ஹூண்டாய் நிறுவனம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

By Saravana

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக திகழும் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் உலகின் மிகச்சிறந்த பிராண்டுகளில் ஒன்றாக பெயர் பெற்றுள்ளது.

அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வரும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சில சுவாரஸ்யத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 ஸ்தாபிதம்

ஸ்தாபிதம்

1967ம் ஆண்டு தென்கொரியாவை சேர்ந்த சுங் ஜு யங் என்பவரால் துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் சியோல் நகரில் செயல்பட்டு வருகிறது.

பணியாளர்கள்

பணியாளர்கள்

சர்வதேச அளவில் 75,000 நேரடி பணியாளர்களை கொண்ட பெரிய கார் நிறுவனமாக விளங்குகிறது.

விற்பனை

விற்பனை

சர்வதேச அளவில் 193 நாடுகளில் கார் விற்பனை செய்கிறது. உலகின் 4வது பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையும் ஹூண்டாய் நிறுவனத்தையே சாரும்.

உலகின் பெரிய ஆலை

உலகின் பெரிய ஆலை

தென்கொரியாவில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் உல்சான் கார் தயாரிப்பு ஆலைதான் உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு ஆலையாக குறிப்பிடப்படுகிறது. 34,000 பணியாளர்களை கொண்ட இந்த ஆலையில், ஒரு நாளைக்கு 5,400 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு 1.6 மில்லியன் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

தரச் சான்று

தரச் சான்று

2004ம் ஆண்டு ஜேடி பவர் நிறுவனத்தின் தயாரிப்பு தரம் குறித்த சர்வதேச ஆய்வில் ஹூண்டாய் இரண்டாவது இடம் பெற்றது.

 முதல் கார்

முதல் கார்

1968ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கார்டினா என்ற மாடலை ஹூண்டாய் வெளியிட்டது. இதற்கு அடுத்து சொந்தமாக காரை உருவாக்கும் முயற்சியில் இறங்கிய ஹூண்டாய் 1975ம் ஆண்டு போனி என்ற தனது முதல் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான எஞ்சின், டிரான்ஸ்மிஷனை மிட்சுபிஷி மோட்டார்ஸ் வழங்கியது.

போனியாகி சாதனை

போனியாகி சாதனை

அமெரிக்க மார்க்கெட்டில் போனி கார் தரச் சோதனைகளில் வெற்றி பெறவில்லை. எனவே, கனடாவில் மட்டுமே விற்பனைக் கொண்டு செல்லப்பட்டது. கனடாவில் போனிக்கு ஏக வரவேற்பு கிடைத்து. அந்நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை வெகு சீக்கிரத்தில் பெற்றது.

அமெரிக்காவுக்கு புதிய மாடல்

அமெரிக்காவுக்கு புதிய மாடல்

அமெரிக்காவுக்கு புதிய எக்ஸெல் கார் மாடலை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் விற்பனையாகி சாதனைப் படைத்தது எக்ஸெல். வெறும் 7 மாதங்களில் ஒரு லட்சம் எக்ஸெல் கார்கள் விற்பனையாகின. அதேவேளை, 1990களில் ஹூண்டாய் கார்கள் அமெரிக்க மார்க்கெட்டில் மவுசு இழந்தன.

சொனாட்டா

சொனாட்டா

1988ம் ஆண்டு முழுக்க முழுக்க சொந்த தொழில்நுட்பத்தில் சொனாட்டா காரை ஹூண்டாய் தயாரித்தது.

 அங்கீகாரம்

அங்கீகாரம்

உலகின் முதல் சிறந்த 100 பிராண்டுகளில் ஹூண்டாய் நிறுவனமும் ஒன்று.

உலக கோப்பை கால்பந்து ஸ்பான்சர்

உலக கோப்பை கால்பந்து ஸ்பான்சர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதன்மை ஸ்பான்சர்களில் ஹூண்டாய் நிறுவனமும் ஒன்றாக விளங்குகிறது.

ராலி ரேஸ்

ராலி ரேஸ்

2000ம் ஆண்டு சுவீடனின் உலக ராலி ரேஸ் பந்தயத்தில் ஹூண்டாய் அணி களமிறங்கியது.

சிறந்த கார்

சிறந்த கார்

2012ம் ஆண்டின் உலகின் சிறந்த காருக்கான விருதை ஹூண்டாய் எலன்ட்ரா பெற்றது. மேலும், ஹூண்டாயின் புதிய தலைமுறை புளூயிடிக் டிசைனில் தயாரிக்கப்படும் கார்கள் வாடிக்கையாளர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன.

கியா மோட்டார்ஸ்

கியா மோட்டார்ஸ்

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகிறது. கியா நிறுவனத்தில் 32.8 சதவீத பங்கு முதலீட்டை ஹூண்டாய் பெற்றுள்ளது.

 வர்த்தக விரிவாக்கம்

வர்த்தக விரிவாக்கம்

1984ம் ஆண்டு கனடாவிலும், 1986ம் ஆண்டு அமெரிக்க மார்க்கெட்டிலும் அடியெடுத்து வைத்தது. 1996ம் ஆண்டு ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. தற்போது தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், வட அமெரிக்கா, ரஷ்யா, செக் குடியரசு, துருக்கி ஆகிய நாடுகளில் கார் உற்பத்தி ஆலைகளையும், ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்காம மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் ஆராய்ச்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

 இந்தியாவில் மாடல்கள்

இந்தியாவில் மாடல்கள்

இந்தியாவில் ஹூண்டாய் பிராண்டின் முதல் காராக சான்ட்ரோ வெளியிடப்பட்டது. இன்று வரை விற்பனையில் தொடர்ந்து தாக்குப் பிடித்து வருகிறது. இதுதவிர, இயான், கிராண்ட் ஐ10, சான்டா பீ எஸ்யூவி உள்பட 9 கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. கார் ஏற்றுமதியில் தொடர்ந்து இந்தியாவின் நம்பர்- 1 நிறுவனமாக திகழ்கிறது.

Most Read Articles
English summary
Some Fun Facts about Hyundai Motors. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X