவுஜீவிகள் இவர்கள்.

தப்பாச்சே

தப்பாச்சே

மொபைல்போனில் அழைப்பு வந்த பின்னர் பேசிக் கொண்டேதான் மியூசிக் சிஸ்டத்தின் வால்யூமை குறைப்பது பலருக்கு வாடிக்கை.

டைப்பிங்

டைப்பிங்

கார் ஓட்டும்போதுதான் பலருக்கு எஸ்எம்எஸ் டைப் செய்யும் பழக்கமிருக்கிறது.

இது வேடிக்கையா?

இது வேடிக்கையா?

சாலையில் விபத்தில் சிக்கி கிடப்பவர்களுக்கு உதவி செய்யாமல், நடுரோட்டில் கார், டூ வீலரை நிறுத்திக் கொண்டு வேடிக்கை பார்ப்பது. டிராஃபிக் ஜாம் ஏற்படுத்தும் புண்ணியவான்கள்.

கண்டபடி நிறுத்துவது

கண்டபடி நிறுத்துவது

பார்க்கிங் காலியாக இருக்கும் நேரத்தில் இஷ்டத்திற்கு காரை நிறுத்திவிடுவது. பின்னால் வருபவர்கள் பற்றி யோசிப்பது கிடையாது. கோயிலுக்கு போனாலும், ஷாப்பிங் போனாலும் இப்படி நிறுத்துவது சிலருக்கு வழக்கம்.

அட ராமா

அட ராமா

அலுவலகம் செல்லும்போது மனைவி அல்லது உடன் வருபவருடன் படு சுவாரஸ்யமாக பேசிக் கொண்டே பின்னால் வருபவர்களை பற்றி கவலைப்படாமல் காரை உருட்டிக் கொண்டே செல்வது.

ஹை பீம்

ஹை பீம்

சிலர் ஹெட்லைட்டில் ஹை பீம் போட்டுதான் ஓட்டுவது வழக்கம். லோ பீம் என்றால் என்ன என்பதே தெரியாது.

மடியில் குழந்தை

மடியில் குழந்தை

பலபேர் மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு கார் ஓட்டுவதை பெருமையாக செய்கின்றனர். ஆபத்தை உணராமல்.

விட்டுவிடுங்கள்

விட்டுவிடுங்கள்

இது யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. அன்றாடம் பார்த்த நிகழ்வுகளை தொகுத்து எழுதியுள்ளோம். கார் ஓட்டும்போது இதுபோன்ற கெட்ட செயல்களால் உங்களுக்கு மட்டுமல்ல, பிறருக்கும் பெரும் ஆபத்தையும், தொல்லையையும் தரும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். உங்களது அனுபவத்தையும் கருத்துப் பெட்டியில் பகிர்ந்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Here we listed some of the Worst Driving Habits. Take a look.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X