வெற்றி நாயகன் மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றி சுவாரஸ்யங்கள்!

"மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள்"! என்று கூறுவார்கள். திருமணமானவர்களுக்கு மட்டுமல்ல, எந்தவொரு விஷயத்திற்கும் இது பொருந்தும். ஆனால், நம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நெருங்கும் வேளையிலும், மாருதி ஸ்விஃப்ட் மீதான மோகமும், ஆசையும் அதிகரித்திருக்கிறதே தவிர, குறையவில்லை.

இந்திய ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தி, பெஞ்ச்மார்க் மாடலாக வலம் வரும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டுக்கு இருந்து வரும் வரவேற்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த நிலையில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை சமீபத்தில் 13 லட்சம் என்ற புதிய மைல்கல்லை கடந்திருக்கிறது.

அசத்தலான டிசைன், எரிபொருள் சிக்கனம், கையாளுமை, மைலேஜ், விலை என அனைத்திலும் சரிவிகித உணவாக, கார் பிரியர்களுக்கு இருந்து வரும் மாருதி ஸ்விஃப்ட் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 முதல் தலைமுறை மாடல்

முதல் தலைமுறை மாடல்

கடந்த 2000ம் ஆண்டு முதல் தலைமுறை ஸ்விஃப்ட் காரை மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி தனது தாயகமான ஜப்பானில் அறிமுகம் செய்தது. சுஸுகி கல்ட்டஸ் காருக்கு மாற்றாக இந்த புதிய சூப்பர் மினி வகை ஹேட்ச்பேக் கார் மாடலை சுஸுகி அறிமுகம் செய்தது. வெளிநாடுகளில் சுஸுகி இக்னிஸ் என்ற பெயரில் சுஸுகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

எதிர்பாராத வரவேற்பு

எதிர்பாராத வரவேற்பு

ஜப்பானில் சுஸுகி ஸ்விஃப்ட் பிராண்டிலும், வெளிநாடுகளில் சுஸுகி இக்னிஸ் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஹேட்ச்பேக் காரின் இரண்டாம் தலைமுறை மாடல் 2004ம் ஆண்டு பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பிய என்எசிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு 4 என்ற நட்சத்திர தர அந்தஸத்தை பெற்றது. 2005ம் ஆண்டு விற்பனைக்கு வந்த இந்த காருக்கு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை வைத்து விளம்பரப்படுத்தியது. மேலும், ஜப்பான், ஐரோப்பா என அறிமுகம் செய்யப்பட்ட எல்லா மார்க்கெட்டுகளிலும் இந்த காரின் விற்பனை எதிர்பார்த்ததைவிட இருமடங்கு அதிகமானதால், சுஸுகி நிறுவனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனது.

 இந்தியாவிற்கு வந்த ஸ்விஃப்ட்

இந்தியாவிற்கு வந்த ஸ்விஃப்ட்

வெளிநாடுகளில் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்விஃப்ட் காரின் இரண்டாம் தலைமுறை மாடல் 2005ம் ஆண்டு இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் 1.3 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஸ்விஃப்ட் காரை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது.

 டீசல் மாடல்

டீசல் மாடல்

2007ம் ஆண்டு ஃபியட் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்சினை ஸ்விஃப்ட் காரில் பொருத்தி மாருதி சுஸுகி அறிமுகம் செய்தது. அதே ஆண்டில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனையும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய மைல்கல்லை எட்டியது.

புதிய பெட்ரோல் எஞ்சின்

புதிய பெட்ரோல் எஞ்சின்

2010ம் ஆண்டு பிஎஸ்- 4 மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் நாட்டின் முக்கிய நகரங்களில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, ஸ்விஃப்ட் காரில் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக, 1.2 லிட்டர் கே- சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக மாறியது. விற்பனையிலும் பல லட்சங்களை விரைவாக கடந்தது.

 மூன்றாம் தலைமுறை மாடல்

மூன்றாம் தலைமுறை மாடல்

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் வெற்றியை தக்க வைக்கும், போட்டி கார் நிறுவனங்களின் புதிய மாடல்களை சமாளிக்கவும் வடிவமைப்பில் முக்கிய மாறுதல்களுடன், அதே சமயத்தில் ஸ்விஃப்ட் காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு குலைந்துவிடாதபடியும், 2011ம் ஆண்டு புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது முந்தைய மாடலைவிட இன்னும் எடுப்பான தோற்றத்தை கொண்டிருந்தால், வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால், முன்பதிவு பல புதிய உச்சங்களை கடந்து உலகையே திரும்பி பார்க்க வைத்தது. மேலும், கூடுதல் வசதி கொண்ட மாடல் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

விருதுகளை குவித்த மாடல்

விருதுகளை குவித்த மாடல்

கடந்த 2005ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது, அந்த ஆண்டின் சிறந்த கார் விருதை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் பெற்றது. அதேபோன்று, 2011ல் அறிமுகம் செய்யப்பட்ட மாடலும், அந்த ஆண்டிற்கான சிறந்த காரை விருதை பெற்றது. இதுவரை, உலக அளவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட விருதுகளை இந்த கார் குவித்திருக்கிறது.

 மாடல்கள்

மாடல்கள்

முதல் தலைமுறை மாடல் 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், 2005ம் ஆண்டில் சுஸுகி ஸ்விஃப்ட் ஆர்எஸ் என்ற ஸ்போர்ட்ஸ் வகை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதே மாடல் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், ஃப்ரண்ட் வீல் டிரைவ் மட்டுமின்றி, 4 வீல் டிரைவ் மாடலிலும் ஸ்விஃப்ட் கார் விற்பனை செய்யப்படுகிறது.

 விற்பனை சாதனை

விற்பனை சாதனை

விற்பனைக்கு வந்தது முதல் இதுவரை உலக அளவில் 40 லட்சத்திற்கும் அதிகமான ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டு இந்தியாவில் விற்பனையில் ஒரு மில்லியன் சாதனையை ஸ்விஃப்ட் கார் படைத்தது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் இந்த காரின் விற்பனை 13 லட்சம் என்ற புதிய மைல்கல்லை எட்டியது.

உற்பத்தி

உற்பத்தி

ஜப்பான், இந்தியா உள்பட உலகம் முழுதும் 8 நாடுகளில் மாருதி ஸ்விஃப்ட் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. 140 நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

போட்டியாளர்களுக்கு மண்டைக் காய்ச்சல்

போட்டியாளர்களுக்கு மண்டைக் காய்ச்சல்

பழமையான டிசைன் தாத்பரியத்தை நவீனப்படுத்தி வடிவமைக்கப்பட்ட மாடல்தான் ஸ்விஃப்ட். இதன் ரகத்திலான கார் மாடல்களுக்கு இதன் மைலேஜ் பெரும் தலைவலியை தரும் விஷயம். இடவசதி, வசதிகள், குறிப்பாக இதன் கையாளுமை வெகு ஜோராக இருக்கும் என்பது கார் பிரியர்களை வெகுவாக கவர்ந்தது. அனைத்தையும் விட, மிகச்சரியான விலையில் விற்பனை செய்யப்படுவதால், இந்த காரின் விற்பனையை எந்த காராலும் உடைக்க முடியவில்லை. அத்துடன் மாருதியின் விற்பனைக்கு பிந்தைய சேவை, உதிரிபாகங்கள் விலை போன்றவையும் ஸ்விஃப்ட் காருக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

Most Read Articles
English summary
The Maruti Suzuki Swift—one of the best hatchbacks on sale in the Indian market. It is affordable, good looking, easy to maintain and returns a good fuel economy. Well, there are a lot more cool and interesting facts about the Swift. Here they are:
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X